Tag Archive: யானை டாக்டர்

காட்டை வெல்வது

அன்புள்ள ஜெ, நலமா, அறம் தொகுப்பிலுள்ள அத்தனைக் கதைகளும் நன்றாக இருக்கிறதென நண்பர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். குறிப்பாக “ஒருவன் தன் வாழக்கை முழுவதையும் புரிதலுக்காக பலி கொடுக்காவிட்டால் இதுபோன்ற ஒரு கதையை எழுத முடியாது” என்று “யானை டாக்டர்” பற்றி என் நண்பர் ஒருவர் விசேஷித்துச் சொன்னார். நானும் முதலில் தேர்ந்தெடுத்து வாசித்தது “யானை டாக்டர்” கதையைத்தான். மிகச் சாதாரணமாக பக்கங்களை கடந்துபோகையில் சராசரி வாசகர்கள் சாதாரண விஷயங்களைத்தான் கொண்டாடுவார்கள் என்ற எண்ணம் மேலிடுவதைத் தவிர்க்க முடியாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/49002

படைப்புகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு, கடந்த 5 வருடமாக நான் உங்களின் வலைத் தளத்தைப் படித்து வருபவன், உங்களின் ரப்பர், கன்னியாகுமரி, காடு, ஏழாம் உலகம், அறம், கொற்றவை, இன்றைய காந்தி, அனல்காற்று, நாவல், மற்றும் உங்களின் சில சிறுகதைகளைப் படித்துள்ளேன், இருந்தாலும் “விஷ்ணுபுரம்” நாவல் வாங்குவதற்குக் கொஞ்சம் தயக்கம் இருந்தது ஏன் என்றால் (உங்களுடைய புத்தக வெளியீட்டு விழாவில் திரு. ஜெயகாந்தன் அவர்கள் “விஷ்ணுபுரம்” நாவல் அதன் கதவுகளை சாத்திக் கொண்டது, என்னால் உள்ளே செல்ல முடியவில்லை என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37193

கடிதங்கள்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, நான் இடையில் பத்து ஆண்டுகள் தமிழ் நூல்கள் படிக்காமல் இருந்து மீண்டும் ஆரம்பித்தேன். நண்பர்களிடம் கேட்டபோது யானை டாக்டர் படிக்கச் சொன்னார்கள். இணையத்தில் பதிவிறக்கிப் படித்தேன். என்ன ஒரு அனுபவம்! கதையில் தெறித்த உண்மை, இறுதியில் அது ஒரு நிஜ மனிதனின் கதை என்பதில் என்னைக் கலக்கி விட்டது. யானைகள் குறித்த எனது பார்வை மாறிப் போனது. அதன் பின் அறம் முழுப் புத்தகமும் வாங்கிப் படித்தேன். மூழ்கிப் போனேன். சர்வதேசக் குடிமகன், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35833

புனைவை வரலாறாக்குதல்…

அன்புள்ள ஜெயமோகன், உண்மை மனிதர்களைப் பற்றிய உங்கள் புனைகதைகள் பலவற்றை வாசித்திருக்கிறேன். முதன்முதலாக யானை டாக்டர் கதையை தமிழினியில் வாசித்தபோது அதை ஒரு கட்டுரை என்றே நினைத்து வாசித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் சிலகாலம் வனத்துறை அதிகாரியாக வேலை செய்தீர்கள் என்று வேறு நினைத்துக் கொண்டேன். ‘புண்படுதல்’ பதிவில் நகைச்சுவை என்று கொட்டை எழுத்துக்களில் போடுகிறேன் என்று சொல்லியிருந்தது போல சிறுகதை என்று அதில் கொட்டை எழுத்துக்களில் போடாததால் வந்த வினை! டாக்டரின் ஆளுமையால் கவரப்பட்டு அவரைப் பற்றி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30954

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, திலகனின் சில படங்களைத் தமிழில் பார்த்திருக்கிறேன். கிளிப்பேச்சு கேட்கவா, ஆயுதபூஜை போன்றபடங்களில் அவரது நடிப்பு அசாத்தியமானது. கிளிப்பேச்சு கேட்கவா படத்தில் வெறுப்படைந்த அப்பாவாக நடிக்கும் இடங்களும், ஆயுதபூஜையில் ஒருகை இழந்த வில்லனாக அவர் செய்யும் வில்லத்தனங்களும் மறக்கவே முடியவில்லை. இதையும் தாண்டி ஒரு முறை டிவி சானல்களை வேகமாகத் தாவிச் செல்கையில் ஒரு மலையாள சானலில் பூஜை ஒன்று நடந்துகொண்டிருக்கும் அதை கவனித்துக் கொண்டிருக்கும் திலகன். இதுதான் காட்சி, அதில் நெஞ்சைத் தடவியபடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30949

யானை-ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ, நலம் தானே? கடந்த வாரம், மேகமலை சென்றிருந்தேன். வாய்ப்பு அமையும் போதெல்லாம் பயணம் செல்வதின் ஒரு பகுதி. யானைகளைக் காணும் வாய்ப்பினை எதிர்நோக்கி இருந்தேன். காணக் கிடைக்கவில்லை. ஆனால் பயணம் முழுதும் யானை பற்றிய நினைவாகவே இருந்தது. மேகமலை பேரூராட்சி தங்குமிடத்தின் எதிரில் இருந்த ஆற்றில் நீரை ஒட்டி இருந்த பாறை, யானை நீர் குடிப்பது போன்ற பிரமையைத் தோற்றுவித்தது. தூரத்தில், தேயிலைத் தோட்டத்தின் பின்னால் நின்றிருந்த மரத்தின் முறிந்து காய்ந்து காற்றில் அசைந்தாடிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30199

யானைடாக்டர் – ஒலிவடிவம்

வணக்கம். யானை டாக்டர் எனும் சிறுகதை வாசித்த போது, பிடித்தது. இதற்கு ஒலி வடிவம் தந்தால் என்ன, என சிந்தித்து முயன்றிருக்கிறேன். கேட்டு விட்டு தங்கள் கருத்துக்களை சொன்னால் மகிழ்வேன்…. http://www.lpspeak.blogspot.in/2012/06/blog-post_11.html தங்கள் அன்புக்கு நன்றிகள்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/28020

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார், இந்தத் தொலைபேசி உரையாடல் ஒரு சிறு கதையைப் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டது. தங்களின் ஆகச்சிறந்த ஒரு நேர்காணலாகவே இதை பார்க்கிறேன். பெரும்பாலான் உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள் தாங்கள் என்ன வரையப்போகிறோம் என்ற திட்டமிடுதலின்றியே தங்களின் படைப்பை தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் மேம்பட்ட அனுபவங்களின் அனிச்சையான பகிர்வே அந்தப் படைப்புகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அன்புடன், இளம்பரிதி மதிப்புமிக்க ஆசிரியருக்கு, நீங்கள் எழுதிய “யானை டாக்டர்” “முராத்தியின் பீர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27978

யானைடாக்டர் – ஒரு கட்டுரை

வணக்கம் ஜெ. நலமா? http://www.vallinam.com.my/issue42/rajamranjani.html வல்லினத்தில் ராஜம் ரஞ்சனி எழுதிய கட்டுரை நவீன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/27906

புனைவு, முழுமை

உங்களின் “நவீன தமிழிலக்கிய அறிமுகம்” நூல் மூலமாகவும், உங்களின் இணைய தளத்தில் உள்ள இலக்கிய கட்டுரைகளின் வழியாகவும் கற்றுக்கொண்டதில் புதுக்கவிதையை குழப்பமில்லாமல் ஓரளவிற்கு வாசிக்க முடிகிறது. சற்று குழப்பமாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கும் போது அதை என் அனுபவம் சார்ந்து புரிந்துகொள்ள முடிகிறது. கவிதைகள் சில பல வார்தைகளில் இருப்பதால் தொடர்ந்துபடிப்பதன் மூலம் அதில் உள்ள படிமம், குறியீடு போன்ற விசயங்களையும் கண்டுகொள்ள முடிகிறது. ஆனால் சிறுகதை, நாவல் போன்று பக்கம் பக்கமாக வாசிக்கும்போது மொழிக்குறிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27554

Older posts «

» Newer posts