Tag Archive: யானை

தீராத விளையாட்டுப் பிள்ளை

அன்புள்ள ஜெயமோகன், வெண்முரசின் மிகச்சிறந்த விஷயம் என்று நான் நினைப்பது யானைகளையும் குதிரைகளையும் பற்றிய வர்ணனைதான். எப்போதுமே நீங்கள் யானைகளைப்பற்றி எழுதுவதில் வல்லவர். விஷ்ணுபுரத்தில் வரக்கூடிய அங்காரகன் என்ற யானைகளை என்னால் மறக்கவே முடியாது. அதேபோல வீரன் என்ற யானைகொல்லப்படும் இடமும் அற்புதமானது. வெண்முரசு மகாபாரதத்தின் tragic gait ஐ நோக்கி போய்க்கொண்டிருப்பதனால் யானைகள் பெரிய கதாபாத்திரங்கள் கிடையாது. ஆனாலும் காலகீர்த்தி என்ற யானைத்தாய் கம்பீரமாகச் சாகும் இடம் ஒரு அற்புதம். உபாலன் இறந்து அதை புதைக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58166

யானை-ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ, நலம் தானே? கடந்த வாரம், மேகமலை சென்றிருந்தேன். வாய்ப்பு அமையும் போதெல்லாம் பயணம் செல்வதின் ஒரு பகுதி. யானைகளைக் காணும் வாய்ப்பினை எதிர்நோக்கி இருந்தேன். காணக் கிடைக்கவில்லை. ஆனால் பயணம் முழுதும் யானை பற்றிய நினைவாகவே இருந்தது. மேகமலை பேரூராட்சி தங்குமிடத்தின் எதிரில் இருந்த ஆற்றில் நீரை ஒட்டி இருந்த பாறை, யானை நீர் குடிப்பது போன்ற பிரமையைத் தோற்றுவித்தது. தூரத்தில், தேயிலைத் தோட்டத்தின் பின்னால் நின்றிருந்த மரத்தின் முறிந்து காய்ந்து காற்றில் அசைந்தாடிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30199

யானைக்கறி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். யானைப்பலி கட்டுரையைப் படித்த மனக்கலக்கமே இன்னமும் தீரவில்லை. அசாம் காடுகளிலுள்ள தண்டவாளப்பாதைகளில் அடிபட்டு இறக்கும் யானைகள் ஒருபக்கம், தங்களின் வாழ்விடத்திற்குள் யானை புகுந்துவிட்டதென அதைத் தாக்கும் மக்கள் மறுபக்கம். உண்மையிலேயே யானைகளுக்கு மிகவும் சிக்கல்தான். இதோ இந்தச் சுட்டியைப் பாருங்கள். யானைகள் உணவிற்காகவும் கொல்லப்படுகின்றன. மனிதனின் அடாவடித்தனத்திற்கு அளவேயில்லாமல் போய்விட்டது. தங்களது நேரத்திற்கு மிக்க நன்றி. பாலா http://www.occupyforanimals.org/elephant-meat.html அன்புள்ள பாலா, கேள்விப்பட்டிருக்கிறேன். ஆப்ரிக்கப் பின்னணி கொண்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27215

யானைப்பலி

திருவிழாவில் யானை மிரள்வது என்பது கேரளத்தின் முக்கியமான கேளிக்கை நிகழ்ச்சி. எந்தத் திருவிழாவையும் யாரோ ஒருவர் ‘அய்யோ, ஆனை வெரெண்டே’ என்ற ஒற்றைவரிக் கூச்சலைக்கொண்டு கலக்கிவிடலாம். நானெல்லாம் சின்னவயதில் குறைந்தது நான்குமுறையாவது அப்படி குடல்பதறி ஓடிவந்ததுண்டு. ஒரேஒருமுறை உண்மையிலேயே யானை மிரண்டது. மஞ்சாலுமூடு பகவதியம்மன் கோயிலில். முதுகில் சாமியுடன் சென்றுகொண்டிருந்த பாறசால கேசவன் சட்டென்று நின்றுவிட்டது. பாகன் என்ன செய்தாலும் நகரமாட்டான். பாகன் சட்டென்று துரட்டியை எடுத்து அதன் காதில் செருகி இழுத்தான். கேசவன் பாகனை துதிக்கையால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26696

நயினார்

‘காந்திமதி’யின் கொட்டடிக்கு அருகிலேயே மாட்டப்பட்டிருக்கும் ஓவியம் ஒன்றில், நயினார் பிள்ளை தாத்தாவுடன் இணைந்து ‘குட்டி யானை நயினார்’ நின்று கொண்டிருக்கும். மனபிரமைதான் என்பது அறிவுக்குத் தெரிந்தாலும், மனதுக்குள் ‘சும்மாயிருக்கியா மக்கா’ என்று நான் தொட்டு உறவாடி, விளையாடிய நயினார் என்னிடம் கேட்பதாகவே உணர்கிறேன். யானை பற்றிய எந்தச் சித்தரிப்பையும் நான் விரும்புவேன். நண்பர் சுகா சொல்வனம் இதழில் எழுதியிருக்கும் இந்தக்கட்டுரை சமீபத்தில் வாசித்த அழகிய சித்தரிப்பு.

Permanent link to this article: https://www.jeyamohan.in/25356