Tag Archive: யக்‌ஷவனம்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 12

[ 14 ] யக்‌ஷவனத்திலிருந்து பதினெட்டுகாதம் தொலைவிலிருந்த அஸ்வபக்ஷம் என்னும் சோலை நடுவே நீர் நிறைந்திருந்த அஸ்வபாதம் என்னும் சுனைக்கு புலரியெழும் வேளையில் அர்ஜுனன் வந்தான். தனது வில்லையும் அம்புகளையும் அங்கிருந்த பாறை மேல் வைத்துவிட்டு சேறு வழுக்கிய சுனை ஓரம் மெல்ல நடந்து நீர்நுனி அலையும் விளிம்பை அடைந்து குனிந்து அள்ளி முகம் கழுவிவிட்டு அருந்துவதற்காக மீண்டும் ஒருமுறை நீரை அள்ளியபோது சுனைநீர் கொப்பளித்து அலையெழுந்து வந்து அவன் கால்களை நனைத்தது. வியந்து அவன் விழிதூக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/91766

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 11

[ 12  ] யக்‌ஷவனத்திலிருந்து வில்லுடன் கிளம்பிய அர்ஜுனன் எங்கும் நில்லாமல் புரவிகளிலும் படகுகளிலுமாக பயணம்செய்து மூன்றாம்நாளே சப்தஃபலத்தை சென்றடைந்தான். அச்சிற்றூரைச்சுற்றி மண்குவித்து எழுப்பப்பட்டிருந்த சிறியகோட்டைவாயிலில் அவனை காவலர்தலைவன் சதமன் தடுத்தான். சதமனை நன்கறிந்திருந்த அர்ஜுனன் திகைப்புடன் “என்ன செய்கிறீர்? நீர் என்னை அறியமாட்டீரா?” என்றான். “எவராயினும் நிறுத்துக என்று எனக்கு ஆணை, பாண்டவரே” என விழிதிருப்பி சதமன் சொன்னான். சினத்தை அடக்கியபடி  “நான் இளைய யாதவரை பார்த்தாகவேண்டும், இப்போதே” என்று அர்ஜுனன் சொன்னான். “அவர் எவரையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/91746

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 10

[ 9 ] இளைய யாதவரைப் பார்ப்பதற்காக தன் பன்னிரு மாணவர்களுடன் காலவர் காட்டிலிருந்து கிளம்பினார். உசிநாரத்தைக் கடந்து திரிகர்த்தத்துக்குள் நுழைந்து வாரணவதம் சென்று ஏழு சிந்துப்பெருக்குகளைத் தாண்டி யாதவ நிலத்திற்குள் நுழைந்தார். சப்தஃபலம் என்னும் யாதவச் சிற்றூரில் இளைய யாதவர் தங்கியிருப்பதை அறிந்து அங்கு சென்றார். செல்லும் வழியிலேயே இளைய யாதவரைப் பற்றிய செய்திகளை கேட்டறிந்தார். தமையனுடன் கொண்ட பூசலாலும் யாதவ குடிப்போர்கள் அளித்த கசப்பாலும்  உளம் நைந்த இளைய யாதவர் அங்கு கராளசிவத்தை பூசனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/91737

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55

ஒன்பதாம் காடு : யக்‌ஷவனம் [ 1 ] இருபக்கமும் அடர்ந்த காடு சீவிடுகளின் ரீங்காரமாகவும் காற்றோசையாகவும் குரங்கு முழக்கங்களாகவும் பறவைக் கலைவொலிகளாகவும் சூழ்ந்திருக்க நடுவே வகுந்து சென்ற காட்டுமாடுகளின் கால்களால் உருவான பாதையில் பாண்டவர்கள் சென்றனர். உச்சிப்பொழுதுவரை தருமன் ஒருசொல்லும் உரைக்காமல் தலைதூக்கி நோக்காமல் நடந்துகொண்டிருந்தார். இளையோரும் திரௌபதியும் அவரைத் தொடர்ந்து சென்றனர். அவர்களின் காலடியோசைகள் இருபக்கமும் பட்டு எதிரொலித்துவந்து சூழ்ந்தன. உச்சிவெயில் தெரியாமல் தலைக்குமேல் தழைப்புக்கூரை மூடியிருந்தது. காலோய்ந்ததும் அவர்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்தனர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/90396

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 18

பகுதி ஆறு: 2. நெருப்பரவம் அணைதல் ஆயர்குல மங்கையரே, கேளுங்கள். அன்றொருநாள் அனலெழுந்த கோடையில் கருக்கொண்ட காராம்பசுவொன்றை கருநாகமொன்று தீண்டியது. அன்று நான் உங்களைப்போல் கன்னியிளநங்கை. நாகத்தின் நஞ்சேற்று நீலம் படர்ந்து சினை வயிறெழுந்து செங்குருதி வழிந்து கிடந்த பசுவையும் நஞ்சுப்பாலருந்தி நெற்றியில் விழிசெருகி நாக்கு நெளியக் கிடந்த கன்றையும் கண்டு ஆயர்க்குலமே சூழ்ந்து நின்று கூவி அழுதது. கன்றையும் பசுவையும் குழியமர்த்தி நீரூற்றி நெறிசொல்லும் முறையாவும் செய்தபின் எந்தை சொன்னார் “ஆயர்களே, இனியொருகணமும் இங்கிருக்கலாகாது. கருநாகம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61127