Tag Archive: யானைடாக்டர்

அட்டைகள்

மலையாளத்தில் பாஷாபோஷினி ஆண்டுமலரில் வெளிவந்த யானைடாக்டர் குறுநாவலை பத்து பதிப்பகங்கள் வெளியிடவிருக்கின்றன. மாத்ருபூமி பதிப்பு வெளிவந்துவிட்டது. மதிப்புரைகளும் பாராட்டுரைகளும் கொட்டிக் கொண்டிருக்கின்றன. ஒரு சேவை நிறுவனமான சைக்கிள் புக்ஸ் வெளியிட்டுள்ள எளிமையான முகப்பு ஓவியம் என்னை மிகவும் கவர்ந்தது. நூறுநாற்காலிகள் இருபதுக்கும் மேற்பட்ட பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் அட்டைகளை பார்க்கையில் அதிலிருக்கும் வேறுபட்ட வாசிப்புகள் ஆச்சரியமூட்டுகின்றன. தொடக்கத்தில் அந்நாவல் நாற்காலிகளின் கதையாக வாசிக்கப்பட்டு மெல்ல அன்னையின் கதையாக ஆகிவிட்டதைக் காணமுடிகிறது. யானை டாக்டர் எடுத்த எடுப்பிலேயே யானைக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/99831

யானை வணிகம்

அன்பான ஜெயமோகன் யானைடாக்டர் பற்றிய கடிதங்களை வாசித்தேன் யானைத் தந்த வியாபாரம் பற்றிய குறும்படம். உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். http://www.lastdaysofivory.com/ ரவிச்சந்திரிகா

Permanent link to this article: https://www.jeyamohan.in/68851

யானைடாக்டரும் யானைகளும்

ஜெ சிலநாட்களுக்கு முன் ஒரு புத்தகம் படித்தேன். அது ஒரு கானியல் நிபுணர் எழுதியது -as he claims. அதில் யானைடாக்டர் கதையை கண்டபடி வசைபாடியிருந்தார். யானையெல்லாம் ஒருபோதும் அதில் வருவதுபோல ஆட்களை நினைவில் வைத்திருக்காது, ‘சிகிழ்ச்சை’க்காகத் தேடிவராது, அதெல்லாம் வெறும் கற்பனை என்றும் மக்களை முட்டாளடிக்கும் புராணம் என்றும் எழுதியிருந்தார். சரமாரியாக வசை இந்துவில் இந்தக்கட்டுரையை வாசித்தால் யானைடாக்டர் கதைக்கு பெரிய ஆதாரங்களை தருவதுபோல இருக்கிறது. யானையின் புத்திசாலித்தனம் இன்னும் அதிகம் என்று சொல்வதுபோல தோன்றுகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63184

கோட்டியும் கேயும்

அறியாமை, இயலாமை, முயலாமை, சுயநலம் மற்றும் அலட்சியம் ஆகியவையே மனிதர்களின் இத்தகைய நடத்தைக்கான காரணமாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் தாண்டியும் அவ்வப்போது நல்லவை நடப்பது யானைடாக்டர், பூமேடை போன்ற நல்ல மனிதர்கள் காலந்தோறும் தோன்றியபடி இருப்பதால்தான். அவர்களை நாம் அடையாளம் காணாவிடினும், அங்கீகரிக்காவிடினும் முடிந்தவரை புறக்கணிக்காமல் இருக்க வேண்டும் என்பதையே இக்கதைகள் நம்மை சிரம் தாழ்த்தி வேண்டிக் கொள்கின்றன. – See more at: http://kesavamanitp.blogspot.in/2014/08/blog-post_16.html#sthash.X0gSJfod.dpuf கேசவமணி விமர்சனம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/60449

யானைடாக்டரும் பைரனும்

அன்பின் ஜெ , கடந்த இரு மாதங்களாகவே வாசிப்பு எதுவுமின்றிக் கழிந்தது ,வாங்கி சேர்த்த நூல்கள் பத்திற்கு மேற்பட்டவையாகிவிட்டது.உணர்சிகரமான கதையாக இருந்தால் இதமாக இருக்குமென எண்ணி ‘காடு’ வாசிக்க தொடங்கினேன்.முதல் இருநூற்றி ஐம்பது பக்கங்கள் கடந்துவிட்டேன்,முடித்து விட்டு எழுதுகிறேன்.இந்த வார விகடனில் இயக்குனர் சசி தங்களின் ‘யானை டாக்டர் ‘ ஐ மேற்கோளிட்டு எழுதியிருந்தார்,நான் யானை டாக்டர் படித்து ஒரு வருடம் ஆகியிருக்கும்,காடு படித்துக் கொண்டிருப்பதனலோ என்னவோ சற்று முன் படித்து விட்டு எழுதுகிறேன். இந்த முறை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35965

கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் , நான் கோவையை சார்ந்த இயந்திரவியல் துறை சார்ந்த நிறுவனத்தில் வடிவமைப்புப் பொறியாளர் (Design Engg Mechanical ). சில வாரங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவரின் மூலம் தங்களது அறிமுகம்… வலைத்தளத்தில் யானை டாக்டர்,அனல் காற்று,பின் சில கட்டுரைகள் எனப் படித்ததில்,எனக்குத் தற்போதுதான் (உண்மையான )இலக்கிய அறிமுகம் ,என்பது சித்தமாகிறது….அடுத்தடுத்த நாட்களில் “இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்’, படித்து முடித்தேன் ….. என்னைப் போன்ற இளம் வாசகனுக்குக் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது தங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35597

மொழியாக்கத்துக்கு ஓர் அமைப்பு

அன்பின் ஜெ எம்., நல்ல தமிழ்ப்படைப்புக்களை[கவிதை,சிறுகதை,குறுநாவல்,நாவல்] வலை ஏற்றுவது, அவற்றை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்வது, இந்திய மொழியின் தரமான படைப்புக்களைத் தமிழில் மொழியாக்கம் செய்து அளிப்பது இன்னும் மொழியாக்கம் செய்தாக வேண்டிய தரமான படைப்புக்களைச் சுட்டிக் காட்டுவது ஆகியவற்றோடு அயல் மாநிலங்களிலும் அயல்நாடுகளிலும் வாழும் -தமிழ் எழுத்தை வாசிக்க அறியாத அடுத்த தலைமுறையினரின் வசதிக்காகக் குறிப்பிட்ட படைப்புக்களை ஆங்கில எழுத்து வடிவில் தமிழ் ஒலிபெயர்ப்பாகத்-transliteration-தருவது என அனைத்தும் அடங்கிய அடங்கிய ஆய்வுத் திட்டம்ஒன்றை ugc உதவியுடன் நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29263

ஆப்ரிக்க யானைடாக்டர்

அன்புள்ள ஜெயமோகன், இந்த மின்னஞ்சல் எனக்கு வந்தது. இதன் உள்ளடக்கம் எனக்கு யானைடாக்டரின் இறுதிப்பகுதியை நினைவூட்டியது. அதை உங்களிடம் பகிர விரும்பினேன் அன்புடன் ராகவ் அன்புள்ள ராகவ் செய்திக்கு நன்றி யானைடாக்டர் வெளிவந்தபோது சிலர் அதிலுள்ள நிகழ்ச்சிகள் சாத்தியமா என்றெல்லாம் எழுதியிருந்ததை வாசித்திருக்கிறேன். செந்நாய்களுடன் டாக்டர் பழகுவதையும் யானைகள் கடைசியில் தேடி வருவதையும் சுட்டிக்காட்டித் தாங்களறிந்த தகவல்களைக்கொண்டு அவை சாத்தியமேயில்லை என்று கருத்துச்சொல்லி நிபுணத்துவத்தைக் காட்டிக்கொண்டார்கள் உண்மையில் அப்போதே நான் லாரன்ஸ் ஆண்டனியின் நூலை வாசித்திருந்தேன். என்னுடைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28880

யானைடாக்டர்-குழந்தைகளின் படங்கள்

அருமையான படங்கள். நானும் பள்ளிப் பருவத்தில் பல ஓவியப் போட்டிகளில் பங்குபெற்றிருக்கிறேன். எங்கும், இத்தனை படைப்பூக்கத்தை ஒரே இடத்தில் கண்டதில்லை. அபாரமான திறமையும் கற்பனையும் காட்சி அமைப்பும் கொண்ட படைப்புகள். கதைகள் தரும் கற்பனையும் மனவிரிவும் அதிகம் தான். படங்கள் காட்டிக் கதை சொல்வதிலிருந்து கதை சொல்லிப் படம் வரையச் செய்வதும், படைப்பூக்கத்தைத் தூண்டும் நல்ல உத்தியாகப் படுகிறது. நன்றி அனு. ஜெ, வாளியில் நீரை மொண்டு குளிக்கும் யானை, மிகப்பெரிய நீர்நிலையைத் தன் அகத்தில் எண்ணி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23556

ஊமைச்செந்நாய்- ஒருகடிதம்

அன்பின் ஜெயமோகன், நான் பா.சரவணன் – ஒரு மென்பொருள் பொறியாளன். கடந்த 4 வருடமாக உங்கள் எழுத்தை வாசிக்கிறேன். தங்களின் அரசியல் என்றும் எனக்கு ஏற்பானது அல்ல என்றாலும், ஒரு உச்சகட்ட கலை வெளிப்பாடு கொண்ட உங்கள் புனைவுகள் மற்றும் அபுனைவுகளில் ஒரு வாசகனாய் மனஎழுச்சி கண்டிருக்கிறேன். அநேகமாக 2007 -இல் இருந்து தொடர்ந்து வாசிப்பதில், உங்கள் எழுத்துகள் வாசிப்புக்கு நேர்மையாய் இருந்துள்ளன(நேர்மறையாகவோ/ எதிர்மறையாகவோ). தங்களின் இயற்கை குறித்த பதிவுகள் எனக்குள் பல திறப்புகளை ஏற்படுத்தி உள்ளன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22354

Older posts «