Tag Archive: மு.கு.ஜகன்னாத ராஜா

நடைபயணி

2002 ல் சிவகாசியில் நான் ஒரு கல்லூரியில் பேசுவதற்காகச் சென்றிருந்தேன். கல்லூரிகளில் பேசுவதென்பது மிகத் துன்பமான அனுபவம். அக்கல்லூரியில் நமக்குத்தெரிந்த ,நம் மீது உண்மையான பிரியம் கொண்ட வாசகர் எவரேனும் இல்லை என்றால் கல்லூரிகளைத் தவிர்ப்பதே நல்லது என்பது என் அனுபவம். ஏனென்றால் தமிழகத்துக்கல்லூரிகளைப்போலப் பாமரர்கள் உலவும் இடத்தை எங்குமே பார்க்கமுடியாது. வேறு எந்த அலுவலகத்திலும், ஏன் கருப்பட்டியோ கருவாடோ மொத்தவிற்பனைசெய்யும் இடத்தில்கூட, ஒரு குறைந்தபட்ச அறிவார்ந்த தன்மை இருக்கும். தினத்தந்தி வாசித்துவிட்டாவது தங்கள் கருத்துக்களைச் சொல்வார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31750

மு.கு.ஜகன்னாத ராஜா:அஞ்சலி

2002 ல் சிவகாசியில் நான் பேசிய ஒருகல்லூரி விழாவில் பார்வையாளராக வந்து கலந்துகொண்டார் பன்மொழிப்புலவர் மு.கு.ஜகன்னாத ராஜா. அவரே அவ்ந்து என்னிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். அவர் மொழியாக்கம்செய்த ஆமுக்த மால்யதா [சூடிக்கொடுத்த மாலை. கிருஷ்ணதேவராயர் எழுதியது] என்ற நூலை நான் அப்போது வாசித்திருந்தேன். அதைப்பற்றிச் சொன்னேன். அவருக்கு மகிழ்ச்சி. ‘இதையெல்லாம் நவீன இலக்கியவாதிகள் படிக்கிறார்கள் என்று அறிந்து மகிழ்ச்சி’ என்றார். ‘நாங்கள் படிக்காமல் பின்னே பேராசிரியர்களா படிக்கப்போகிறார்கள்?’ என்று கேட்டேன், சிரித்தார். 1933ல்  ராஜபாளையத்தில் பிறந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1694