Tag Archive: மு.தளையசிங்கம்

வெங்கட் சாமிநாதனின் நிகர மதிப்பு

ஜெ, சாமிநாதனைப்பற்றிய உங்கள் குறிப்புகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நன்றி. சாமிநாதனுக்கு இன்றுள்ள இடம் என்ன? அவர் சென்றகாலத்தைய ஓர் அறிஞர் மட்டும்தானா? ராஜாராம் [எம் ஏ நுஃமான்] அன்புள்ள ராஜாராம், எந்த விமர்சகரும் ஒரு காலகட்டத்தைச் சேர்ந்தவர்தான். மாபெரும் விமர்சகர்களான டி.எஸ்.எலியட், ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ், ஹரால்ட் ப்ளூம் அனைவருக்கும் இது பொருந்தும். ஏனென்றால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுப்பரப்பில் ஒரு காலகட்டத்தில் நின்று பேசியவர்கள். இலக்கியம் மட்டுமே மானுடக் கனவு என்னும் அகாலத்தில் நின்று பேசுகிறது. வெங்கட் சாமிநாதன் எழுபது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80088

பின்நவீனத்துவம் -விளையாட்டுக்கையேடு

பின்நவீனத்துவம் என்பது பொதுவாக ஒரு மிரட்டுவதற்குரிய சொல்லாகவே இங்கே அறிமுகமாகியது. அதை அன்றைய சூழலை அறிந்து , அது உருவான பினன்ணியைப் புரிந்துகொண்டு பேசாமல் சிக்கலான மொழியாக்க நடையில் எழுதப்பட்ட நீள்கட்டுரைகள் வழியாகவும் தூக்கிவீசும் ஒற்றை வரி விமர்சனங்கள் வழியாகவும் முன்வைத்தார்கள். அன்று இணையம் போன்ற தொடர்புவசதிகள் இல்லாதிருந்தமையால் நூல்களும் பெயர்களும் மிரட்சி அளிப்பவையாக இருந்தன. ஒரு தேனீர்க்கோப்பைப் புயலாக அது நிகழ்ந்து முடிந்தது காரணம் முதன்மையாக இங்கே நவீனத்துவம் சார்ந்த விவாதங்களே அதுவரை பெரியதாக நிகழவில்லை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74687

சுவையறிதல்

அனைவருக்கும் வணக்கம், பதின்வயதுகளில் புல்வெட்டும் நண்பர்களுடன் காட்டுக்குச் செல்லும் வழக்கம் எனக்கு இருந்தது. கல்லூரிக்குச்செல்லும் பாவனையில் கிளம்பி புத்தகங்களை ஏதேனும் கடைகளில் போட்டுவிட்டுச் செல்வேன்.இரவில் திரும்பி வந்துசேர்வேன். படிப்பு உள்ள ஒரு நண்பன் கூடவருவதிலும் அவன் நிறைய கதைகளைச் சொல்வதிலும் நண்பர்களுக்கு மகிழ்ச்சி. காட்டைப்பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஒருமுறை ஒரு காட்டுயானையைப் பார்த்தேன். நாங்கள் ஒரு மேட்டில் ஏறியபோது கீழே விரிந்த சற்று வரண்ட நிலத்தில் பிரம்மாண்டமான கொம்பன் மேய்ந்துகொண்டு நின்றிருந்தது. உடம்பெல்லாம் செம்மண் படிந்து வரிவரியாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2476

அஞ்சலி – எஸ்.பொ

ஈழ இலக்கியத்தின் முதன்மைப்படைப்பாளிகளில் ஒருவரான எஸ்.பொன்னுத்துரை ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நவம்பர் 26-ஆம் தேதி இரவு 11 மணிக்கு காலமானார். அவருக்கு என் அஞ்சலி. ஈழ இலக்கியத்தின் கலகக்குரலாக ஒலித்தவர் எஸ்.பொ. அன்று ஈழ இலக்கியத்தை மூடியிருந்தது கைலாசபதி, சிவத்தம்பி இருவராலும் முன்வைக்கப்பட்ட முற்போக்கு எழுத்தின் முன்வடிவம். அதுவன்றி வேறு எழுத்தே இல்லை என்ற நிலை. அதையொட்டி செய்யப்பட்ட போலி எழுத்துக்களின் பெருக்கத்தை மீறி உண்மையான உணர்ச்சிகள் இலக்கியத்தில் இடம்பெறவே முடியாத சூழல். இடம்பெற்றாலும் அவை ‘அரசியல்சரி’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66446

அயோத்திதாசர் என்ற முதற்சிந்தனையாளர்-3

[தொடர்ச்சி] இன்றைய சிந்தனைகளின் எல்லைகள். நான் விஷ்ணுபுரம் நாவலுக்கான ஆய்வுகளைச் செய்துகொண்டிருந்தபோது பாலக்காடு அருகே ஒரு மரபான பண்டிதரைச் சந்திக்கச்சென்றேன். அந்நாவலில் அவைதிக சிந்தனைகளை அழுத்தம்கொடுத்துப் பேசியிருப்பது வாசிப்பவர்களுக்குத் தெரியும். அது சம்பந்தமான பலரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அந்த அறிஞர் வைதிக மரபான பூர்வமீமாம்ச முறைமையைச் சேர்ந்தவர். நான் ஏற்கனவே அந்தத் தளத்தில் கணிசமாக வாசித்திருந்தேன். ஆர்தர் ஆவலோன்,  எஸ்.என்.தாஸ்குப்தா, கெ.தாமோதரன், அகேகானந்த பாரதி, தேவிபிரசாத் சட்டோபாத்யாய என. பல அறிஞர்களிடம் நேரடித் தொடர்பும் இருந்தது. ஆச்சரியமென்னவென்றால் நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18159

அயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்-1

முதற்சிந்தனையாளர் என்றால் யார்? அசல் சிந்தனையாளர்  அல்லது மூலச்சிந்தனையாளர் அல்லது முதற்சிந்தனையாளர் என்ற ஒரு கருதுகோள் என் சிந்தனையில் என்றும் இருந்துகொண்டிருக்கிறது. அதற்கு முன் கேட்டுக்கொள்ளவேண்டியது, உண்மையில் மூலச்சிந்தனை என ஒன்று உண்டா என்பதே. மானுடச் சிந்தனை என்பது ஒரு அறுபடாத பெரும்பிரவாகம். எல்லாச் சிந்தனைகளும் ஏற்கனவே இருந்த சிந்தனைகளின் தொடர்ச்சிதான், வரப்போகும் சிந்தனைகளின் முன்னோடிதான். சுத்த சுயம்புவான சிந்தனை என ஒன்று இல்லை. அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குக்கூட அப்படி மூலவடிவங்களைத் தேட முடியும். தத்துவத்தின் அடிப்படையான தேடல்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18149

மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – மூன்றாம் பகுதி

மதிய உணவுக்கு முன்பு அரங்கில் பங்குபெற்றவர்களில் நடக்கும் ஆரோக்கிய நிலையில் நிலையில் இருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து அருகே இருந்த ஃபெர்ன் ஹில் குன்றுக்கு நடந்து சென்றோம். வெங்கட் சாமிநாதன் , தேவகாந்தன் , அபிலாஷ் ஆகியோ வரவில்லை . ஃபெர்ன் ஹில் வனத்துறையால் சீர்திருத்தப்பட்ட காடு . அங்கு ஒரு பார்வைக் கோபுரம் உண்டு. அதில் ஏறிப்பார்த்தால் ஊட்டியின் முழுத்தோற்றத்தையும் பார்க்க முடியும். காடு வழியாக நடந்தபடி இலக்கியம் பேசுவதென்பது ஊட்டி கூட்டங்களின் சிறப்பம்சமாக எப்போதுமே இருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108666

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் 1

மு .தளையசிங்கத்தை புரிந்துகொள்வதற்கான் அடிப்படைகள். மு .தளையசிங்கத்தை இன்று படிக்கும்போது பல இடர்கள் தமிழ் வாசகனுக்கு ஏற்படுவதை கவனித்துள்ளேன். அவனது விமரிசனங்கள் இரு தளத்தில் அமைந்துள்ளன. ஒன்று மு.தளைய சிங்கம் தெளிவாக சிந்திக்கவில்லை ,மிகவும் குழப்புகிறார். இரண்டு அவரது பார்வை பல சமயம் அபத்தமாகவும் ,தர்க்கத்தைமீறி அகவயமாகவும் , அபூர்வமாக மூட நம்பிக்கை அளவுக்கும் போகிறது. அவர் வழிமுறைகளைப்பற்றிய தெளிவு இல்லாமல் ஒரு இலட்சிய வாழ்க்கைநிலையை அல்லது காலகட்டத்தை கற்பனை செய்கிறார் என சுந்தர ராமசாமி மிக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108670

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் 2

      மு .தளையசிங்கம் என்ன சொல்கிறார் ? தளையசிங்கத்தின் கருத்தியக்கத்தை இரு கூறாக வகுத்து புரிந்துகொள்வது அவசியமாகும் . தருக்கபூர்வமாக , சிந்தனை சார்ந்து அவர் செயல்பட்ட தளம் முதலாவது. உள்ளுணர்வு சார்ந்து அவர் செயல்பட்ட தளம் இரண்டாவது . அவரிடம் இவ்விரு தளங்களுக்கும் இடையே மோதலும் முரண்பாடும் எப்போதும் உண்டு . அவரை இன்று நாம் பொருட்படுத்த வேண்டியது அவரது உள்ளுணர்வு வெளிப்படும் கணங்களுக்காக மட்டுமே . அடுத்த யுகம் குறித்த கனவின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108663

மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் 1

ஒன்று மு .தளையசிங்கத்தின் படைப்புலகம் குறித்து ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்வது குறித்து அறிவித்து ஒரு வருடமாகபோகிறது . சமீபத்தில்தான் ஊட்டியில் ,மே மாதம் நான்கு முதல் ஆறு வரை விவாதக்கூட்டம் ஒன்றை சொல் புதிது மும்மாத இதழின் பொறுப்பில் , குரு நித்யா ஆய்வரங்கம் சார்பில் , ஏற்பாடு செய்தோம் .கூட்டம் சொல் புதிதின் கூட்டங்கள் வழக்கமாக நடப்பதுபோல மிக நட்பார்ந்த விதத்தில் , தீவிரமான விவாதங்களுடன் நடந்தது . தடைகள், பிரச்சினைகள் உண்மையில் சென்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108672

Older posts «