Tag Archive: மு.வ

கலையின் உலை

  மு.வ கட்டுரை அன்புள்ள ஜெ, உங்கள் மு.வ மீள்பிரசுரக் கட்டுரை சில எண்னங்களைத் தூண்டியது. மூத்த சிங்கை எழுத்தாளர் ஒருவரிடம் நேற்றிரவு நெடுநேரம் இலக்கின்றி, தாவித்தாவிப் பலவிஷயங்களும் பேசிக்கொண்டிருந்தபோது அதில் முவ பற்றிய பேச்சும் வந்தது. முவவைத் தன் மானசீக குருவாக பதின்ம வயதில் ஏற்றதாக அவர் சொன்னார். அந்த வயதில், குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்த சூழலில் முவ எழுத்துக்களைப் பற்றுக்கோலாகக் கொண்டுதான் தன்னால் ஒழுக்கத்தை ஒரு நெறியாகக் கடைப்பிடிக்க முடிந்தது என்றார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100243

மு.வ.வின் எக்ஸ்ரே

எஸ்.ராமகிருஷ்ணனின் தளத்தில் இந்தக்கதையையும் அவர் எழுதிய குறிப்பையும் வாசித்தேன். சிறப்பான கதை, சிறந்த அறிமுகம் ஆனால் மிகப்பெரிய பிழை ஒன்று நிகழ்ந்துள்ளது. கதையின் பெயர் ‘மு.வ.வின் எக்ஸ்ரே’ என நினைக்கிறேன். வந்து படுத்துக்கொண்டு “நாம் மாறியிருக்கிறோம். ஆனால் வளர்ந்திருக்கிறோமா?” என்ற புத்தம்புதிய, ஆழமான கேள்வியைக் கேட்பவர் மு.வ தான். ராமகிருஷ்ணன் சரிபார்த்துக்கொண்டால் நல்லது.

Permanent link to this article: https://www.jeyamohan.in/41079

கடிதங்கள்

அன்புள்ள ஜெ. தீபாவளி வாழ்த்துக்கள். சமீபத்தில் Mindmap என்கிற அடிப்படையில் நிறைய மென்பொருள் உபகரணங்கள் வருகின்றன. ஓபன் சோர்ஸ் -இல் (Open souce) Freemind உபயோகமானது. வியாபாரம் நோக்கமின்றி உபயோகித்தால் , விலை ஏதும் இல்லை. பல வேறு இடங்களிலும், இயல்களிலும் சிந்தனைகளிலும் தெரிந்து கொள்ளவும், தெரிவிக்கவும் மிக உபயோகமாக உள்ளது. Java சார்ந்த உபகரணம் என்பதால் மற்ற மென்பொருள்கள் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இணையத்தில் பல வெறும் ‘மனதின் வரைபடங்கள்’ உள்ளன. (சித்தத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9134