Tag Archive: மொழி [சிறுகதை]

துளி, மொழி- கடிதங்கள்

மொழி [சிறுகதை]   அன்புள்ள ஜெ, ‘மொழி’ சிறுகதை வாசித்தேன். “எல்லாச் சொல்லும் பொருளற்றவையே” என்று தொல்காப்பியர் மாற்றிப் பாடியிருக்கவேண்டுமா என்ன? அனந்தன் பேசுவதை முதலில் வாசித்தபோது கொச்சையான மலையாளத்தில்தான் பேசுவதாக நினைத்தேன். கொஞ்சநேரம் கழித்துத்தான் அது யாருமறியாத பாஷை என்று புரிந்தது. குமாரன் நாயர் வேறு “மலையாளம் இவ்வளவு கேவலமாவாட்டே இருக்கும்” என்கிறார். அந்த வார்த்தைகளைப் புரிந்துகொள்ளக் கொஞ்சம் முயற்சி செய்தேன். கதவை ‘ராட்டிலு’ என்கிறான் அனந்தன். (அல்லது அது கொண்டியைக் குறிக்கும் சொல்லா?) அதேபோல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130446/

மொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]   அன்புள்ள ஜெ   வானில் அலைகின்றன குரல்கள் ஒரு பெருமூச்சை அளித்த கதை. அதற்கு ஒரு காரணம் உண்டு. மறைந்த என் தந்தை திரு வீரராகவன் அவர்கள் ஆடிட்டராக இருந்தவர். ஒரே ஒரு பழைய சினிமாவில் ஒரே ஒரு காட்சியில் அவர் இருக்கிறார். மேனேஜர் உள்ளே இருக்கார் என்று நாகேஷ் சொல்வார். கதவைத்திறந்து அங்கே என்ன சத்தம் என்று இவர் கேட்பார். மௌலி இயக்கிய பழைய படம். அவருடைய ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130454/

மொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை] அன்புள்ள ஜெ   வானில் அலையும் குரல்கள் தொழில்நுட்பம் சார்ந்த ஓர் உலகத்தை அறிமுகம் செய்கிறது. கதையை தொடக்கத்திலேயே அந்த மனம்பிறழ்ந்த மனிதரிலிருந்து தொடங்கியதனால்தான் கதைக்குள் செல்லமுடிகிறது. ஒரு உயர்தொழில்நுட்ப உலகில் மனம்பிறழ்ந்த மனிதர் என்பதே ஒரு விசித்திரமான கதைதான்   தோட்டானின் உலகில் என்ன நிகழ்கிறது என்று கதையிலே சொல்ல்ப்பபடவே இல்லை. அது முழுக்கமுழுக்க வாசகனின் ஊகத்துக்கே விடப்படுகிறது. அவர் ஆரம்பத்தில் தேடுவது என்ன? அவருடைய நரம்புகள் அறுந்து சிக்கலாகி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130453/

மொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்

    மொழி [சிறுகதை] வணக்கம்,   உங்கள் அறம் தொகுதியை என் தந்தை அறிமுகம் செய்தார். அதன் பிறகு உங்கள் கதைகளையும் இணையதளத்தையும் தொடர்ந்து படித்து வருகிறேன்.   மொழி சிறுகதையே என்னை உங்களுக்கு கடிதம் எழுத தூண்டியது. மிகவும் அழகான கதை. பலமுறை படித்தும் சலிக்கவில்லை.   அதில் வரும் கதாபாத்திரங்களும், அவர்கள் அந்த சூழ்நிலையில் என்ன செய்கிறார்கள் என்பதும் (ஒரு அழகான டோமினோ விழுவது போல – ஒன்று தொட்டு இன்னொன்று) சங்கிலி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130448/

மொழி,துளி- கடிதங்கள்

துளி [சிறுகதை] அன்புள்ள ஜெ   நீண்ட காலத்திற்குப் பின் தமிழிலே வாசிக்கிறேன். இணையத்தில் மேய்வதுண்டு, கதை என்று எதையும் வாசிப்பதில்லை. ஆங்கில வாசிப்பு உண்டு. இந்த ஓய்வில் உங்கள் கதையை வாசிக்க நேர்ந்தது. துளி ஓர் அற்புதமான கதை.   இந்தக் கட்டுரையை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். மிருகங்களுக்கும் மொழிகள் உண்டு என்று இந்தக்கட்டுரை சொல்கிறது. மிருகங்களின் மொழியை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து அவற்றுடன் பேசமுடியும். மொழி, மனிதர்களுக்கு மட்டுமானதல்ல!: ஏவா மேய்யர் நேர்காணல்   இன்றைக்கு அப்படி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130435/

மொழி,ஆடகம் -கடிதங்கள்

  மொழி [சிறுகதை] அன்புள்ள ஜெ   மொழி ஓர் அழகான கதை. உண்மையில் கலை என்பது அறிவார்ந்தது அல்ல முழுக்கமுழுக்க அது ஒரு வாழ்க்கைக்கொண்டாட்டம் என்பதைக் காட்டுகின்றன இக்கதைகள். தன்னிச்சையாக எழுதவை. எந்த பிரயாசையும் இல்லாமல் எழுதப்படுபவை. ஒருமுறை திரும்ப எழுதினால்கூட இந்தக்கதையை எழுதிவிடமுடியாது. ஒருமுறை வடிவம், மொழி ஆகியவற்றைப்பற்றி யோசித்தால்கூட இந்தக்கதை வராது அப்படி ஓர் இயல்பான மலர்வு கொண்ட கதை   இத்தகைய கதைகளில் யோசிக்க ஒன்றுமே இல்லை. நல்ல ஒரு ஓடையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130428/

மொழி [சிறுகதை]

தங்கையா நாடார் மூச்சிரைக்க ஓடி கோயில் முற்றத்தை தாண்டி கரடி நாயரின் வீட்டை அடைந்தபோது வழியில் துண்டு கீழே விழுந்தது. “நாற எளவு!” என்று சபித்தபடி அதை ஓடிச் சென்று எடுத்து தோளிலிட்டபடி அம்மச்சி மாமரத்தைக் கடந்து வீட்டுக்குள் நுழைந்தார். பெரிய வீடு. இரண்டு வாசல்முற்றங்கள். வடக்குநோக்கிய முன்முற்றத்தில் தவளைக்கண்ணனும் லாரன்ஸும் பிறரும்  நின்றிருந்தார்கள். பக்கவாட்டிலிருந்த கிழக்குமுற்றத்தில் பெண்களின் கூட்டம். வைக்கோர்போர் அருகே ஒரு வேலையாட்களின் கூட்டம். கருப்பன் அப்பால் நின்று வெறிகொண்டு குரைத்துக் கொண்டிருந்தது. பெருவட்டர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130284/