Tag Archive: யுயுதானன்

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 39

பகுதி 9 : பெருவாயில்புரம் – 2 துவாரகையின் பெருவாயிலை நோக்கிச்சென்ற கற்சாலையை அடைந்ததும்தான் சாத்யகி இரவில் அவன் நெடுந்தூரம் பாதைவிலகிச்சென்றிருப்பதை அறிந்தான். கடலில் இருந்து இடையறாது வீசிய காற்றில் பாலைமண்ணில்போடப்பட்டிருந்த கற்பாளங்கள் மேல் மென்மணல் பரவி மூடியிருந்தமையால் சாலையை அந்திவெளிச்சத்தில் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை. காலையொளி எழுந்தபோது செந்நிறப்புரவியின் தோலில் விழுந்த சாட்டையடித்தடம் போல அது தெரிந்தது. அதன்மேல் புரவி குளம்புகள் புதையாமல் துடிதாளம் எழுப்பி ஓடியது. பாலையில் காலை மிகமுன்னதாகவே எழுந்தது. வானிலிருந்து கசிந்துபரவிய மெல்லிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72633