Tag Archive: மேரி கொரெல்லி

வெளியே செல்லும் வழி – 1

எல்லா தேவாலய மணிகளும் தெய்வீகமாக ஒலித்துக் கொண்டிருந்தன. சூரியன் மூழ்கிக் கொண்டிருந்தது. தொன்மையான நகரமான ரூவனில் மணிமுடிகளாக நின்ற அழகான சாம்பல்நிற கோபுரங்களில் இருந்து அந்தப் புனிதமான ரீங்காரம் அலையலையாக எழுந்து வந்தது. இனிமையானதும் வெவ்வேறு சுதிகொண்டதுமான மணியோசை பெருகி வந்து இளவெம்மையான இலையுதிர்கால காற்றை நிறைத்தது… ரூவனில் சந்தைக்குப்போய் வந்த கிராமத்துப்பெண்களிடம் ஒரு புதிய பரபரப்பு இருந்தது. அன்று அந்நகருக்கு ஒரு புனிதர் வருகை தந்திருக்கிறார். ·ப்ரான்ஸின் மறக்கப்பட்ட தொலைதூரத்து தேவாலய நகரம் ஒன்றின் கார்டினல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/439

வெளியே செல்லும் வழி– 2

ரோமின் மாபெரும் தேவாலயங்களினூடாக, அதிகார அடுக்குகளில் இருக்கும் வல்லமை மிக்க மனிதர்களின் வழியாக போன்·ப்ரே மானுவேல் இருவரும் கடந்து செல்கிறார்கள். அவிசுவாசம் தேங்கிய ஆத்மாக்கள் அவநம்பிக்கை நிறைந்த மனங்கள். ஒவ்வொரு இடத்திலும் அவர்களின் ஆத்மாவின் கோட்டைகளை தகர்க்கும் சொற்களை சொல்கிறான் மானுவேல். ரோமில் தங்கியிருக்கும் போது ஒருநாள் மானுவேல் காணாமலாகிறான். பின்னர் அவன் திரும்பும்போது மனப்பதைப்புடன் போன்·ப்ரே கேட்டார், ”எங்கே போனாய் குழந்தை? எங்கெல்லாம் தேடுவது?” ”நான் இந்த ரோமிலேயே விசித்திரமான ஓர் இடத்துச் சென்றிருந்தேன். அசிங்கமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5200

ஆழமும் அலைகளும்

அன்புள்ள ஜெயமோகன், வலசைப்பறவை 6 , பகற்கனவின் பாதையில் என்று தலைப்பில் எழுதப்பட்டிருந்த கருத்துக்கள் உள்ளதை உள்ளபடி விளக்கிக் கூறுகின்றன. கு.ப.ரா. பற்றி பத்து வருடங்களுக்கு முன்பு திண்ணையில் இதே கருத்துக்களை மிதமான வார்த்தைகளில் கூறியிருக்கிறீர்கள். நாற்பது வருடங்களாக தமிழ், இந்திய, ரஷ்ய இலக்கிய நூல்களை வாசித்து வருகிறேன்.தி,ஜா.வின் சிறுகதைகள் அனைத்தையும் வாசித்திருக்கிறேன். கடன் தீர்ந்தது, பாயசம், கொட்டு மேளம் போன்ற சிலவற்றை விரும்பி இருக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு மோகமுள் வாசிக்க ஆரம்பித்து பின் முடியாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/48285

மதம் , ஆன்மீகம்,கிறித்தவம் :ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், மேரி கொரெல்லி எழுதிய ‘மாஸ்டர் கிறிஸ்டியன்’ என்ற நாவலை நீங்கள் சுருக்கிக் கொடுத்திருப்பதை படித்தேன். முதலிலேயே ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். மிக அருமையாகச் சுருக்கியிருக்கிறீர்கள். மூலநாவலையே எந்த இழப்பும் இல்லாமல் வாசிப்பது போன்ற எண்ணத்தை உருவாக்கியது. இறுதிக்கட்டத்தில் போப்பாண்டவரிடம் கிறிஸ்து பேசும் வசனங்கள் தீவிரமான நடையில் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். முக்கியமான நாவலை அறிமுகம்செய்தமைக்கு நன்றி. நாவலைப்பற்றி உங்கள் கருத்தைச் சொல்லும்போது நீங்கள் மதம் என்ற அமைப்புக்கு அப்பால் செல்லக்கூடிய ஒரு ஆன்மீகத்தைப்பற்றி கற்பனைசெய்கிறீர்கள். இந்த மாதிரியான கற்பனையானது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/443