குறிச்சொற்கள் மொழியாக்கம் – கவிதை
குறிச்சொல்: மொழியாக்கம் – கவிதை
இவ்விரவில் மௌனமாக உருகு…
தனித்திருப்பது அத்தனை கடினமா என்ன?
மன்னிப்பது அத்தனை பாரமா என்ன?
எளிமை அத்தனை சங்கடமானதா?
எல்லோருக்கும் என்ற சொல் ஒரு கூரிய வாளா?
தெரியவில்லை.
நீ அறிந்திருக்கலாம்
முதல்முறை மேரியின் மடியில்.
இன்னொருமுறை மக்தலேனாவின் கண்ணீரில்.
மீண்டுமொருமுறை சிலுவையில்.
கடைசியாக, உயிர்த்தெழுகையில்
நீ சொன்ன சொற்களில் அவை...
பி. ராமன் கவிதைகள்
1. கனம்
இல்லாதவற்றின் எடையெல்லாம்
உள்ளவை சுமக்க வேண்டும் என்று
ஓர் அறிவிப்பு
இவ்வழி சென்றது
அத்துடன்
பகல் முதல் அந்திவரை நீண்ட
இந்த இருப்பில்
இல்லாத வேலையின் கனத்தை
நான் அறியத் தொடங்கினேன்
இல்லாத துயரத்தின் கனம்
நீண்டு நிமிர்ந்து நிற்கும்போதுள்ள
இந்தக் கூனல்.
அடிக்களத்திற்கு கட்டிச் செல்லப்படும்
கதிர் குலைகள்...
ஆற்றூர் ரவிவர்மா கவிதைகள்
ஆற்றூர் ரவிவர்மா
இவ்வருடம் கேந்திர சாகித்ய அகாதமி விருது பெற்ற ஆற்றூர் ரவி வர்மா கேரளக் கலாச்சாரத்தின் ஆழம் அறிந்த முக்கியமான கவிஞர்களில் ஒருவராக கணிக்கப் படுகிறார். 1930 ல் ஆற்றூர் என்ற...