Tag Archive: யுவன் சந்திரசேகர்

யுவன் சந்திரசேகர் – விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-3

  யுவன் குறித்து விக்கியில் இருந்து:   இவரது இயற்பெயர் எம்.சந்திரசேகரன். 1960ல் மதுரை சோழவந்தான் அருகே உள்ள கரட்டுப்பட்டியில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு தேநீர்க் கடை நடத்திவந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த சந்திரசேகரன் தன் மூத்த அண்ணாவுடன் வாழ்ந்தார். அவர் யுவன் சந்திரசேகரைவிட இருபது வயது மூத்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படித்த யுவன் சந்திரசேகர் படிப்பு முடிந்ததுமே ராமநாதபுரத்தில் வங்கி ஊழியராக பணியில் சேர்ந்தார். யுவன் சந்திரசேகரின் மனைவிபெயர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128002

புனைவும் புனைவாடலும்

  யுவன் சந்திரசேகரின் ‘வெளியேற்றம்’- அஸ்வத் இந்த எழுத்தாளரின் படைப்பை இப்போது தான் முதன் முதலாகப் படிக்கிறேன். இதற்காக ஜெயமோகனுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.அவருடைய நெருங்கிய நண்பர். யுவனின் குணாதிசயக் கூறுகளை விவரித்து அல்லது நகையாடி ஜெயமோகன் எழுதிய கட்டுரைகளைப் படித்ததில் ஓரளவுக்கு முன் அபிப்ராயத்துடன் தான் யுவனை நான் அணுகினேன். இது எந்த அளவில் என் விமர்சனத்தை பாதிக்கப் போகிறது என்பதை இக்கட்டுரையை படிப்பவர்கள் தான் அனுமானிக்க இயலும். பல ஊர்கள். பல மனிதர்கள். பல தரப்பு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85641

அதே மொழி

சார், சுந்தர ராமசாமி – குரல் கேட்டேன். எனக்கும் இதுவே அவரது குரல் முதல் முறை கேட்கிறேன். அவரது குரல் நான் மிக எதிர்பார்த்திருந்த மாதிரி தான் இருந்தது. நான் கிட்டத்தட்ட அது உங்கள் குரலாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். பெரிய ஏமாற்றமில்லை. சிறு மாற்றங்களுடன் அவரது பேசு முறை உங்களது பேசுமுறையோடு மிகவும் ஒத்துப்போகிறது. என்ன, நீங்கள் பேசுவது வேறு விஷயங்கள். :) ஒருவேளை இது நாகர்கோவிலின், திருவிதாங்கூரின் பொது மொழியாக, அக்ஸண்டாக இருகக்கூடும். ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66358

யுவன் சந்திரசேகரின் வெளியேற்றம் ஒரு மதிப்புரை

சில புத்தகங்கள் ஒரு சில பெயர்களைப்போலே நம் ஞாபக அடுக்குகளில் எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கும், இப்போதில்லை, இப்போதில்லை என்று சில சந்திப்புக்களைத் தவிர்ப்பதைப்போல, சில புத்தகங்களை கையிலெடுத்து விட்டு இப்போதில்ல்லையென தள்ளிவைத்து விட்டு அடுத்த அடுக்குக்கு கை தாவும், ஆனாலும் சதா எண்ணத்தில் தங்கிய படியே இருக்கும். சிறு வயதில் உணவில் மிகவும் பிடித்த காய் கறியை கடைசியாக தட்டில் வைத்துக்கொண்டு சாப்பிடுவோமே அது போல் ஒரு நீண்ட காத்திருப்புக்கு நம்மை தயார் செய்துகொள்ள வைக்கும். அப்படி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61424

சொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்

‘நவீனத்துவ இலக்கியம் அடைந்தது கூர்மையை தவறவிட்டது சுவாரசியத்தை’ என்று ஒருமுறை பேராசிரியர் ஜேசுதாசன் நேர்ப்பேச்சில் சொன்னார். பெரிதும் செவ்விலக்கியங்களில் மனம் தோய்ந்த அவருக்கு நவீன இலக்கியங்கள் மீது விலகல் இல்லாவிட்டாலும் பெரிய மதிப்பு இருந்ததில்லை. அவர் விரும்பிய தமிழ் எழுத்தாளர்கள் ஆரம்பகால சுந்தர ராமசாமி, தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன். அவர்களின் பொதுவான அம்சம் சுவாரசியமே. அவர் சுவாரசியம் என்று சொன்னது செயற்கையான வேடிக்கைகளை அல்ல. அத்தகைய வேடிக்கைகளை எழுதிய எவரையுமே அவர் விரும்பவில்லை. அவரது நோக்கில் சுவாரசியம் என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/472

முச்சீட்டு ஆட்டக்காரனின் கை

மணி அய்யர் தி.ஜானகிராமனிடம் சொன்னதாக சுந்தர ராமசாமி என்னிடம் ஒருமுறை சொன்னது நினைவுக்கு வருகிறது. அவருக்கு மட்டும் பணம் போதுமான அளவுக்கு இருந்திருந்தால் ஒரே ஒரு ராகத்தை மட்டும்தான் பாடியிருப்பார் என்று. அது எந்த ராகம் என்று நினைவில் இல்லை, நான் சங்கீதத்தை எனக்கு அன்னியமான ஏதோ ஆக நினைக்கக்கூடியவன் அன்று. இன்றும்தான். ஆனால் அது கலை என்ற விஷயத்தின் ஆர்வமூட்டும் ஒரு மர்மத்தைக் காட்டுகிறதென இப்போது தோன்றுகிறது. கலைஞர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு சிறிய இடத்துக்குள்ளேயே மேலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37415

கனடா இலக்கியத்தோட்டம் விருதுகள்

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இலக்கியவிருதுகள் சென்ற ஜூன் 16 அன்று வழங்கப்பட்டன. எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது பெற்றார். இலக்கியத்தோட்டம் விருதுகளும் அன்று வழங்கப்பட்டன விருதுகள் 1. இயல் விருது – எஸ்.ராமகிருஷ்ணன் 2. புனைவு – யுவன் சந்திரசேகர் – நாவல் – ’பயணக் கதை’ 3. அபுனைவு – பெருமாள்முருகன் – ‘கெட்டவார்த்தை பேசுவோம்’ 4. கவிதை – தேவதச்சன் – ’இரண்டு சூரியன்’ 5. கவிதை –அனார் – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28277

யுவன் சந்திரசேகருக்கு விருது

கனடாவை மையமாக்கி இயங்கும் இலக்கியத்தோட்டம் அமைப்பின் இவ்வருடத்திய நாவலுக்கான விருது யுவன் சந்திரசேகர் எழுதிய பயணக்கதை என்ற நாவலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. லட்ச ரூபாயும் பாராட்டுப்பத்திரமும் அடங்கிய விருது இது. யுவன் சந்திரசேகரின் நாவல்களின் சிறப்பியல்புகள் என உதிரிக்கதைகளின் தொகுப்பாக அமையும் கூறுமுறை, உரையாடல்களை சுவைபட அமைக்கும் திறன், மனிதவாழ்க்கையின் தற்செயல்களை இணைப்பவை என்று தோன்றும் புதிரான ஒத்திசைவுகளை கவனிக்கும் பார்வை [அதை அவர் மாற்றுமெய்மை என்கிறார்] ஆகியவற்றைச் சொல்லலாம். அவ்வியல்புகள் சிறப்பான கலைத்தன்மையுடன் திரண்டுவந்த நாவல் என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28234

யுவன் வாசிப்பரங்கு

கன்னியாகுமரி அருகே கல்லுவிளையில் அமைந்துள்ள விவேகானந்தா கேந்திரத்தில் அக்டோபர் 7,8,9 ஆம் தேதிகளில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் கவிஞர் யுவன் சந்திரசேகர் கவிதைகள் மீதான வாசிப்பரங்கு நடைபெற்றது. பொதுவாக நவீன கவிதை பற்றிய அரங்குகள் எல்லாமே கவிதை எழுதுபவர்கள் மட்டுமே பங்குகொள்பவையாகவே நடப்பது வழக்கம். கவிதைவாசகர்களைக் கவிஞர்கள் சந்திப்பது அபூர்வம். இது அத்தகைய தருணங்களில் ஒன்றாக இருந்தது. நவீன தமிழ்க்கவிதை கவிஞர்களாலான சிறியவட்டத்துக்குள் தனக்குமட்டுமே என ஒரு சொற்களனை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. அங்கேகவிதைகளுக்குப் பின்புலமாக ஒரு அறிவுத்தளம் உள்ளது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21811

யுவன் கவிதையரங்கு – கன்யாகுமரி – அக் 7,8,9

மேலும் சிலர் தங்குவதற்கான வசதி கிடைத்துள்ளதால் மேலும் 10 நண்பர்கள் கலந்துகொள்ளலாம் . (கவிஞர்கள் தேவதச்சன் , கலாப்பிரியா , சுகுமாரன் , தேவதேவன் இவர்களுடன் யுவன் , ஜெயமோகன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்) கலந்துகொள்ள இந்த படிவத்தை நிரப்பவும் , உங்களை அழைத்து உறுதி செய்கிறோம். (ஊட்டி சந்திப்புக்கான வழிமுறைகள், நிபந்தனைகள் இதற்கும் பொருந்தும் , விவரங்களுக்கு ஊட்டி சந்திப்பு குறித்து) https://docs.google.com/spreadsheet/viewform?hl=en_US&formkey=dDVzWVhFVFhjMl9GNWd2TlNvUlctOEE6MQ#gid=0  

Permanent link to this article: https://www.jeyamohan.in/18785

Older posts «