Tag Archive: ராஜகோபாலன்

வெள்ளையானை – நமது நீதியுணர்ச்சியின் மீது…: ராஜகோபாலன்

1980-களின் இறுதியில் நான் பள்ளி மாணவனாக இருக்கும்போது ஒரு பேச்சுப் போட்டிக்கு பள்ளி சார்பில் அனுப்பப்பட்டேன். எனக்கு பேச்சினை எழுதித் தந்த தமிழாசிரியர் “அறிஞர் அண்ணா” வெளிநாட்டுப் பல்கலைக் கழகத்தில் எப்படி அவர்களே வியக்கும் வண்ணம் ஆங்கிலத்தில் பேசி டாக்டர் பட்டம் பெற்றார் என்பதை உணர்ச்சிகரமாக எழுதித் தர, நான் அதை விட உணர்ச்சிகரமாக அதைப் பேசி மாவட்டக் கல்வி அலுவலரிடம் பரிசும் பெற்று வந்தேன். இருபது வருடங்களுக்குப் பிறகு, பல வாசிப்புகளுக்குப் பின்னர் தெரிகிறது ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45481

கன்னிப்படையல் பற்றி…

அன்புள்ள ராஜகோபாலன் கன்னிப்படையல் படித்தேன். கதைகள் தரிசனத்தால், கவித்துவத்தால், கூர்ந்த அவதானிப்புகளால் அழகும் ஆழமும் பெறுவதுண்டு. அபூர்வமாகச் சிலகதைகள் அப்பட்டமான நீதியுணர்வாலேயே ஆழம் பெறுகின்றன. மேலதிகமாக எதுவும் தேவைப்படுவதில்லை. உடலில் இருந்து வெட்டி முற்றத்தில்போட்ட சதை போலக் குருதி வழிய அவை கிடக்கும். இது அத்தகைய ஒரு கதை. நீதிமறுக்கப்பட்டவர்களின் கண்ணீர் வரலாறு முழுக்க அதிகாரமுற்றத்தில் விழுந்துகொண்டுதான் இருக்கிறது. அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் என்றார் வள்ளுவர். அபூர்வமாக சில கண்ணீர்த்துளிகள் உலராமலேயே நிரந்தரமாகத் தங்கிவிடுகின்றன. அவைதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36423

வாயுக்கோளாறு பற்றி…

அன்புள்ள ராஜகோபாலன் வாயுக்கோளாறு வாசித்தேன். நல்ல கதை. ஒரு எளியவேடிக்கைக் கதையாக இதை எழுதியிருப்பீர்கள் என்ற எண்ணத்தைத் தலைப்பு உருவாக்குகிறது. ஆனால் மொத்தக்கதையும் ஒரு குணச்சித்திரத்தில் மையம் கொள்ளும்போது கதை மேலே செல்கிறது. கணபதியின் முழு வாழ்க்கையும் மரணத்திலிருந்து தப்புவதற்கான விழைவே. அவரது கல்வி தேடல் எல்லாம் அதுவே. மரணத்தை வாயுவாக்கி வாயுவை வாழ்க்கையாகவும் பிரபஞ்சமாகவும் விளக்கிக்கொண்டு அவர் விரித்துக்கொள்ளும் வாழ்க்கையின் முழுமையான அபத்தம் கதையில் வந்துள்ளது. அதனாலேயே இது முக்கியமான கதை இலக்கியத்தில் மீண்டும் மீண்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36389

புதியவர்களின் கதைகள் 9,கன்னிப் படையல்- ராஜகோபாலன்

“சார்! சார்! மண்டே பெட்டிஷன் பார்ட்டி” – சென்ட்ரியின் குரலைத் தொடர்ந்து மொத்த ஸ்டேஷனும் சட்டென கூர்மையானது. கணேசன் லேசான தயக்க நடையில் உள்ளே நுழைந்தார். வெயிலில் வந்ததால் ஸ்டேஷன் உள்ளே இருந்த இருட்டு இன்னும் கருமையாக கண்ணில் அறைந்தது. சிரமமாய் கண்களை இடுக்கி மனிதர்களைத் தேடினார். எல்லா மேசைகளிலும் போலீசார் கடமையில் இருந்தார்கள். இன்ஸ்பெக்டர் அவரின் இருக்கையில் இருப்பதை கணேசன் பார்த்தார். பழக்கமாகிவிட்ட முறையின் படி இடது மேசையை அணுகி “அய்யாவ பாக்கலாமா இப்ப? ” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36417

ராஜகோபாலன், வாயுக்கோளாறு- கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ இன்று வெளிவந்த ராஜகோபாலனின் வாயுக்கோளாறு கதை வாசித்தேன். ஒரு வழக்கமான விகடன் கதை போலத் தோன்றியது.ஒரு ஜோக்கை கதையாக ஆக்கியதுபோல இருந்தது. ஆனால் பிறகுதான் அந்தக்கதை தொடர்ந்து ஞாபகத்தில் இருந்துகொண்டே இருப்பதை உணர்ந்தேன். அது மிகமுக்கியமான விஷயமாக இருந்தது. அதாவது நாம் வழக்கமாக ஒரு விஷயத்தை கவனிப்போமே அதை இந்தக்கதையிலே கவனிக்கிறோம். அதன்பின்னர் அப்படியே விட்டுவிடுகிறோம். கொஞ்சம் கழித்து யோசிக்கும்போதுதான் இந்தக்கதையிலே நாம் புதியதாகச் சிலவிஷயங்களைக் கவனித்திருக்கிறோம் என்பது நமக்குத் தெரிகிறது ஒருவர் தனக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38122

புதியவர்களின் கதைகள் 5, வாயுக் கோளாறு – ராஜகோபாலன்

வாடிக்கையாளர் ஒருவருடனான சந்திப்பினை முடித்துக் கொண்டு அலுவலகத்துக்குள் நுழைந்த கணமே அந்த வித்தியாசத்தை உணர்ந்தேன்.எனது அலுவலகம் என்பது ஐந்து மாடிகளில் ஒரு மாடியின் பாதியைத் தடுத்து 22 பேருக்கான இருக்கைகளுடன் இயங்கும் ஒரு பிரிவு. வித்தியாசம் அப்படி ஒன்றும் பதட்டப்படும்படியாக இல்லைதான். ஒரு வெற்றுக் குறுகுறுப்பு எனக்கு . எல்லோர் முகங்களிலும் பெரும் சிரிப்பினை செய்து முடித்த களைப்பின் மின்னல். கன்னங்களில் தேங்கிச் சிவந்திருக்கும் நகைப்பு. இன்னும் சிரிப்பினை மிச்சம் வைத்துக் கொண்டு அதற்கான சந்தர்ப்பத்தை உன்னிக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36387

ராஜகோபாலன்

ராஜகோபாலன் காப்பீட்டுத்துறை அதிகாரியாகப் பணியாற்றுகிறார். திருநெல்வேலி அருகே பிறந்தவர். சென்னையில் இப்போது வசிக்கிறார். கட்டுரைகள் எழுதியிருக்கிறார். விஷ்ணுபுரம் பற்றிய கட்டுரை இணையத்தில் வெளியாகியிருக்கிறது. புதுமைப்பித்தனின் கதைகளைக் காலச்சுவடு பதிப்பகத்துக்காகத் தொகுத்து முன்னுரை எழுதியிருக்கிறார் குரு சிஷ்ய உறவு விஷ்ணுபுரத்தை முன்வைத்து விருதுவிழா உரை புதுமைப்பித்தனின் மரணங்கள் ராஜகோபாலன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/36575

நாஞ்சில்நாடன் பாராட்டுவிழா பதிவுகள்

முந்தைய பதிவு திருவண்ணாமலை மூன்றாம் தேதி மதியம் கும்பமுனி சென்னை விஜயம், ஆழ்துயிலில். இரவெல்லாம் இலக்கியம் பேசிய இளைஞர்கள் சிங்கத்தைச் சாய்த்துவிட்டார்கள். பிரதாப் பிளாஸாவில் அறை போட்டோம். மூன்று அறைகள். நானும் முனியும் ஒரே அறையில். நாஞ்சில்நாடன் பெட்டியை திறந்து பொருட்களை எடுத்து விலாவரியாக அடுக்கியபின் சற்றே நிம்மதி அடைந்து ‘என்னத்த ஏற்புரைன்னு இருக்கு ஜெயமோகன். அங்கிண பேசினதையே இங்கிணயும் பேசிப்போடலாம்னு நெனைச்சா அங்க வந்த கும்பலிலே பாதி இங்கயும் வந்திடுது…என்னமாம் தப்பா பேசினா கிருஷ்ணன் வேற கூண்டுலே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11434