Tag Archive: ரப்பர்

முழுடிக்கெட்!

    நான் 1985ல் லா.ச.ரா எழுதி முத்துப்பதிப்பகம் வெளியிட்ட த்வனி என்னும் சிறுகதைத்தொகுதியை வாங்கினேன். மூன்று ரூபாய் விலை. 1978ல் வெளியானது. முத்துப்பதிப்பக உரிமையாளர் என்னிடம் சொன்னார். ”முந்நூறு பிரதி அடிச்சேன் சார். இன்னும் எம்பது இருக்கு” எனக்கு ஆச்சரியமாக இல்லை. ஏனென்றால் அதற்கு மூன்று மாதம் முன்னால் நாகர்கோயில் ஜெயகுமாரி ஸ்டோர்ஸ் என்னும் புத்தகம் மற்றும் எழுதுபொருள் கடை நகுலனின் நினைவுப்பாதையை வெளியிட்டிருந்ததை நான் வாங்கினேன். நகுலனின் செலவில் வெளியான நூல். நாற்பதுபிரதிகள் பத்துவருடங்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88268

ரப்பர் -கடிதங்கள்

ஆசிரியருக்கு      நேற்று  ரப்பர்  படித்தேன். சற்றே  விலை  குறைவு  என்பதால்  சரியாக  வந்து  சேருமா  என்ற  தயக்கத்துடன்  நியூ  ஹாரிசான் மீடியாவில்  ஆர்டர்  செய்திருந்தேன்.  சனிக்கிழமை  காலை  வந்து  சேர்ந்து  விட்டது.  உடனே  நவீன  தமிழ் இலக்கியம்  அறிமுகம்  ஆர்டர்  செய்தேன்.  உங்களை பார்க்க  வரும்  முன் வந்து  சேராது  என்றே  நினைக்கிறேன்.         பி.கே. பாலகிருஷ்ணன்  குறித்த  உங்கள்  பதிவுக்கு  பின்னர்  படித்ததால்  ரப்பரின்  பின்புலம்  நன்றாகவே  புரிந்தது. கிட்டத்தட்ட  அசோகமித்திரனின்  இன்று  போல  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84524

மன எழுச்சியின் கணம்

ஒவ்வொரு மனித வாழ்வும் எப்படியோ ஆரம்பித்து எப்படியோ முடிந்து விடுகிறது. ஆனால் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் தருணங்கள் மனிதன் கையில் இல்லை. முடிவெடுக்கும் கணத்தில் ஏதோ ஒன்று முடிவை மாற்றிவிடுகிறது. திடீரென வெறுப்பு விருப்பாகவும், வாழ்ந்துதான் பார்ப்போமே என்ற சிந்தனையும் ஏற்பட்டுவிடுகிறது. இந்த இரண்டு கணங்களும் எது? அது அவ்வாறு மனித மனத்தில் நிகழ்கிறது என்பது புரியாத புதிர். அப்படியான ஒரு கணத்தை குழந்தைகள் பலர் ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும் காட்சியில் காண்கிறான் பிரான்ஸிஸ். ரப்பர் பற்றி கேசவமணி

Permanent link to this article: https://www.jeyamohan.in/54949

ரப்பர் என்னும் பயோமெட்டல்

வாழைக்கும் ரப்பருக்கும் உள்ள நிலப்போரட்டமே இந்நாவல். வேண்டுமானால் ஆக்ரமிக்கும், பிற செடி இனங்களை வளரத்தடுக்கும், உயிரினங்களுக்கு இடம்தராத அசுரத்தனத்தை ரப்பர் தன்மை எனவும், கன்றீனும் பெண்மையும் தாய்மையுமானதை வாழைத் தன்மை எனவும் சொல்லலாம். அநீதிக்கு அஞ்சாத,எல்லா நீரையும் ஒளியையும் தானே உண்டு நிலத்தை அமிலமாக்கி உறுதி பட நிற்கும் ரபரின் பாலின் கவர்ச்சியில் அன்றோ நாம் வீழ்ந்து ரப்பராகிறோம். ஆனால் நமக்குள் இன்னொன்றும் உண்டு , பசுங்கன்றை ஒத்தது அது, அது வாழை, அது தாய்மை. இப்பாலில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/44129

ரப்பர் – ஒரு கடிதம்

அன்பின் ஜெ , நலமா? ஒழிமுறிக்கு விருது பற்றிய அறிவிப்பு வாசித்தேன்… வாழ்த்துக்கள். அசடன் வாசித்துக் கொண்டு இருக்கிறேன். இடையில் ரப்பர் எட்டாம் பதிப்பு கிடைத்தது. வாசித்து முடித்தேன். நாவல் ஒரு சமூக இயல் நூலாக விரிகிறது. நீங்கள் ஏற்கனவே கட்டுரைகளில் கூறிய நினைவு. மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையிலிருந்து முன்னேறிய குமரிமாவட்ட கிறிஸ்துவ நாடார்களையும் அவர்களின் ஏமான்களாக இருந்த நாயர்களை சுற்றியும் பின்னப்பட்ட கதை. இதில் இரப்பர் நாடார்களின் எழுச்சிக்கு முக்கிய காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்புக்குட்டி நாயரின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40849

கடிதங்கள்

அன்புள்ள எழுத்தாளருக்கு வணக்கம்! எங்கள் பகுதியில் ஊருக்கு ஒரே ஒரு செல்வந்தர் இருந்த கால கட்டமாக இருந்திருக்க வேண்டும். அவர்களின் ஆணவம், பெருமை, எல்லாமும் மரணப் படுக்கையிலயே வீழ்ச்சி அடைவதைப் பார்க்க எல்லாருமே காத்திருந்தார்கள். பிணம் வீழ்ந்ததும் விமர்சனங்கள் ஆரம்பிக்கும். கவுண்டச்சியின் மனம் வேறொன்றாக இயங்கி வந்திருக்கிறது. அந்த நேரத்தில் மகன் போயிருக்காவிட்டால் அந்த முகம் யாருக்கும் தெரிந்திருக்காத ஒன்றாகவே இருந்து மறைந்திருக்கும். வாழ்க்கையின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முயற்சிப்பதுதானே இலக்கியம்? அந்த வன்மை முகம் கவுண்டரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40024

ஆகாயப்பறவை

1988ல் நான் காசர்கோட்டில் இருந்து வேலைமாற்றலாகி வந்தேன். அதன்பின்னர் அங்கே செல்ல நேரிட்டதில்லை. அந்த நண்பர்களை வேறு இடங்களில் பார்த்துக்கொண்டிருந்தது ஒரு காரணம். இந்தவருடம் காசர்கோட்டுக்குச் சென்றேன். நான் வாழ்ந்த காசர்கோடு பூமியின் மீதிருந்து அழித்துத் துடைக்கப்பட்டிருந்தது. என் கண்முன் இருந்தது வேறொரு நகரம். அந்த காசர்கோடு என் தலைமுறையின் நினைவில் இருக்கக்கூடும். ஒருவேளை நினைவுகள்கூட மாறியிருக்கலாம். காசர்கோட்டில் பழைய தொலைபேசிநிலையத்தின் ஓய்வறைக்குச் சென்றேன். அங்கே இப்போது ஏதோ ஓர் அலுவலகம். அங்கேதான் ரப்பர் நாவலை எழுதினேன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37202

ரப்பர் – கடிதம்

அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு! நாகர்கோயில் சென்று விட்டீர்களா? ஈரோடு புத்தக திருவிழாவில்தான் ரப்பரை வாங்கினேன். உங்களின் முதல் நாவல் என்றாலும் இப்போதுதான் படிக்க முடிந்தது. முதலில் படித்திருந்தால் ரப்பரின் சாரத்தை புரிந்து கொண்டிருப்பேனா என்பது ஐயமாக இருக்கிறது. வலிமையான உயிர்கள் போராடி தம் இருப்பை தக்க வைத்துக் கொள்கின்றன. மனிதனுக்கும் அது பொருந்தும். பெருவட்டரின் வாழ்க்கை அதையே கூறுகின்றது. ஆனால் செல்வம் சேர்ந்த பெருவட்டரின் தோட்டவீட்டில் ஆன்மீக தேடல், இறையின் முன்னால் தன்னை சமர்ப்பித்தல் எதுவும் இல்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38580

புதியவாசகர்களின் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு தங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து ஒன்றரை வருட காலமாக வாசித்து வருகிறேன். பல புதிய புரிதல்கள், நூல்களின் அறிமுகங்கள்,இந்தியா பற்றிய தெளிவு என்று பல வழிகளில் உங்களை வாசிப்பது ஒரு நிறைவைத் தருகிறது நன்றிகள் பல.தங்களின் ரப்பர், ஏழாம் உலகம் மற்றும் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் முதலியவை படித்திருக்கிறேன்.நான்கு வேடங்கள் என்ற தங்களின் கட்டுரை எனக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது என்று சொன்னால் மிகை அல்ல. தற்போது விவேக் ஷன்பேக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38032

ரப்பர்-கடிதம்

வாழ்த்துக்கள் ஜெயமோகன் சார். சமீபத்தில் நான் படித்து முடித்த மூன்று புத்தகங்களில் உங்கள் ரப்பர் நாவலும் ஒன்று. மிகமும் கவனமாகப் படிக்க வேண்டிய தருணம் இந்தப் புத்தகத்தில் நிறையவே இருந்தது. அதே மாதிரி வட்டாரத் தமிழில் சில முக்கியமான வாக்கியங்களும் வருவதால் என் போன்ற மதுரையை சார்ந்தவர்கள் சற்றுப் பின்வாங்க வேண்டிய இடமும் இந்த நாவலில் உண்டு. நிறைய இடங்களை நான் மறுபடி மறுபடி படித்துக் கொண்டே இருந்தேன். திரும்பத் திரும்பப் படித்த பிறகும் கூட பிரான்சிஸ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35158

Older posts «