Tag Archive: யூத்து

காந்தி இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் காந்தியின் கண்கள் படித்த பிறகு சத்திய சோதனை மீண்டும் படிக்கத் தொடங்கினேன். நீங்கள் சொல்வது மிகவும் சரி. இதை முன்பொரு முறை படித்ததாக நினைவு கூட இல்லை. காந்தி ஒவ்வொரு இடமாக சுற்றி அலைகிறார். வெளி உலகம் மற்றும் அவர் உள்ளுலகம் மெல்ல அவருக்குப் புரிபடுகிறது. ஒரு ஒழுக்க நெறி நோக்கிக் குவிகிற காந்தி பின்பு எப்படி படிப்படியாகக் கனிகிறார் என்று பார்ப்பது அவரது பரிணாம வளர்ச்சி தெரிகிறது. வியப்பாகவும் அதே நேரம் சாதரணமாகவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31285

யூத்து-சிரிப்பு-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், “ஒரு கொடூர எதிர்வினை” என்ற தலைப்பில் நான் உங்களுக்கு எழுதியது, நான் உங்கள் கருத்தை முழுமையாக ஆமோதித்து எழுதிய கடிதம் என்று இத்தனை நாட்கள் நினைத்துக் கொண்டிருந்தேன். எங்கள் யூத்துக்களை நான் கிண்டல் செய்தும், எங்களையே நொந்து கொண்டும் எழுதிய கடிதம் தானே அது ! அதைத் தவறாகப் புரிந்து கொண்டார்களோ என்று ஐயப்படுகிறேன். என் மொழி ஆற்றல் கொஞ்சம் மோசம் தான். iphone 5 இந்தியாவில் ரிலீஸ் கூட ஆகவில்லை என்று நினைத்துதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30973

யூத்து-கடிதங்கள்

மதிப்பு மிக்க ஜெ அவர்களுக்கு, தங்களது யூத்து கட்டுரை படித்தபோழுதே அதை 100% ஆமோதித்திருந்தேன் தெரிவிக்கவில்லை. ஆனால் அதற்கு எந்த வகையான எதிர் வினை வரும் என்பதில் ஆர்வத்துடன் இருந்தேன். கமல் சொல்வது போல மசாலா தேவை என்பதற்காக அல்ல. கோபத்துடன் வரும் கடிதங்களுக்குத் தங்களது இனிய உரை நடை எவ்வாறு பதில் கூறும் என்ற ஆர்வம். இக்கடிதம் சமீபத்திய கனகா, அர்விந்த்(iphone-5) அவர்களுக்கான அர்ப்பணிப்பு. முதலில் கனகா , ஜெ தன்னுடைய முதல் கட்டுரையிலேயே இதில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30789

யூத்து- இரு கடிதங்கள்

அன்பின் மதிப்புமிக்க ஜெயமோகன் சாருக்கு வணக்கம். உங்களை மௌனமாக வாசித்து வரும் வாசகி. உங்களுடைய “யூத்” கட்டுரை படித்தேன். அதற்கு நண்பர் ஒருவரின் கடிதத்தையும் தங்கள் தளத்தில் கண்டேன். பல கருத்துக்களை முழுமையாக ஏற்க முடிகிறது.குறிப்பாக இந்த இடம், “இன்றைய குடும்பம்” என்ற வார்த்தைக்கு சரியான வரையறை. ///நம்முடைய குடும்பங்கள் பெரும்பாலும் சேர்ந்து சமைத்துத்தின்று, உறங்குகிற இடங்கள் மட்டுமே. உறவுகளே கூட சுயநலமும் வன்முறையும் கொண்டவை./// மேலும் பல சுவாரஸ்யமான இடங்கள். அதையும் தாண்டி எனக்கு சில …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30692

நாம் என்னவகை மக்கள்?

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு தங்களுக்கு நான் எழுதும் நான்காவது கடிதம் இது.சமீபத்தில் நான் படித்த தங்களின் “யூத்து” கட்டுரையைப் பற்றி எனது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். தங்களின் சிறந்த படைப்பாக நான் கருதும் காடு நாவலில் இயற்கையின் அழகியலை நீங்கள் வர்ணிக்கும் போதும்,யானை டாக்டரில் தற்கால இளைஞர்களை நீங்கள் சாடும் போதும்,இன்னும் பிற நாவல்களிலும் “யூத்து” கட்டுரையில் வரும் விஷயங்களை நீங்கள் முன்னிலைப்படுத்துவதை கவனித்திருக்கிறேன். நீங்கள் சொன்ன பருந்துப் பாறை இளைஞர் கூட்டத்தைப் போன்ற ஜென்மங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30118

யூத்து- கடிதம்

அன்பு ஜெயமோகன், தங்கள் “யூத்து கட்டுரை” வாசித்தேன். அருமையான கருத்தை அழுத்தமாக சொன்னதற்கு என் நன்றி. இதற்கு முன் சில சமயம் தங்கள் கருத்துக்களோடு நான் மாறுபட்டிருகிறேன். ஆனால் தங்கள் இந்த க் கட்டுரையோடு நான் முழுவதுமாக ஒத்துப் போகிறேன். தங்களைப் போல் மற்ற அறிவார்ந்த மக்களைப் போல் ரசனை இல்லாவிடினும் ஏதோ கொஞ்சம் வாசிப்பும் ரசனையும் மிக்க நான் பல சமயம் இது போன்ற யூத் கூட்டத்தால் நிராகரிகரிக்கப்பட்டிருக்கிறேன். அதனால் நான் இந்த சமுகத்தோடு ஒட்டாதவன் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29147