Tag Archive: ரவி சுப்ரமணியன்

திருலோக சீதாராம்- கடிதம்

அன்புள்ள திரு ஜெயமோகன் !வணக்கம். திருலோக சீதாராம் பற்றிய தகவல்  வாசித்தேன். பதிவு சரியாக பதிவாகவில்லை. ஏதோ கணினிக் கோளாறு. அந்தப் பதிவில் வெளியாகியுள்ள ஜி டி நாயுடுவுடன் ஆன அரிய புகைப்படம் மிக நன்று.அந்தப் புகைப்படத்தில் கையில் பூ மாலையுடன் இருப்பவர் சேக்கிழார் அடிப்பொடி தஞ்சாவூர் திரு. டி.என். ராமச்சந்திரன். இப்போது 83 வயது. உயர்திரு டி என் ஆர் திருலோகத்திற்குப் பிறகு சிவாஜி பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர்.சிவாஜியின் எல்லாப் பழைய பிரதிகளும் பெரும்பாலும் திரு.டி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87649

விஷ்ணுபுரம் விழா- ரவி சுப்ரமணியம்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2013ல் கவிஞர், ஆவணப்பட இயக்குநர், பாடகர் ரவி சுப்ரமணியம் கலந்துகொள்கிறார் ரவி சுப்ரமணியம் கவிஞராக தமிழில் அறிமுகமானவர். சீம்பாலில் அருந்திய நஞ்சு என்ற வலுவான படிமம் மூலம் கவனிக்கப்பட்டவர். இளமையில் முறையாக இசைப்பயிற்சி பெற்றவர். தமிழிசை மரபை நன்கறிந்தவர். சிறப்பாக பாடக்கூடியவர் ஆனால் அவரது இடம் காட்சி ஊடகத்தில் என்று விதிக்கப்பட்டிருந்ததுபோல. அவரது சாதனைகளாக நினைக்கப்படுபவை தமிழ் இலக்கிய முன்னோடிகளைப்பற்றி அவர் எடுத்த முக்கியமான ஆவணப்படங்கள் வழியாகத்தான். ஜெயகாந்தன், எம்.வி.வெங்கட்ராம்,மா.அரங்கநாதன் ஆகியோரைப்பற்றிய அவரது ஆவணப்படங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42702

எம்.வி.வி நினைவு

நண்பர் ரவி சுப்ரமணியன் எம்.வி.வெங்கட்ராம் பற்றிய அவரது நினைவுகளை எழுதியிருப்பதை அழியாச்சுடர்களில் வாசித்தேன். ஆத்மார்த்தமான நினைவுகள் கொண்ட அழகான கட்டுரை அது. ரவியும் அவரது நண்பர்களும் அமைந்தது எம்.வி.வியை அவரது முதுமையின் சோர்விலிருந்து மீட்டது. நான் சந்தித்த மூன்றுமுறையும் அவர் ரவி, பொதியவெற்பன், பாவை சந்திரன் போன்றவர்களைப்பற்றிப் பேசியிருக்கிறார் கட்டுரையில் காதுகள் நாவலைத் தேடி மீட்டெடுத்த கலியமூர்த்தி பற்றி ஒரு வரி வருகிறது. வெடிக்குரல் கொண்டவராகையால் எம்.வி.வியுடன் அணுக்கமாக, அவருடன் பேசக்கூடியவராக அவர்தான் இருந்தார். ஆசிரியராக இருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31331