பன்னீராயிரமாண்டுகாலம் பிரபாவன் விண்முகில்கள் மேல் அலைந்தது. மழையும் வெயிலும் மீளமீள வந்துசென்றன. நிகழ்ந்தவற்றின் தடமின்றி எஞ்சுவதே விண் என்று பிரபாவன் உணர்ந்தது. எனவே விண்ணில் எதுவும் நிகழ்வதேயில்லை என்று தெளிந்தது. ஒன்றுபோல் மறுநாள் அமையும் அப்பெருவிரிவின் அலையற்ற காலத்தை அதன் சித்தம் உணர்ந்தது. தன் சிறகுகளால் அக்காலத் தேங்கலை அசைக்கமுடியும் என்று கண்டுகொண்டது. சிறகசைவை எண்ணி காலத்தை கணக்கிடத் தொடங்கியதும் தயங்கியபடி பிரிவின்மையிலிருந்து முக்காலம் சொட்டி வடிந்து அதை வந்தடைந்தது. அதன் ஊசலில் முடிவிலாது ஆடியது பிரபாவன். …
Tag Archive: யமபுரி
Permanent link to this article: https://www.jeyamohan.in/107438
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 21
[ 29 ] இருள் நூற்றுக்கணக்கான கைகளாக அர்ஜுனனை ஏந்தி நழுவவிட்டு கீழே செலுத்தியது. கருங்குவியலென கூடி மொய்த்து எழுந்தமைந்த எலிகளின் அலை விரிந்து சிதற அவன் உள்ளே விழுந்தான். அவனைப் புதைத்து மூடி கொப்பளித்தது எலிப்பரப்பு. விலக்கி எழுந்து விழுந்து மூழ்கி மீண்டும் எழுந்து நீந்திச் செல்லும்போது அவன் முகங்களை கண்டான். ஒவ்வொரு முகமும் அவனை உடல் விதிர்க்கச் செய்தது. ‘இவரா? இவரா?’ என்று பதைத்து மூழ்கி எழுந்தான். ‘இவர்கள் இங்கென்றால்?’ என்று கொந்தளித்தான். எலிகள் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/92044
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 9
பகுதி இரண்டு : அலையுலகு – 1 கங்கைக்கரையில் நீர்வெளிநோக்கி சற்றே நீட்டி நின்றிருந்த பாறையின்மேல் காலையிளவெயிலில் சுஜயனை தன் மடிமேல் அமரச்செய்து அவன் மெல்லிய தோள்களை கைகளால் தடவியபடி மாலினி சொன்னாள் “அவ்வாறுதான் பார்த்தன் அறிவிழி கொண்டவனானான். மானுடவிழிகள் புற ஒளியால் மட்டுமே பார்ப்பவை. அவன் விழிகள் அகஒளியாலும் பார்க்கும் வல்லமை கொண்டவை.” சுஜயன் தலையை தூக்கி அவள் கன்னங்களை தன் கையால்பற்றி திருப்பி “நான்… நான்… எனக்கு?” என்றான். “உனக்கு என்னடா செல்லம்?” என்றாள் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/78920