Tag Archive: யாப்பு

யாப்பு

[நகைச்சுவை]   அந்நாட்களில் குழந்தைகள்மேல் பெரியவர்களின் வன்முறையைத் தடுப்பதற்கான சட்டங்கள் இல்லையாதலால் எட்டாம் வகுப்பிலேயே யாப்பிலக்கணம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள். துடிப்பான பையன்களாக இருந்தோம். தமிழய்யா ஏசுஞானமரியதாசன் அவர்கள் இடைவேளையில் மோதகம் தின்று டீ குடித்துவிட்டு புன்னகையுடன் வகுப்புக்கு வந்து சாக்குக்கட்டியால் கரும்பலகையில் “யாப்பு” என்று எழுதி அடிக்கோடிட்டதுமே சிரிப்பு ஆரம்பம். எங்கள் பள்ளியில் இயல்பாகப் புழங்கி வந்த ஒரு சொல்லுக்கும் அதற்கும் அரைக்கணமே வேறுபாடு. “லேய் என்னலே சிரிப்பு, மயிராண்டி. செருப்பால அடிச்சி தோல உரிச்சிருவேன்.சிரிப்பு… …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/310

கையும்தொழிலும்-கடிதங்கள்

மும்பை சென்ற புதிதில், கார வகைகளை பேக் செய்யும் இயந்திரங்கள் கண்டு வியந்தேன். பாரம்பரிய உணவு வகைகளை உருவாக்கி விற்கும் நிறுவனம் என்றாலும், அதைப் பேக் செய்ய இருந்த இயந்திரங்கள் நவீனமாக இருந்தன. ஐந்து வருடங்களில் அவர்கள் 7 இயந்திரங்களை வாங்கியிருந்தார்கள். அவற்றைத் திறந்து பார்த்த போது, மூன்று தலைமுறை இயந்திரங்கள் இருந்தன. ப்ளாஸ்டிக் பவுச்களை, சீல் செய்ய, வெறும் mechanical jaws கொண்ட முதல் தலைமுறை இயந்திரம். mechanical jaws களை இயக்க, காற்றழுத்தம் உபயோகிக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30570

கையும் தொழிலும்

அன்புள்ள ஜெயமோகன் , இன்று மீண்டும்  யாப்பு கட்டுரை வாசித்தேன். மரத்தினை செதுக்கி செதுக்கி உருவம் கொண்டு வருவது போல் கட்டுரை இருந்தது. கடைசியில் காடு அய்யர் போல தமிழாசிரியர் வந்து என் மனதில் நின்று விட்டார் .இது போன்ற மனிதர்களை எனக்கு மிகப் பிடிக்கும் .இவர்கள் எந்த அபத்தங்களிலும் அதிலுள்ள அற்புதங்களை மட்டுமே காண்பவர்கள்.இந்த மனது கிடைத்தால் போதும் ,எந்த இடத்திலும் எந்த நிலையிலும் சந்தோசமாக வாழ்ந்திடலாம் உப்பு புளி அகப்பை என்றால் என்னவென்று தெரியவில்லை.என் பெரியம்மா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30209

பக்திமரபு-கடிதங்கள்

பக்திப்பாடல்மரபு  திரு ஜெயமோகன் அவர்களுக்கு, பல கட்டுரைகள் மூலம் உங்களுடைய சமய வெறுப்பை (குறிப்பாக, சைவ சமயம் ) வெளிப்படுத்துகின்றீர்கள். கதைகள், கட்டுரைகள் எனப் பலவழிகளில். இம்முறை, நகைச்சுவை என கூறி சமய பக்தியை ஏளனம் செய்து உள்ளீர்கள். இறைவனின் மீது உள்ள பக்தி, உங்களுக்கு ஏளனமாகத் தெரிகின்றதா? உண்மையான பக்தன், அவனுடைய தெய்வத்திடம் எதுவும் வேண்டுவதில்லை. பிறப்பு இறப்பு அற்ற நிலையைத்தான் அவன் தன் தெய்வத்திடம் தூய பக்தியின் மூலம் வேண்டுகின்றான். உங்களின் வறட்டு எண்ணத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29869

யாப்பு மென்பொருள்

கடைசியில் யாப்பை ஒரு மின்னணு வாய்ப்பாடாக ஆக்கிவிட்டார்கள் ! யாப்புவகையைப் பிரித்துப்பார்ப்பதற்கான மென்பொருள் http://www.virtualvinodh.com/avalokitam இப்படியே தமிழ்ப் புதுக்கவிதைக்கும் ஒன்று செய்தால் நல்லது ஜெ

Permanent link to this article: https://www.jeyamohan.in/20773

சில கவியியல் சொற்கள்

கவிதையைப்பற்றி பேசும்போது பொதுவாக நாம் மனப்பதிவுகளை நம்பியே பேசுகிறோம். அதுவே இயல்பானது, நேர்மையானது. ஆனால் அதில் புறவயத்தன்மையை நம்மால் உருவாக்க முடிவதில்லை. ஏனென்றால் நம்முடைய அனுபவம் எப்போதுமே நம்முடைய அக அனுபவமாகவே எஞ்சி நிற்கிறது. கவிதையைப்பற்றிய கோட்பாடுகளும் கலைச்சொற்களும் கவிதையை புறவயமாக பேசுவதற்கு உதவியானவை என்றவகையில் மிக முக்கியமானவை.. அவற்றை நம் வரையில் தெளிவாக வரையறுத்துக்கொள்வதென்பது கவிதையைப்பற்றிய எந்த பேச்சும் வெறும் பேச்சாக அமையாமல் தடுக்கும் இன்று நாம் கவிதையைப்பற்றி பேசும் பெரும்பாலான பேச்சுக்கள் மேலைக்காவிய இயலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9322