Tag Archive: முஷ்ணை

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 6

பகுதி ஒன்று : கனவுத்திரை – 6 மாலினி சுபகையை நோக்கி புன்னகைத்து கைநீட்டி “அருகே வாடி” என்றாள். சுபகை கைகளை ஊன்றி உடலை அசைத்து சென்று அவளருகே அமர்ந்தாள். சுபகையின் தலையைத் தொட்டு வருடி “உன் உள்ளம் புரிகிறது.  நீ அதன்பிறகு இளைய பாண்டவனை பார்த்தாயா?” என்றாள். அவள் “இல்லை. அவர் என்னை அழைக்கவில்லை. சாளரங்களினூடாக நான் அவரை பார்ப்பதுடன் அமைகிறேன்” என்றாள். மாலினி “அவன் சென்று கொண்டிருக்கிறான். பாதைகள் பின்னிட்டபடியே உள்ளன. அவனிடம் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78793/

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 5

பகுதி ஒன்று : கனவுத்திரை – 5 முன்னால் சென்ற வீரன் தன் இடையிலிருந்த கொம்பை எடுத்து பிளிறலோசை எழுப்பினான். காட்டுக்கு அப்பால் இருந்து அதற்கு மாற்றொலி எழுந்தது. பசுந்தழைப்பைக் கடந்து வந்ததும் வானிலிருந்து பொழிந்த ஒளியால் விழிகள் குருடாயின. கண்ணீரை ஆடையால் துடைத்தபடி “பார்த்து கால் வையுங்கள். மரக்குற்றிகள் உள்ளன” என்றாள் சுபகை. “இப்பாதை எனக்கு நன்கு தெரிந்ததுதான் செவிலி அன்னையே” என்றான் காவலன். “யானை! விரைந்தோடு யானை!” என்றான் சுஜயன். கண் தெளிந்ததும் அவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78791/

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 4

பகுதி ஒன்று : கனவுத்திரை – 4 மண் சாலையின் பள்ளங்களிலும் உருளைக் கற்களிலும் சகடங்கள் ஏறி இறங்க அதிர்ந்து சென்ற தேரில் சுஜயன் துயில் விழிக்காமலேயே சென்றான். ஒவ்வொரு அசைவுக்கும் அவனுள் ஏதோ நிகழ்ந்து கொண்டிருந்தது. “பறவைகள்” என்றான். அவனுள் சூழ்ந்து பறக்கும் பெருங்கழுகுகளை சுபகை கற்பனையில் விரிப்பதற்குள்ளேயே “மலையில் யானைகள்” என்றான். அச்சொற்கள் அவளை எண்ணமாக வந்தடைவதற்குள்ளேயே “அருவி” என்றான். சுபகை முஷ்ணையை நோக்கி “உள்ளே பல இளவரசர்களாக பிரிந்து பல உலகங்களை சமைத்துக்கொள்கிறார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78563/

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ -3

பகுதி ஒன்று : கனவுத்திரை – 3 அஸ்தினபுரியில் இருந்து நாற்பது காதம் தொலைவில் கங்கைக் கரையின் குறுங்காட்டுக்குள் அமைந்திருந்தது மாலினியின் தவக்குடில். பெருநகரிலிருந்து கிளம்பி கங்கை படித்துறைக்கு வந்து, அங்கிருந்து கரையோரமாகவே செல்லும் சிறிய படகில் நீரொழுக்கிலேயே சென்று, கங்கைக்குள் நீட்டி நின்றிருந்த பாறை ஒன்றின்மேல் அமைக்கப்பட்டிருந்த சிறிய படகு மேடையை அடைந்து, கரையேறி அங்கிருந்து காலடிப் பாதை வழியாக சென்று அக்குடிலை அடையவேண்டும். சுபகையும் முஷ்ணையும் சுஜயனுடன் கருக்கிருட்டிலேயே கிளம்பிவிட்டனர். அவன் முந்தைய நாள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78559/

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 1

பகுதி ஒன்று : கனவுத்திரை – 1 அஸ்தினபுரியின் குருகுலத்து சுபாகுவின் மகன் சுஜயன் தனது யவன வெண்புரவியை கடிவாளத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தி உடைவாளை உருவி வலக்கையில் ஏந்தியபடி தலை நிமிர்ந்து அதுவரை தன்னை தொடர்ந்து வந்த ஏழு பெருங்கழுகுகளை ஏறிட்டான். அவற்றில் நான்கின் கால்களில் பேருடல் கொண்ட காட்டு யானைகள் உகிர்களால் கவ்வப்பட்டிருந்தன. துதிக்கைகளைச் சுழற்றியும் கால்களை காற்றில் தூக்கி வைத்து நடக்க முயன்றபடியும் பிளிறி குறிய வால் சுழற்றி அவை விண்ணில் தவித்தன. மரக்கலங்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78499/