Tag Archive: யாழ்ப்பாணம்

ஒரு கடலோர மரம்

நண்பர் செல்வம் கனடாவில் இருக்கிறார். காலம் என்னும் புலம்பெயர்ந்த இதழின் ஆசிரியர். கனடாவில் தமிழிலக்கியச் செயல்பாடுகளின் மையம் போன்றவர் அவர். எண்பதுகளில் தமிழகத்திலிருந்து வெளிவந்த பாலம் என்னும் சிற்றிதழுடன் தொடர்புகொண்டிருந்தவர். 2000-த்தில் நான் அவரது இல்லத்தில் தங்கியிருந்தேன். அப்போது அவரது தாயாரும் அவருடன் இருந்தார். முதிர்ந்த வயது. ஆங்கிலம் தெரியாது. யாழ்ப்பாணத்தின் கடலோரத்தைச் சேர்ந்தவர். நான்கு நாட்களுக்குப் பின்னர்தான் தயக்கம் விலகி என்னிடம் பேசினார். பேசத் தொடங்கியதும் தன் அலைக்கழிப்புகளையும் துயரங்களையும் சொல்லிக்கொண்டே இருந்தார். அவரது பிரச்சினை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/46352

கற்பழித்ததா இந்திய ராணுவம்?

அன்புள்ள ஜெ, நான் இந்திய ராணுவத்தில் 28 வருடங்களாக கர்னலாக பணியாற்றி ஓய்வுபெற்றவன். பல்வேறு விவாதத்துக்குரிய விஷயங்களில் உங்கள் நன்கு சமன்செய்யப்பட்ட கருத்துக்களை வியந்து கவனித்து வருபவன் சமீபத்தில் உங்கள் கட்டுரைகளில் ராணுவங்கள் கூட்டான பெரும் கொள்ளை மற்றும் கற்பழிப்புகளில் ஈடுபடுவதைப்பற்றி நீங்கள் எழுதியிருப்பதை வாசித்தேன். அதெல்லாம் கடந்தகாலத்தில் உண்மையாக நிகழ்ந்திருக்கலாம், ஆனால் அவை இப்போது அவ்வளவு சாதாரணம் அல்ல. நவீன ராணுவங்கள் எல்லாம் முப்பதுபேர் கொண்ட பிளாட்டூன் எனப்படும் அடிப்படை சிறுகுழுக்களால் வலுவாகக் கட்டப்பட்டவை. லெஃப்டினெண்ட் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27320