Tag Archive: யாகூப் மேமன்

தாக்கரேவும் மேமனும்

அன்புள்ள ஜெயமோகன், மேமன் விவகாரத்திற்கு முன்பாக வேறு சில விஷயங்களிலிருந்து ஆரம்பிக்கிறேன். நீங்கள் கூறிய ‘Reader’s Edition” பற்றி சமீபத்தில் நினைவு கொள்ள நேர்ந்தது. Alan Ryan என்பவரின் 2-வால்யூம் “Politics” மிகவும் பிரசித்தி பெற்ற சமீபத்திய புத்தகம். பழங்கால கிரேக்க சமூகம் முதல் இன்றுவரை அரசியல் சிந்தனைகளின் தொகுப்பு அது. இப்போது அந்தப் புத்தகத்திலிருந்து சில தேர்ந்தெடுத்த சிந்தனையாளர்கள் பற்றி (Marx, Aristotle etc) Readers Edition என்று சொல்லத் தக்க எளிதில் படிக்கக் கூடிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78023

மேமன் -மேலும் கடிதங்கள்

ஜெ இணையத்தில் உங்கள் கட்டுரைக்கு இந்த எதிர்வினையைக் கண்டேன் * இதில் ஒன்றைச்சொல்லுங்கள் ஜெயமோகன் அவர்களே, ///யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு நிகழ்ந்த பரபரப்பு என்பது ஊடகங்களால் திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று. /// ///எந்த ஒரு தூக்குத்தண்டனையும் கடைசிநிமிடப் பரபரப்புடன் மட்டுமே நிகழும். ஏனென்றால் இந்தியாவின் சட்ட அமைப்பு அளிக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளவே குற்றவாளியின் வழக்கறிஞர்கள் முயல்வார்கள். ஒரு தூக்குத்தண்டனைகூட விலக்கல்ல./// http://www.jeyamohan.in/77977#.VdhaciWqp-Q ஏதாவது ஒன்றைச் சொல்லுங்கள் மிஸ்டர் ஜெயமோகன். இதில் எது சரி? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78007

யாகூப் கேள்விகள்

எதிர்பார்த்தது போலவே யாகூப் மேமன் பற்றிய கடிதங்கள். பெரும்பாலானவை தங்களை சட்டவல்லுநர்களாகவும் அரசியல் நுண்ணறிவாளர்களாகவும் நியமித்துக்கொண்டு மயிர்பிளக்க முயல்பவை. இவற்றுக்கு எந்தப் பொருளும் இல்லை. நாம் முதலில் சாதாரண குடிமக்கள். ஊடகங்கள் கொண்டு வரும் செய்திகளை வைத்துக்கொண்டு நம் பொதுப்புத்தியாலும் நீதியுணர்வாலும் முடிவெடுக்க வேண்டியவர்கள். அந்த நிலையில் நின்றுகொண்டு பேசுவதே உசிதமானது. நான் பேசுவது அப்படித்தான். ஒரு பொதுப்புத்திப்பார்வையில் சாமானியனுக்கும் தெரியும் உண்மைகளைப்பற்றி மட்டும்தான். கேள்விகள், பதில்கள், கடிதங்கள் என நீட்டிச்செல்ல விரும்பவில்லை. சென்றால் இந்த இணையதளமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77962

யாகூப்பும் இஸ்லாமியரும்- ஒரு கடிதம்

ஜெமோ சார் , இது உங்களுக்கு நான் எழுதும் இரண்டாவது கடிதம். உங்களுடைய எழுத்துக்களை தொடர்ந்து படித்து வருபவன் நான். உங்கள் “யாகூப் மேமன் என்னும் தேசநாயகன் ” என்ற பதிவை படித்தேன். வேதனையும் , மன உளைச்சலும் அடைந்தேன். யாகூப் மேமன் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதை பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை. அதை பற்றி அவர் மன சாட்சியே அறியும். அவர் அதற்கு இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும். இஸ்லாம் மரண தண்டனையை எதிர்க்கவில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77977

யாகூப் கடிதங்கள்

அன்புள்ள ஜெ, உங்கள் ‘நண்பர்’ அரவிந்தன் கண்ணையன் எழுதிய மறுப்பை வாசித்தீர்களா? அப்துல்கலாம் பற்றி அவர் எழுதியதற்கு நீங்கள் பதிலளிப்பீர்கள் என நினைத்தேன் செல்வா அன்புள்ள செல்வா, இதில் என்ன ஐயம். அவர் நண்பர்தான். யாகூப் மேமனுக்கு ஆதரவாகப் பேசுபவர்களில் 1. தூக்குத்தண்டனை எதிர்ப்பாளர்கள் 2. பொதுவாகவே எப்போதும் அரசு என்னும் அமைப்பை எதிர்க்கும் கலகநோக்குள்ளவர்கள் 3. இந்தியாவின் இன்றைய அரசு இந்துத்துவச் சார்புள்ளது என உண்மையில் நம்புபவர்கள் ஆகியவர்களின் குரல் எழுவதை புரிந்துகொள்கிறேன். ஜனநாயகத்தில் எல்லாவற்றுக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77966

யாகூப் மேமன் என்னும் தேசநாயகன்

ஜெ, ஃபேஸ்புக்கில் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் இப்படி எழுதியிருந்தார். எனக்கு உண்மையில் இந்தத்தகவல்கள் பெருத்த ஆச்சரியத்தை அளித்தன. நானும் இந்திய ஊடகங்கள் திரும்பத்திரும்பச் சொல்வதுபோல இந்திய நீதிமன்றங்கள் இஸ்லாமியர்களை வேண்டுமென்றே தண்டிப்பதாகவே நினைத்துக்கொண்டிருந்தேன். என்ன ஆதாரம் என்று இதுவரை கேட்கத்தோன்றவில்லை. வேதனையாக இருந்தது சென்னை ரயில் குண்டுவெடிப்பு போன்ற வழக்குகள் நீதிமன்றங்களில் பல்லாண்டுகளாக முழுமையாகவே முடங்கிக் கிடக்கின்றன என்று பி. ஏ .கிருஷ்ணன் எழுதியிருந்ததை வாசித்தேன். தீர்ப்பளித்த நீதிபதிகளை தீவிரவாதிகளுக்கு காட்டிக்கொடுக்கும் ஊடகங்கள் இருக்கும் சூழலில் அவர்கள் என்னசெய்யமுடியும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77891