Tag Archive: மொழியாக்கம்

படைப்பாளிகள் மொழியாக்கம் செய்யலாமா?

      ஜெ.. மொழி பெயர்ப்பாளர்களுக்கு தேவையான தகுதிகள் குறித்து சொல்லி இருக்கிறீர்கள்… அன்னியன் நாவலை முவ மொழி பெயர்த்தால் சரிப்படாது என்பது நிஜம். ஆனால் வெண்ணிற இரவுகள் அல்லது போரும் அமைதியை சுந்தர ராமசாமி மொழி பெயர்த்தாலும் சரிப் படாது என்றே தோன்றுகிறது காரணம், அப்படி செய்தால் , அதில் சுரா தான் தெரிவார்… டால்ஸ்டாயோ தாஸ்தயேவ்ஸ்கியோ தெரிய மாட்டார்கள் சோவியத் மொழி பெயர்ப்புகள் அவற்றுக்கே உரிய சில சொற்கள் வாக்கிய அமைப்புகளால் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92436

எரிதல்

ஜெ, நான் இணையத்தில் இதை வாசித்தேன் sorry to say but jmo just drops names. except george & sharma others are not committed translators – including AKR -இந்த தகவல்பிழையை எப்படி விளக்குவீர்கள்? எஸ் அன்புள்ள எஸ் இங்கே தொடுபுழாவில் இருக்கிறேன். பார்க்க நேரமில்லை. நான் எழுதியது ஆக நல்லமொழியாக்கங்கள் இல்லை. அத்துடன் மொழியாக்கங்களை சரியான பிரச்சார உத்திகள் மூலம் கொண்டுசென்று சேர்க்காவிட்டால் பயனில்லை. அதற்கு தமிழிலக்கியத்தை இந்திய அளவிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64490

அஞ்சலி. சு கிருஷ்ணமூர்த்தி

வங்கமொழியில் இருந்து தமிழுக்கு ஏராளமான முக்கியமான புனைவிலக்கியங்களையும் கட்டுரைகளையும் மொழியாக்கம் செய்த மூத்த மொழிபெயர்ப்பாளரான சு.கிருஷ்ணமூர்த்தி இன்று சென்னையில் காலமானார். சிறிது காலமாகவே உடல்நலமின்றி இருந்தார் தமிழில் வங்க இலக்கியங்கள் பெரிய பாதிப்பைச் செலுத்தியிருக்கின்றன. பாரதி, த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, அ.கி.கோபாலன், ஆர் ஷண்முகசுந்தரம் போன்றவர்கள் முன்னொடி மொழிபெயர்ப்பாளர்கள். சமகாலத்தில் அவர்களின் இடத்தை நிறைத்தவர் சு கிருஷ்ணமூர்த்தி. அவரது மொழியாக்கத்தில் வந்த நீலகண்டப்பறவையைத் தேடி, கொல்லப்படுவதில்லை போன்ற நாவல்களை முக்கியமான ஆக்கங்களாகச் சொல்லலாம். இறுதிவரை மொழியாக்கம் செய்துகொண்டே இருந்தவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61342

சு.கிருஷ்ணமூர்த்தி எனும் தனிநபர் இயக்கம்

ஒருமுறை உரையாடல் ஒன்றில் கூடியிருந்த நண்பர்களிடம் அவர்களுக்குப்பிடித்தமான கதாபாத்திரங்களைப்பற்றிச் சொல்லும்படி கோரினேன். ஏராளமானவர்கள் தமிழ்ப்புனைவுலகில் உள்ள கதாபாத்திரங்களைப்பற்றிச் சொன்னார்கள். அடுத்தபடியாக குறிப்பிடபட்டவை மொழியாக்கம் செய்யப்பட்ட இந்திய நாவல்களில் உள்ள கதாபாத்திரங்கள். அதிகமானவர்கள் சொன்ன கதாபாத்திரம் அதீன் பந்த்யோபாத்யாயவின் நீலகண்டப் பறவையைத் தேடி நாவலில் வரும் மணீந்திரநாத். வியப்பூட்டுவது தான் என்றாலும் அதன் காரணங்களை ஊகிக்கமுடிகிறது. என்னதான் வெளிநாட்டுநாவல்களை வாசித்தாலும் அக்கதாபாத்திரங்களை உள்ளே நுழைந்து அறிவதில் நமக்கு ஒரு தடை உள்ளது. அவர்களின் புறவாழ்க்கையும் அகவாழ்க்கையும் நம்மிடமிருந்துவேறுபட்டவை என்பதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/54067

தமிழில் சிறுகதை எழுத ஆங்கில அறிவு அவசியமா?-கடிதம்

வணக்கம் ஜெயமோகன் சார்,  என்னுடைய பெயர் சு.இரமேஷ். சென்னையில் வசித்து வருகிறேன்.   ஒரு தனியார் கல்லூரியில் தமிழ் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறேன். உங்களிடம் மூன்று முறை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். நீங்கள் எனக்குக் கையெழுத்தும்  இட்டுக் கொடுத்திருக்கிறீர்கள். இதுவரை உங்களிடம் தொடர்பு கொண்டதில்லை. உங்கள் எழுத்தின் மீது தணியாத ஆர்வம் கொண்டவன். ஒருசில கட்டுரை நூல்களைத் தவிர எல்லா நூல்களையும் படித்திருக்கிறேன். உங்களிடம் நிறையப் பேசவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. உங்களின் நேரமும் முக்கியம்.  எனக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21190

ஐன்ஸ்டீனின் கனவுகள்

நான் அமெரிக்காவில் இருந்து வாங்கிவந்த நாவல்களில் ஒன்று ஐன்ஸ்டீனின் கனவுகள். [Einstein’s Dreams] ஆலன் லைட்மான் [ Alan Lightman] எழுதிய புகழ்பெற்ற சிறுநாவல் இது. அரைமணிநேரத்தில் வாசித்து முடிக்கக்கூடிய சிறிய நாவல்களில் ஒன்று. அதிக புனைவுச்சிக்கல்கள் இல்லாத நேரடியான படைப்பு. இதைத் தமிழாக்கம் செய்யலாம் என்று ஈரோடு விஜயராகவனிடம் கொடுத்தேன். மொழியாக்கம் செய்துவிட்டார் என்றார். விரைவில் வெளிவரலாம். இளம் அறிவியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1905இல் அவரது சார்பியல் கோட்பாட்டை வெளியிடும் காலத்தில் இருந்த மனநிலையை விவரிக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21446