Tag Archive: மொழி

சந்தமும் மொழியும்

அன்புள்ள ஜெமோ தொடர்ச்சியாக நீலம் வாசித்துவந்தேன். எனக்கு இந்த மாதிரியான மன எழுச்சிகளிலே நம்பிக்கை இருந்தது கிடையாது. நான் வாசித்ததெல்லாம் வேறுவகையான எழுத்துக்கள் தான். தொடர்ந்து இதை வாசிப்பேனா என்றெல்லாம் சந்தேகம் இருந்தது. கிருஷ்ணன் ராதை எல்லாம் எனக்கு பெரிசாக கவரவில்லை. மத அனுபவம் என்பது மூளையின் ஒரு தனிச்சிறப்பான ’சர்க்யூட்’ மட்டும்தான். ‘ செல்ஃப் ஹிப்னாட்டிசம்’ மாதிரி அது. நம்மை நாமே தூண்டிவிட்டுக்கொண்டு அதை அடையமுடியும். ஒரு ஊமத்தை வேர் இருந்தாலே போதும். ’ஹலூஸினேஷன்ஸ்’ என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62390

அறிவியலும் அறிவியக்கமும்- தமிழ், சம்ஸ்கிருதம்

திரு செமோ, தமிழறிஞர்கள் எங்கே என்ற கட்டுரையினை வாசித்தேன். சமஸ்கிருதம் அறிவியலுக்குரிய மொழி என்று அதிலே சொல்லியிருந்தீர்கள். உங்களுக்கே கேவலமாக இல்லையா? சம்ஸ்கிருதத்திலே உள்ள அறிவியல் என்ன என்று கொஞ்சம் சொல்லித்தர முடியுமா? சமஸ்கிருதத்தை இனிமேல் அறிவியலுக்கு வைத்துக்கொள்ளலாமா? உங்கள் அறிவுத்திறனை பற்றி ஆச்சரியம் கொள்கிறேன் மனோ சந்திரா. அன்புள்ள மனோ, நீங்கள் சுட்டிய கட்டுரையில் உள்ள நான் எழுதிய வரி இதுதான். ‘சம்ஸ்கிருதம் அறிவியக்கத்துக்குரிய மொழி’. அறிவியக்கம், அறிவியல் இரு சொற்களுக்கும் வேறுபாடு தெரியாத நீங்களெல்லாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61765

தமிழறிஞர்கள் எங்கே?

பத்து நாட்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு தமிழ் எழுத்தாளர் ‘சம்ஸ்கிருதம் அழிந்துவிட்டது’ என குதூகலிப்பதை வாசிக்கிறேன். சம்ஸ்கிருதம் அறிவியக்கத்துக்குரிய மொழி. அதற்காகவே ஆக்கப்பட்டது. மக்கள் மொழியான தமிழில் அறிவியக்கம் ஒன்று ஈராயிரமாண்டுகளாக நிகழ்ந்து வந்திருக்கிறது. இந்த தலைமுறையில் அது அழிந்துவருகிறது. இன்னும் ஒரு தலைமுறையில் அது இருக்குமா என்பதே ஐயத்துக்குரியது. அதைப்பற்றியும் எவராவது கவலைகொண்டால் நல்லது. இன்றைய போக்கில் போனால் நாளை தமிழ் வெறும் பேச்சுமொழியாக மட்டுமே சுருங்கிவிட வாய்ப்பதிகம். காரணம் இன்று தமிழ்தெரிந்தவர்கள் குறைந்து வருகிறார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61395

சம்ஸ்கிருதத்தின் அழிவு?

அடடா மோடி அரசு சமஸ்கிருதவாரம் கொண்டாட உத்தரவிட்டதன் காரணம் இதுதானா! நினைவுதினக்கொண்டாட்டம். இறப்பை நினைவுகூரும் வாரத்தைக் கூடவா இந்த தமிழ் தேசிய பாஸிசவாதிகள் எதிர்க்கிறார்கள்.என்ன ஒரு காட்டிமிராண்டித்தனம்.சே.. In the memorable year of 1857, a Gujarati poet, Dalpatram Dahyabhai, was the first to speak of the death of Sanskrit: All the feasts and great donations King Bhoja gave the Brahmans were obsequies he …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60337

மொழி

சற்று பொறுமையாக இருந்தால் விழுந்து விழுந்து சிரிக்கலாம் http://www.youtube.com/watch?v=BOUTfUmI8vs அன்புடன் முரளி

Permanent link to this article: https://www.jeyamohan.in/33039

காந்தியும் விமானமும்

திரு ஜெ சமீபத்தில் நான் ஒரு கட்டுரையில் காந்தி தனது வாழ்நாளில் விமானத்தில் பயணித்ததில்லை என்று படித்தேன், எனில் லண்டன் மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு எதன்மூலம் அவர் சென்றிருக்கக்கூடும் ? கப்பல் மூலம் ? மேலும் தான் இறப்பதற்கு முன்தினம் கூட பெங்காலி மொழியைப் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டிருந்தார் என்று படித்தேன். அவரது பெருத்த வேலைப்பளுவுக்கிடையில் எப்படி இதுபோல் தள்ளாத வயதில் புதிய மொழியைக் கற்கமுடிந்தது. மேலும் மலைபோலக் கட்டுரைகளையும் எழுதித் தள்ளமுடிந்திருக்கிறது ? இது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31606

மொழி 8,மலையாளம் என்ற தூயதமிழ்

அன்புள்ள ஜெயமோகன், நூறுநாற்காலிகள் விமர்சித்து எழுதிய கடிதத்துக்கு பதிலளிக்கையில் “தமிழ் தூய்மையாகும் தோறும் நல்ல மலையாளம் நோக்கி நகரும் என்பது என் எண்ணம்” என்று நீங்கள் கூறியுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்து விட்டேன். காரணம் கடந்த அறுபத்து மூன்று வருடங்களாக சென்னைத்தமிழனாக, அதுவும் பேட்டைவாசியாக வாழ்ந்து சமீபத்தில் கேரளத்தில் குடியமர்ந்த எனக்கு தினசரி நடைமுறை வாழ்க்கையில் காதில்விழும் நல்ல மலையாச்சொற்கள் அனைத்தும் தூய தமிழ்ச்சொற்களாகவே தெரிகிறது. காலையில் காணும் நபரிடம் நலம் விசாரித்து எங்கேபோய் வருகிறீர்கள் என்றால் “தொழுதிட்டு” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12967

மொழி-1,மொழி எதற்காக?

அன்புள்ள ஜெயமோகன் அவர்களே, நலம் நலமறிய ஆவல். எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு நீங்கள் ஏற்கனவே பதில் சொல்லியிருக்கிறீர்கள் என நினைக்கிறன். அதை மீண்டும் உங்களது வலைத்தளத்தில் கண்டு பிடிக்க முடியவில்லை. இதை உங்களிடமே மீண்டும் கேட்டு உங்களின் எண்ணத்தையும் பெற்றுக்கொள்ள ஆசை. இன்றைய கால கட்டத்தில் சென்னை போன்ற பெரு நகரங்களிலும் மற்றும் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்களும் பெரும்பாலும் முழுமையாக ஆங்கிலத்திலும் அல்லது ஆங்கிலம் கலந்த தமிழிலும் பேசுகிறார்கள். ஏன் நமது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11623

மொழி,கம்பன் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், ஒரு வேண்டுகோள். இணையத்தில் சமீபகாலமாக கம்பராமாயணம் பற்றி படித்து, அதை நல்ல விளக்க உரையுடன் படிக்கவேண்டும் என தோன்றியது. சமீபத்தில் ‘நன்று நம் கொற்றம்’ வரிகளை படித்துவிட்டு ஆவல் அதிகமாகிவிட்டது. தற்போது கிடைக்கும், நல்ல உரையுடன் கூடிய கம்பராமாயண பதிப்பு எது என்று கூறுங்களேன் (நேரம் கிடைக்கும் போது). சுஜாதா பற்றிய நீண்ட பின்னூட்டச் சண்டையில் என் பங்கும் உள்ளது என்ற குற்ற உணர்வில், சமீபத்தில் சிறுகதைகள் உட்பட எதற்கும் பின்னூட்டமிடவில்லை :-) – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16704

இலக்கியக் கலைச்சொற்கள்

அக ஒளி Enlightenment படைப்பில் உருவாகும் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட முழுமைநோக்கு அகவயம் : Subjective ஒருவரின் அகம் சார்ந்தது, தனிப்பட்ட முறையிலானது. அந்தரங்கமானது அகமொழி Langue பண்பாட்டின் உள்ளுறையாக உள்ள மொழிக்கட்டுமானம். புறமொழிக்கு கொடுக்கச் சாத்தியமான அர்த்தங்களினால் ஆனது அது. அதுவே கேட்கும்மொழிக்கு அர்த்தம் அளிக்கிறது. அங்கதம் :Satire கேலிப்படைப்பு அடித்தளம்: Base மார்க்ஸிய நோக்கில் சமூகத்தின் பொருளியல் அமைப்பு. உற்பத்தி வினியோகம் இரண்டும் அடங்கியது அடுக்கதிகாரம்: Hierarchy அதிகாரம் ஒன்றுக்குமேல் ஒன்றாக அமைக்கப்பட்டிருக்கும் அமைப்பு அணியியல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/182