Tag Archive: மூன்று வருகைகள்

குருவிகள் – கடிதங்கள்

மூன்று வருகைகள். மூன்று டைனோசர்கள் மூன்று பறவைகள் எஞ்சும் கூடு அன்புள்ள ஜெ அந்தக்குருவியின் வருகைக்கும் உங்கள் எழுத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருந்திருக்கிறது. இந்த எழுத்துக்கொண்டாட்டத்திற்கும் அதற்கும் ஒரு இணைப்பை உங்கள் மனசில் உருவாக்கிக்கொண்டிருந்திருக்கிறீர்கள். அல்லது அதை ஒரு நிமித்தமாக உங்கள் மனம் எடுத்துக்கொண்டிருக்கிறது இந்தக் கதைகளின் விதவிதமான உலகங்கள் ,நூற்றுக்கணக்கான செய்திகள், உணர்ச்சித்தருணங்கள், ஒவ்வொரு முறையும் மிகச்சரியாக இது ஒரு அபூர்வமான கவித்துவத்தைச் சென்றடைவது, அதன்பின் திரும்பிப்பார்த்தால் எல்லா கதைகளுமே அந்த முடிவுக்குரிய ஒத்திசைவைக் கொண்டிருப்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/132009/

எஞ்சும் கூடு

மூன்று வருகைகள். மூன்று டைனோசர்கள் மூன்று பறவைகள் நேற்று மாலையுடன் குருவிக்குஞ்சுகள் மூன்றும் பறந்து மறைந்தன. நேற்று அந்திவரை அவை திரும்பி வரும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஓரிருநாட்கள் வெளியே சென்று பறத்தல் பழகி இந்தக்கூட்டுக்குள் வந்து தங்கும் என்று நினைத்தேன். ஆனால் அந்தியில் அவை திரும்பவில்லை. வெளியே மழையும் இருளும் நிறைந்த இரவு. அவை சந்திக்கும் முதல் வானிருள். தாய்ப்பறவை ஒரே ஒருநாள்தான் பறக்க அழைத்துச் செல்லும். அதன்பின் அப்படியே வானுக்கு விட்டுவிடும். அவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131981/

மூன்று பறவைகள்

மூன்று டைனோசர்கள் மூன்று வருகைகள். செங்கோலின் கீழ் இரண்டுநாட்களாகவே பக்கத்து அறையில் ஒரே சந்தடி. குருவிக்குரல்களுக்கு வேகம் கூடியிருப்பதைக் கண்டேன். கீழே நின்று பார்த்தபோது மூன்று குருவிக்குஞ்சுகளும் கூண்டின் விளிம்பில் வந்து அமர்ந்து அலகை மேல்நோக்கி ஏந்தி வைத்திருந்தன. தீனிக்கான தவம் அவற்றின் அன்னையை அரைக்கணம்கூட பார்க்கமுடியாது, அத்தனை விசை. டிவிட் என்று ஓர் ஓசை, சென்றுவிடும். அதன் உத்தியே நாம் பார்க்கும்போது சட்டென்று பறந்து சென்று கூட்டில் இருந்து நம் கவனத்தை கலைப்பதுதான். ஆனால் குஞ்சுகளுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131861/

மூன்று டைனோசர்கள்

மூன்று வருகைகள். செங்கோலின் கீழ் பல்லிகளை பற்றி பார்த்துக்கொண்டிருந்தேன். அவை டைனோசர் வம்சம் என்று தோன்றும். ஆனால் பல்லிகளைவிட பறவைகள்தான் டைனோசர்களுக்கு நெருக்கமானவை என்று தெரிந்துகொண்டேன். அவற்றின் கால்களும் நடையும் கழுத்தும் எல்லாமே டைனோசரின் நீட்சிகள். அலகு வந்தது, வால் அகன்றது. நேற்று காலை அருண்மொழி வந்து “குருவி குஞ்சு விரிஞ்சிருக்கு” என்றாள். “அப்டியா?நான் பாக்கலையே?”என்றேன் “கீ கீன்னு சத்தம் வந்திட்டே இருக்கு… நீ என்ன பாத்தே?”என்றாள் நான் சைதன்யாவிடம் சொன்னேன். அவள் உடனே சென்று நாற்காலியை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131471/

மூன்று வருகைகள்- கடிதங்கள்

மூன்று வருகைகள். அன்பு ஜெ, நலமா? இன்று தங்களின் மூன்று வருகைகள் வாசித்தவுடன், தேவதேவன் அவர்களின் கவிதை ஒன்று நினைவிற்கு வந்தது அது, ஒரு சிறு குருவி என் வீட்டுக்குள் வந்து தன் கூட்டைக் கட்டியது ஏன்? அங்கிருந்தும் விருட்டெனப் பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு? பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து இப்பவும் விருட்டென்று தாவுகிறது அது மரத்திற்கு மரக்கிளையினை நீச்சல்குளத்தின் துள்ளுப்பலகையாக மிதித்து அங்கிருந்தும் தவ்விப்பாய்கிறது மரணமற்ற பெருவெளிக்கடலை நோக்கி சுரேலென தொட்டது அக்கடலை என்னை ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131243/

மூன்று வருகைகள்.

சென்ற சிலநாட்களாகவே என் படுக்கையறைக்குள் கருவேப்பிலை மணம். கோடை தொடங்கியதுமே எல்லா சன்னல்களையும் திறந்துவிட்டு கொசுவலை கட்டிக்கொண்டு படுக்கத் தொடங்கினேன். இங்கே உண்மையில் மெய்யான கோடைகாலம் தொடங்கவேயில்லை- இன்னமும்கூட. அவ்வப்போது மழை. பின்னிரவில் நல்ல குளிர். ஆகவே மெய்யான காற்றில் உறங்க விரும்பினேன். காலை எழுந்தால் என் கொசுவலைமேல் கருவேப்பிலைகள். யார் செய்வது? இலக்கியவாதி சமூகத்திற்கு வெறும் கறிவேப்பிலை மட்டுமே என உணர்த்த விரும்புவது யார்? அடைக்கலங்குருவிகள்! காலையில் அவை என் தலைக்குமேல் குடும்பச்சண்டை போட்டன. காற்றில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131073/

செங்கோலின் கீழ்

என் விசைப்பலகை உச்சவேகத்தில் தட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. கதை சூடான கட்டத்தில் செல்கிறது. அருகே ஒரு டிப் டிப் டிப் சத்தம். என்ன அது? மீண்டும் அதே சத்தம். நிறுத்திவிட்டு பார்த்தால் என்னுடைய பிரியத்திற்குரிய பல்லி. அதற்கு நான் இன்னும் பெயர் இடவில்லை. பெயர்களும் அடையாளங்களும் கொண்ட இந்த உலகுக்கு அதை கொண்டுவரவில்லை என்ன சத்தம் கொடுக்கிறது? வேறேதேனும் பல்லி அருகே நிற்கிறதா என்ன? இல்லை, இது ஒரு சண்டியர். இந்த வட்டாரத்தில் வேறுபல்லிக்கு இடமில்லை. மேலே ஒரு டியூப்லைட். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130913/