Tag Archive: ரம்பன்

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 5

[ 4 ] ஏழடுக்குகளாக ஆழ்ந்துசென்ற ஆழுலகங்களின் இருளுக்குள் ரம்பன் அமிழ்ந்து சென்றான். தன் அரண்மனையின் படுக்கையில் படுத்திருந்து வெளியே மரங்களில் காற்று ஓடும் ஒலியை கேட்டுக்கொண்டிருப்பதாக அவன் ஆழுள்ளம் மயங்கியது. அவனைச்சூழ்ந்து மாநாகங்கள் நாபறக்க நெளிந்தன. எரியும் விழிகளுடன் பாதாளதெய்வங்கள் மிதந்தலைந்தன. பின்பு அவன் சென்று விழுந்த இடத்திலிருந்து மலைபோல பேருடல் கொண்டவனாக எழுந்தான். இருகைகளையும் மார்பில் ஓங்கி அறைந்து இருண்டு சூழ்ந்திருந்த திசைகள் அதிரும்படி பேரொலி எழுப்பினான். அவன் கால்களை எடுத்துவைத்தபோது சூழ்ந்திருந்த உலகின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86114/

’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 4

[ 3 ] ஒவ்வொருநாளும் என மடிந்துகொண்டிருந்த ரம்பனையும் கரம்பனையும் கண்டு சபரர் ஆழ்துயரில் அமைந்தார்.  சூரர் “நாம் செய்வதற்கொன்றில்லை என்றே எண்ணுகிறேன் ஆசிரியரே. அவர்களின் உள்நிறைந்து மண்வந்த ஒன்று தன்னை விடுவித்துக்கொள்ள விழைந்தால் நாம் என்ன செய்ய முடியும்?” என்றார். சபரர் எண்ணச்சுமையுடன் தலையை அசைத்து “அவ்வாறல்ல, இது விழிப்புள்ளமும் கனவுள்ளமும் நுண்ணுள்ளமும் கொள்ளும் ஒத்திசைவின்மை மட்டுமே. ஒரு நோயே இது. இதற்கு மருத்துவமென ஒன்று இருந்தாகவேண்டும்” என்றார். “உள்ளம் என்பது இங்கு மண்ணுடன் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86065/

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 3

[  2    ] அமைச்சர்களும் நிமித்திகர்களும் திகைத்து நிற்க சபரர் “அரசர்களை எடுத்துச்சென்று அரண்மனை மஞ்சங்களில் கிடத்துங்கள்” என்று ஆணையிட்டார். ஒற்றையுடலாக அதுவரை அவர்களைப்பார்த்திருந்த ஏவலர் கைநடுங்கினர். வெட்டுண்டு துடிக்கும் உடலைப்பார்க்கும் உணர்வே அவர்களுக்கு ஏற்பட்டது. “தூக்குங்கள்!” என்று சபரர் மீண்டும் கூவ தலைமை ஏவலன் பிறரை நோக்கி கைகாட்டிவிட்டு ரம்பனின் எடைமிக்க உடலை தூக்கினான். அது உயிருள்ள உடலுக்குரிய நிகர்நிலை இல்லாமல் பல பக்கங்களிலும் அசைந்து சரிந்தது. உள்ளமென்பது உடலில் கூடிய நிகர்நிலையே என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86018/

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 2

பகுதி ஒன்று : சித்திரை முதற்படைக்களத்தில் எழுந்தவளே, நீ யார்? சொல்! உன் பத்து வலக்கைகளில் முப்புரிவேலும், வாளும், அம்பும், வேலும், ஆழியும், வடமும், கேடயமும், உடுக்கையும், மின்னலும் பொலிகின்றன. கீழ்க்கை அஞ்சலென எழுந்திருக்கிறது. தேவி, உன் இடது கைகளில் அரவம், வில், வல்லயம், மழு, துரட்டி, வடம், மணி, கொடி, கதை ஒளிர்கின்றன. கீழ்க்கை அருளலென கவிந்திருக்கிறது. உன் முகம் முடிவிலாது இதழ்விரியும் தாமரை. உன் விழிகளோ ஆக்கும் கனலும் அழிக்கும் கனலுமென இரு அணையா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85975/

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 21

பகுதி நான்கு : அணையாச்சிதை [ 5 ] இமயமலையின் அடியில் கங்கை கரையிறங்கும் ரிஷிகேசமென்னும் நீலநிறக்காட்டில் கட்டப்பட்ட தவச்சாலையில் காசியின் அரசி புராவதி தங்கியிருந்தாள். அவளே அங்குவரும் முடிவை எடுத்தாள். காலையில் தன் ஆயுதசாலையில் பயிற்சியில் இருந்த பீமதேவனை அவளது சேடி பிரதமை சென்று அழைத்துவந்தபோது அவள் அரச உடைகளைக் களைந்து மரவுரி அணிந்து அரண்மனை வாயிலில் நின்றிருந்தாள். பீமதேவன் அவளைக்கண்டதும் திடுக்கிட்டு “எங்கே செல்கிறாய் தேவி? என்ன வழிபாடு இது?” என்றார். அவர் முகத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/44415/