Tag Archive: யாமன்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை –80

பகுதி ஒன்பது : கலியன்னை ஆதன் முதற்புலரியிலேயே விழித்துக்கொண்டான். அவன் ஒரு கனவு கண்டான். விழித்தும் அக்கனவிலேயே இருந்தான். மீண்டும் அதிலேயே மூழ்கினான். அதில் அவன் ஒரு செம்மண்சாலையினூடாக நடந்து சிற்றூர் ஒன்றை நோக்கித் திரும்பும் சிறிய பாதையைக் கண்டு தயங்கி நின்றான். பின்னர் அந்த ஊரை நோக்கி திரும்பினான். மரக்கூட்டங்களுக்குமேல் எழுந்து தெரிந்த குன்றின் முடியை புதர்களுக்கு அப்பாலிருந்து மெல்ல தலைதூக்குவதாகவே எண்ணினான். மிகப் பெரிய ஒரு விலங்கு. அவன் அதையே நோக்கிக்கொண்டிருந்தான். அதை முன்னரே கண்டிருக்கிறோம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129779/