Tag Archive: யா தேவி! [சிறுகதை]

யா தேவி, ஆனையில்லா, பூனை -கடிதங்கள்

  யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை] சக்தி ரூபேண! [சிறுகதை] அன்புள்ள ஜெ,   யாதேவி சிறுகதையில் எல்லா தன் உடலையே தான் என உணர்கிறாள். உடலை உடல் எனக் காணுதலைப் பற்றி தாங்கள் அம்பேத்கரின் பௌத்தம் கட்டுரையில் எழுதி இருந்தீர்கள். மனிதனின் முதல் பெரும் மாயம் தன் உடலைத் தான் என உணர்வது. எல்லா தன் உடலை வெறுக்கிறாள் அதன் வழியாகத் தன்னையும், ஸ்ரீதரன்  அவள் உடலைக் கடந்து, அவளைக் காண்கிறான். அவள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130393

யாதேவி கதைகள் -கடிதங்கள்

யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை] சக்தி ரூபேண! [சிறுகதை] அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, யாதேவி , சர்வ ஃபூதேஷு இரண்டு கதைகளையும் கடந்த இரண்டு வாரங்களில் வாசித்து ஓரோர் வாரம் மனதில் ஓடவிட்டு களித்திருந்து தொடர்ந்து வாசித்த கதை சக்தி ரூபேண. முதல் இரண்டு கதைகளுக்கும் மாறாக பெரும் உளச்சோர்வை அளித்தது எல்லாவின் முடிவு அவள் காணாமல் போகும் போதே தெரிந்து விட்டது(செய்தி ஏற்கனவே தெரிந்திருந்ததால்) கதையின் முடிவிற்காக தொடர்ந்து படித்தேன். ஆனால் கதையின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130360

யாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்

யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை] சக்தி ரூபேண! [சிறுகதை] அன்புடன் ஆசிரியருக்கு   மூன்று கதைகளையும் தொடர்ந்து வாசித்தேன். ஆகவே இவற்றை ஒரே கதையாக கருதலாம் என்று எண்ணுகிறேன். முதலில் இக்கதையில் ஒரு பாலியல் பட நடிகை இருக்கிறார். தமிழ் கதைகளில் நிறைய பாலியல் தொழிலாளிகள் வந்திருக்கின்றனர். அவர்களை மனிதாபிமானத்துடனும் புரட்சிகரமாகவும் கரிசனத்துடனும் ஏக்கத்துடனும் எனப் பல வகைகளில் தமிழ் இலக்கியம் எதிர்கொண்டுவிட்டது. ஆனால் எல்லா பாலியல் தொழிலாளி அல்ல. பாலியல் திரைப்படங்களில் நடித்தவள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130359

யாதேவி- வாசிப்புகள், விளக்கம்

யா தேவி! [சிறுகதை] அன்புள்ள ஜெயமோகன், யா தேவி! சிறுகதைக்கு வரும் கடிதங்கள் திகைப்பூட்டுகின்றன. என் வாசிப்பு தவறானதோ தோன்றுகிறது. என் புரிதல், அந்தப்பெண், மருத்துவனை மற்ற ஆண்களைப்போல் எண்ணி முதலில் என்னை தொடாதே என்கிறாள்.  ஆனால் அவன் பெண் உடலுக்கு மயங்காதவன் என்று தெரியவரும் போது அவனைத்தூண்டி தன் உடலை அனுபவிக்குமாறு வேண்டுகிறாள்.  அவன் மீண்டும் மறுக்கவும், ஆயிரக்கணக்கான ஆண்களால் விரும்பப்படும் பெண் எனும் அவளது அகங்காரம் சீண்டப்பட, அதை ஒரு அவமதிப்பாக உணர்கிறாள். இறுதியில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129980

யாதேவி-கடிதங்கள் 15

யா தேவி! [சிறுகதை] அன்புள்ள ஜெ, யா தேவி சிறுகதை கடிதங்கள் அதைப் பலவேறு கோணங்களில் நுணுகி அலசிவிட்டன.  மறுவாசிப்பு செய்யும் போது இன்னொரு பகுதி புலப்பட்டது.  கதையின் ஓட்டத்தில் பல நுண்ணிய ஆயுர்வேதக் குறிப்புகள் உள்ளதைக் கவனிக்க முடிகிறது.  ஆயுர்வேதத்தின் உன்னதம் பல இடங்களில் நிலை பெறுகிறது.  குறிப்பாக பாதங்களில் முடியும் நரம்பு முனைகளில் மீட்டுவதன் மூலம் பல நோய்களிலிருந்து விடுபட முடியும் என்பது இந்திய மரபு மருத்துவத்தின் மகத்துவம். மேலும் நஞ்சாகிய உணவு மற்றும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130001

யாதேவி!- கடிதங்கள்-14

  யா தேவி! [சிறுகதை] அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ‘யா தேவி’ பல்வேறு வாசிப்பு சாத்தியங்களைக் கொண்ட கதை. இக்கதையில் வெறும் உரையாடல் மூலமாகவே ‘எல்லா’வின் பாத்திரம் மிக அழகாக unfold ஆகிறது. ஸ்ரீதரனைப் பற்றி வரும் வர்ணனைகள் (அவனின் காலடியோசை எவருக்கும் கேட்காது போன்றவை கூட) கதையைப் புரிந்து கொள்வதில் முக்கியமான pointers. வார்த்தைகள் துளி கூட மிகாத lean-ஆன படைப்பு. ஒவ்வொரு வார்த்தையும் ஒரு purpose-க்காக போடப்பட்டுள்ளது. அவளைப் போன்றே இருக்கும் பொம்மைகள்-பெண் போன்றே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129976

யா தேவி – விமர்சனங்கள்-13

    தனது உடலை ஓர் ஆண் தொடக்கூடாது என நிபந்தனையாக்கும் ’எல்லா ஆன்ஸெல்’ என்னும் பிரெஞ்சுக்காரிக்கு முன்னால், தனது மருத்துவ முறையின் நுட்பங்களை – செயல்படும் நுணுக்கங்களைச் சொல்லி ஏற்கச் செய்யும் ஸ்ரீதரப்பொதுவாளின் பேச்சுதான் கதை, ஆயுர்வேத மருத்துவனான தன்னால் அவளின் உடல் நோயை மட்டுமல்ல; உளநோயையும் குணப்படுத்த முடியும்; அதையும் தாண்டி எதிர்கால வாழ்க்கையையே திசைதிருப்பிவிட முடியும் என்பதைத் தீர்க்கமான நம்பிக்கையோடு முன்வைக்கிறான். தன்னுடைய மருத்துவம் அனுபவ மருத்துவம் என்பதைத் தாண்டி, யாதுமாகி நிற்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129977

யாதேவி – கடிதங்கள் 12

யா தேவி! [சிறுகதை] அன்புள்ள ஜெ,   சில சிறுகதைகள் உங்களால் மட்டுமே எழுத முடியும். யா தேவி அவ்வகைப்பட்டது. மிக மிக எளிமையான கட்டமைப்பு. இரு கதாபாத்திரங்களின் உரையாடல். மிக மிக மென்மையான, நொய்மையான உணர்வுகள் பேசப்படுகின்றன. ரயிலில் கதையும் இவ்வகை கட்டமைப்புடையதே. ஆனால் அங்கே பேசப்பட்டவை மிகத் தீவிரமான உணர்வுகள். இங்கே ஒரு மாதிரி மரத்துப் போன உணர்வுகள் பரிமாறப்படுகின்றன. நாட்பட்ட பழக்கத்தால் மரத்துப் போனவை. அன்ஸாலுக்கு மட்டுமல்ல, ஸ்ரீக்கும் கூடத்தான்.   இச்சிறுகதையின் மையமே இப்புடவியனைத்தும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129876

யா தேவி- கடிதங்கள்-11

  யா தேவி! [சிறுகதை] அன்புள்ள ஜெ   நலம்தானே?   யாதேவி கதையைப் பற்றி எத்தனையோ பேர் எழுதிவிட்டார்கள். உங்கள் கதைகளுக்கு இது ஒரு சிறப்பு. எல்லா கோணங்களும் படிக்கப்பட்டுவிடும். கவனிக்காமல் போகாது. ஆனால் என்ன சிக்கல் என்றால் இத்தனை பேசப்பட்டபின் சிலசமயம் கதையில் ஒன்றும் காண்பதற்கே இல்லையோ என்று தோன்றும்   ஆனால் உங்கள் கதைகளை கொஞ்சநாள் கழித்து படிக்கும்போது அதுவரை பேசப்படாத ஒன்றை நான் புதிதாகக் கண்டடைகிறேன். இந்த அனுபவம் எனக்கு பல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129855

யா தேவி- கடிதங்கள்-10

யா தேவி! [சிறுகதை]   அன்புள்ள ஜெ   நலம்தானே?   யாதேவி, மற்றும் வந்துகொண்டிருக்கும் கடிதங்களை வாசித்தேன். எல்லா கோணங்களிலும் வாசித்துவிட்டார்கள். ஆனாலும் வாசிப்பதற்கு கொஞ்சம் மிச்சமிருந்துகொண்டே இருக்கிறது. அதுதான் உங்கள் கதைகளின் சிறப்பு என்பது   எனக்கு ஒன்று தோன்றியது. வழக்கமாக நான் வாசிக்கும் தமிழ் கதைகள் இரண்டு வகையானவை. பெரும்பாலான கதைகள் மரபை மீறுகிறோம் என்று ஒரு சவால்தன்மையுடன் எதிராக எழுதப்பட்டிருக்கும். ஒழுக்கம், செண்டிமெண்ட்ஸ் எல்லாவற்றையும் ரிவர்ஸ் செய்திருப்பார்கள். இன்னொரு வகை கதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129854

Older posts «