Tag Archive: முரளி

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 53

ஏழு : துளியிருள் – 7 பிரலம்பன் அபிமன்யூவுடன் சேர்ந்துகொள்ள இருவரும் கூடத்திலிருந்து வெளியே சென்றனர். வளைந்த கூரைகொண்ட அகன்று நீண்ட இடைநாழியின் இருபுறமும் வீரர்கள் சுவரோடு சேர்ந்து அணிவகுத்து நின்றனர். அப்பால் கால்வாயில் நீர் அணைவதுபோல மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் வந்தன. அபிமன்யூ முன்னால் சென்று அவர்களின் முகப்பில் நின்றுகொண்டான். அவர்கள் அவன் வருகையின் நோக்கத்தை உணர்ந்தவர்கள் என உயிர்ப்பசைவு கொண்டனர். வாழ்த்தொலியும் மங்கல இசையும் மெல்ல வலுத்து ஓங்கிக்கொண்டிருந்தன. அரண்மனையும் கூடங்களும் அவ்வோசையை ஏற்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103589/

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 48

ஏழு : துளியிருள் – 2 துவாரகையின் அரண்மனை முகப்பு வழக்கத்திற்கும் மேலாக ஒளிகொண்டிருந்தது. இரவுகளில் அரண்மனையின் கீழ்அடுக்கின் மீன்எண்ணெய் விளக்குகள் மட்டுமே சுடர் கொண்டிருக்கும். அன்று மேலும் மூன்று அடுக்குகளிலிருந்த அனைத்து விளக்குகளும் ஏற்றப்பட்டிருந்தன. சுடர்நிரை கடற்காற்றில் நெளிந்தாட அலைமேல் நிற்கும் பெருங்கலம்போலத் தோன்றியது மையமாளிகை. செந்நிற ஒளி சகடங்கள் ஓடித்தேய்ந்த கற்கள் பரவிய முற்றத்தில் விழுந்து நீண்டு அங்கு அலையிலா நீர்கொண்ட குளமொன்றிருப்பதைப்போல் விழிகளுக்குக் காட்டியது. வழக்கமாக அரண்மனை முகப்பில் நின்றிருக்கும் பல்லக்குகளும் தேர்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103459/

வண்ணக்கடல் – முரளி

அன்புள்ள ஜெயமோகன் , வண்ணக்கடல் படிக்கும் பொழுது சுழற்சியில் சிக்கியவன் போல இருந்தேன் ,படித்து முடித்த பிறகு சுழற்சி நின்று நிரோடத்தின் அடியில் வண்டல் படிவது போல செழுமையான ஒரு அடித்தளம் கிடைத்தது.இளநாகன் உலகம் முற்றிலும் யாதர்த்த நடையும் ,மூலக்கதை மந்திர உலகில் இருபது போல வடிவம் கொண்டுள்ளது ,மேலும் இளநாகன் வரும் பகுதிகள் ஒரு சிறு முன்னுரை போன்றும் ,பாரதத்தின் நில அமைப்பையும் அங்கிருந்த குலக்கதைகளையும் கூறுவது சிறப்பான ஒன்று .வாசகனின் கற்பனைக்கு சவால் விடும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61462/

முரளியின் மகன்

கனடாவில் வாழும் நண்பர் முரளி நான் மிக நெருக்கமாக உணரும் சிலரில் ஒருவர். அவரது எளிமையான உணர்ச்சிகரமான மனநிலை அவர்மீது பெரியதோர் ஈர்ப்பை உருவாக்கக் கூடியது. அந்த நெகிழ்ச்சியுடன் மட்டுமே அவரை எப்போதும் நான் எண்ணிக்கொள்கிறேன். ஆனால் காய்த்துப்போன அவரது கரங்களை பிடிக்கையில் அவரது இன்னொருபக்கமும் மனதுக்குள் ஓடும். மிகமிக அலைக்கழிப்பான வாழ்க்கை கொண்டவர் முரளி. விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமான பொறுப்புகளில் இருந்தவர். ஐரோப்பாவில் பலநாடுகளில் பணியாற்றியிருக்கிறார். பலநாடுகளின் சிறைகளில் இருந்திருக்கிறார். பலநாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். முரளி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31305/

முரளி:கடிதங்கள்

அன்புள்ளா ஜெ, முரளி குறித்து நீங்கள் எழுதிய அஞ்சலிக்கட்டுரை வாசித்து மனம் நெகிழ்ந்தேன். அதிகமாக மலையாளப் படங்கள் பார்க்கும் எனக்கு அவர் மிகவும் பிடித்த நடிகராக இருந்தார். அவரது நடிப்பை கிரீடம் வாத்ஸ்லயம் வளையம் போன்ற பல படங்களில் கண்டு வியந்திருக்கிறேன். ஆகாசதூது என்ற படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டிருக்கிறேன். நம்மை விட்டுப்பிரிந்த மகா கலைஞனுக்கு கண்ணீர் அஞ்சலி வேலு சாமிநாதன் சென்னை [மொழியாக்கம்]   வடக்கு முகம் நாடக் நூலின் முன்னுரையில் முரளியைப் பற்றிய குறிப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3653/

முரளி

அஞ்சலி இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு நான் என் அலைச்சல் நாட்களில் ஒருமுறை திருவனந்தபுரம் போத்தன்கோடு கருணாகர சுவாமிகளைப் பார்க்கும்பொருட்டு சென்றுவிட்டு சந்திப்பு சற்றே கசப்பாக முடிய மனச்சோர்வுடன் திரும்பும்போது தற்செயலாக அறிவிப்பை பார்த்துவிட்டு சி.என்ஸ்ரீகண்டன் நாயர் எழுதிய புகழ்பெற்ற நாடகமான ‘லங்காலட்சுமி’யை பார்க்க ஓர் அரங்குக்குள் நுழைந்தேன். சி.என்.ஸ்ரீகண்டன் நாயரைப்பற்றி பி.கெ.பாலகிருஷ்னன் எழுதியிருக்கிறார், என்னிடமும் சொல்லியிருக்கிறார். ஆற்றூர் ரவிவர்மாவும் அவரது நண்பரான எம்.கங்காதரனும் சொல்லியிருக்கிறார்கள். அதெல்லாம் மேலும் பலவருடம் கழித்து. மலையாள நாடக ஆசிரியர்களில் இருவர்தான் முக்கியமானவர்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3624/