Tag Archive: மேகாலயா

சூரியதிசை -கடிதங்கள்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் . ,சூரிய திசை பயணதுடன் பயணிக்கும் தாங்களின் வாசகன் நான் ,தாங்கள் செல்லும் பயணம் சம்பந்தப்பட்ட கட்டுரைகள் அனைத்தையும் விரும்பி படிப்பவன் என்ற முறையில் எழுதும் கடிதம் ,பலவிதமான எழுத்தாளர்கள் எழுதும் பயணக்கட்டுரைகள் படித்தாலும் ஒரு முழு திருப்தி எனக்கு ஏற்படவில்லை ,ஆனால் தாங்களின் கட்டுரைகள் என்னை முழுதும் ஆட்கொள்கிறது ,காரணம் அதிகம் செயற்கையான வர்ணனை கிடையாது ,பயணம் செய்யும் இடங்களையும் ,அங்குள்ள மக்களின் சமூக ,பொருளாதார நிலை ,அவற்றின் வரலாறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72046

வடகிழக்கு- ஒரு கடிதம்

அன்பிற்கினிய ஆசிரியருக்கு, நாகர்கோயில் சென்று சேர்ந்துவிட்டீர்கள் என்று தெரிந்துகொண்டேன். மேகாலயாவைப்பற்றி சில தகவல்கள் தங்களுடன் பகிர எண்ணுகிறேன். மேகாலயா ஒரு சுவாரசியமான மாநிலம். அங்குள்ள மூன்று வாசிகளான காசி, ஜைந்தியா மற்றும் காரோக்கள் அவரவர் பாணியில் வேறுபட்டவர்கள். இதில் காசி மற்றும் ஜைந்தியா குழுவினர் கிட்டத்தட்ட தங்கைகள் என்று கூறலாம். பெண் கொடுத்து எடுக்கும் வழக்கம் கூட எளியதே. காசி இனத்தவர்கள் எண்ணிக்கையில் பத்து லட்சமாக இருப்பார்கள் ( மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை முப்பத்தைந்து லட்சம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72240

சூரியதிசைப் பயணம் – 18 முகங்கள்

வடகிழக்குப் பயணம் பற்றி வினோத் ஒரு முக்கியமான அவதானிப்பைச் சொன்னார். இங்கு வந்தபின்னர்தான் இந்தியாவின் ஒவ்வொரு முகமும் ஒரு இனக்குழுத்தன்மையுடன் தெரியத் தொடங்குகிறது என்று. வடகிழக்கில் ஒவ்வொரு இனக்குழுவும் நீண்டகாலமாக இனக்கலப்பில்லாமல் தனித்தே செயல்பட்டவை. பிறரை வெறுத்தவை, கொன்றவை. ஆகவே இனக்கலப்பு நிகழவில்லை. இப்போதுதான் இனக்கலப்பு நிகழ்ந்து வருகிறது அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா பகுதிகளில் இனக்கலப்பு குறைவு. மணிப்பூர் திரிபுராவில் அதிகம். இங்குள்ள பிரச்சினை இந்த இனத்தனித்தன்மைதான். நவீனக்கல்வி கற்கும் இளைஞர்கள்கூட இனக்குழுக்கள் சார்ந்த மாணவர் அமைப்புகளையே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72075

சூரியதிசைப் பயணம் – 17

இன்றுடன் எங்கள் பயணம் முடிவடைகிறது. காலையில் எழுந்ததுமே டோன்போஸ்கோ பழங்குடி அருங்காட்சியகத்தைப் பார்க்கச்செல்லவேண்டுமென எண்ணியிருந்தோம். அருங்காட்சியகம் திறக்க நேரமாகும். ஆகவே அருகே இருந்த ஏரியைச்சுற்றி ஒரு காலை நடை சென்றோம். ஏரிக்குசுற்றும் ஒரு நல்ல நடைபாதை இருந்தது. ஆனால் உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி. சாலையிலேயே சுற்றிவந்தோம். ஷில்லாங்கை ஒரு அழகிய சிறிய சுற்றுலாநகரம் எனலாம். ஊட்டியுடன் ஒப்புநோக்க சுத்தமானது சாலையில் ஒருவர் ஜெர்மன் ஷெப்பர்ட் நாயுடன் ஓடினார். அவனுக்கு என்ன வயது என்றார். இரண்டு என்றார். அவரிடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72079

சூரியதிசைப் பயணம் – 16

பயணம் கிளம்பும்போது எப்போதும் நெடுநாட்கள் பயணம் செய்யவிருக்கிறோம் என்ற எண்ணம் இருக்கும். பயணம் நீள நீள ஒவ்வொரு காட்சியும் பின்னகர்ந்துகொண்டே இருக்கும். நாலைந்து நாட்கள் கடந்தால் முதல்நாள் இறந்தகாலத்தில் எங்கோ ஒரு நினைவாக மாறிவிட்டிருக்கும் பயணங்களில் நாட்கள் நீளமானவை. ஏனென்றால் அனுபவங்கள் செறிவானவை. காலத்தை நாம் அனுபவங்களைக்கொண்டே அளக்கிறோம். ஒருநாளில் காலையில் நிகழ்ந்தவையே மாலையில் நெடுந்தொலைவுக்கு சென்றுவிட்டிருக்கும். அத்துடன் நிகழ்காலம் முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலில் இருப்பதனால் பழைய இடங்களை நினைத்தெடுப்பதும் கடினமானது எங்கள் பயணம் முடியப்போகிறது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72069

சூரியதிசைப் பயணம் – 15

மேகங்கள் உலவும் இடம் என்பதனால் மேகாலயா என்று பெயர். இந்தியாவில் மட்டும் அல்ல உலகிலேயே அதிக மழைபொழியும் இடங்களில் ஒன்று இப்பகுதி. ஆனால் கேரளம் போல வருடம் முழுக்க மழைபொழிவதில்லை. நாங்கள் செல்லும்போது மழை இல்லை. தூசு பறந்த தெருக்களும் அறுவடைமுடிந்து ஓய்வெடுக்கும் வயல்களுமாக வெறிச்சிட்டு கிடந்தது மேகாலயா மழைக்காலம் ஜூனில் தொடங்கி செப்டெம்பர் வரை. மழை என்பது சாதாரணமாக பத்துநாட்கள் கூட நின்று பொழியும். ஆனால் வெள்ளம் வருவதில்லை. பெய்தமழை சில நிமிடங்களிலேயே சரிவான மலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72050

சூரியதிசைப் பயணம் – 11

ஷிவ்சாகரிலிருந்து காலையிலேயே கிளம்பிவிட்டோம். அருணாச்சலப்பிரதேசத்திற்கு ஒரு குறுகிய பயணம் போய் மீண்டோமென்றாலும் அதுதான் நாங்கள் அசாமிலிருந்து வடகிழக்கு பழங்குடி மாகாணங்களுக்குச் செல்லும் பயணம். மேகாலயா நாகாலாந்து மிசோரம் மணிப்பூர் திரிபுரா அருணாச்சலப்பிரதேஷ் சிக்கிம் ஆகிய ஏழு வடகிழக்கு மாகாணங்கள் ஏழுசகோதரிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த மாகாணங்கள் அனைத்திற்கும் உள்ள பொது அம்சம் என்பது இவை அனைத்துமே பழங்குடிகளுக்குரியவை என்பது. மகாபாரதகாலம் முதல் அறியப்பட்ட ஒரே பழங்குடிப்பகுதி மணிப்பூர்தான். பிற நிலப்பகுதிகள் அப்போது மக்கள் வாழாத அடர்காடுகளாக இருந்திருக்கவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71801