Tag Archive: யு.ஆர்.அனந்தமூர்த்தி

எஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது

  யு. ஆர். அனந்தமூர்த்தியும் எஸ். எல். பைரப்பாவும் கன்னட மொழியில் இரு துருவங்களாக கருதப்படுகிறார்கள். அனந்தமூர்த்தியின் மேற்கத்திய மனம் சார்ந்த அணுகுமுறையை பைரப்பா கடுமையாக எதிர்ப்பார். (நான் `பார்க்க` நேர்ந்த அனந்தமூர்த்தியின் கட்டுரையன்றில் தலைப்பு உட்பட பக்கத்துக்கு இருபது சொற்கள் நேரடியாக ஆங்கிலத்திலேயே இருந்தன) பைரப்பாவின் மரபு சார்ந்த மனம் சில அடிப்படைத் தரிசனங்களை ஏற்க மறுக்கும் பழமைசார்பு உடையது என்பது அனந்த மூர்த்தியின் பதில். 1990 ல் அனந்தமூர்த்தி சாகித்ய அகாதமிக்கு தலைவர் பதவிக்காக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/189

யு ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’

  யு.ஆர். அனந்த மூர்த்தியின் சம்ஸ்காரா அளவுக்கு மேலைநாடுகளில் புகழ்பெற்ற இந்திய நாவல்கள் முறைவு. காரணம் ஏ.கெ. ராமானுஜனின் சிறப்பான மொழியாக்கம். முதல் மொழியாக்கப்பதிப்பு அமெரிக்காவிலேயே வெளியானமை. பட்டாபி ராம ரெட்டி இயக்க, திரைக்கதையை  அனந்தமூர்த்தியும் கிரிஷ் கர்னாடும் அமைக்க, எடுக்கபப்ட்ட நாவலின் புகழ்பெற்ற திரைவடிவம். ஆனால் உண்மையில் அதுமட்டுமே காரணமா? அல்ல. இந்நாவலின் மையமான நோக்கு முற்றிலும் மேலைநாடு சார்ந்தது. மேலைநாட்டினருக்கு எளிதில் புரிந்துகொள்ளத்தக்கது. ஆர்.கெ.நாராயணன், சல்மான் ருஷ்தி ,அருந்ததி ராய், விக்ரம் சேத் போன்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/226

கோரா- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அண்மையில் தாகூரின் கோரா நாவல் படித்தேன். காந்தியின் சனாதனம் குறித்து நீங்கள் எழுதியிருந்த ஒரு கட்டுரை மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. காந்திக்கும் கோராவுக்கும் சரியாகவே முடிச்சிட்டிருக்கிறீர்கள். அவர்களுடைய பழைமைவாதத்திலும் அந்தக் காலகட்டத்திற்குத் தேவையான ஒரு புரட்சி இருக்கத்தான் செய்கிறது. காந்தியைப் புரிந்து கொள்வதற்குக் கோரா மிகவும் பயன்படுகிறான். நீங்கள் குறிப்பிட்டது போக, மேலும் ஓர் ஒற்றுமை – இருவரும் பழைமையை ஆதரித்துப்பேசிய போதும் அதை முழுக்கப்பின்பற்றவில்லை. கோரா தீண்டாமையைக் கேள்விகேட்காமல் நியாயப்படுத்துகிற வேளையிலேயே, ஏழைகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31502

நோபல் பரிசு இந்தியருக்கு

அன்புள்ள ஜெ, அடுத்த சில ஆண்டுகளில் யாராவது இந்தியருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா? யாருக்கு அத்தகைய வாய்ப்பு அதிகம் உள்ளதாக நினைக்கிறீர்கள்? மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தனுக்கு இருப்பதாகக் கூறப் படுவது உண்மையா? சரவணன் [கெ.சச்சிதானந்தன்] அன்புள்ள சரவணன் சச்சிதானந்தன் இந்தவருடம் சிபாரிசுசெய்யப்பட்டார் என்று கேள்விப்பட்டேன். அவர் நெடுங்காலம் சாகித்ய அக்காதமி செயலர், தலைவர் பொறுப்பில் இருந்தார். உலக அளவில் நூற்றுக்கணக்கான இலக்கிய நிகழ்வுகளில் பங்கெடுத்தவர். அத்துடன் சுயமுன்னேற்றத்துக்காக ஓயாது உழைப்பவர். ஆகவே அவருக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21891

காந்தி,அனந்தமூர்த்தி

ரயிலில் முதல் வகுப்பில் அமர்ந்த காந்தியை வெளியே தள்ளிவிட்டபோது, அவருக்கு வெறுமனே கோபம் மட்டும் வந்திருந்தால் அவர் சாவர்கர் ஆகியிருப்பார். அந்தக் கோபத்தோடு அவருக்கு நம் தேசத்தில் நாமும் மற்றவர்களை அப்படி நடத்துகிறோம் எனத் தோன்றியதால் அவர் காந்தியானார். கோபம் மட்டும் தோன்றியிருந்தால் அது பிரிட்டிஷ்காரர்களோடான கிளர்ச்சிக்கு உபகாரமாகியிருக்கும். தன்னைக் கருப்பன் என வெளியே தள்ளிவிட்டபோது, நாம் பறையன் என்று வெளியே நிறுத்துகிறோமல்லவா என நினைவுக்கு வராதிருந்தால் அவர் காந்தி ஆகியிருக்கமாட்டார். காந்தி பற்றி யு.ஆர்.அனந்தமூர்த்தியின் அற்புதமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21676