Tag Archive: ரதன்பூர்

அருகர்களின் பாதை 19 – படான், மேஹ்சானா, மோதேரா

இரவு தங்கிய ஊர் ரதன்பூர் எனக் காலையில் தெரிந்துகொண்டோம். பொதுவாக இந்தப் பயணத்தில் எங்கள் தங்குமிடங்கள் இருவகை. சமண தர்மசாலைகள் பெரும்பாலும். அவை நடுத்தர வசதி கொண்டவை. மெத்தை,கம்பிளிப்போர்வை,சுடுநீர் உத்தரவாதம். சில இடங்களில் கட்டில் இருக்காது. அறைகள் வசதியாகப் பெரியவையாக இருக்கும். பின்பக்கம் சமைக்கவும் வசதி இருக்கும். ஒரு சின்ன ஸ்டவ் கையோடு வைத்திருக்கலாமென ஒவ்வொரு முறையும் தோன்றுமென்றாலும் காலையில் அது என்ன புதிய சுமை என எண்ணம் ஏற்படும். பராமரிப்புச்செலவு என மிகச்சிறிய தொகையை சில …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/24633