Tag Archive: முன்னுரை

இன்று பெற்றவை : எழுத்தாளனின் டைரி

எப்போதும் காவலாக… சீராக நாட்குறிப்பு எழுதும் வழக்கம் உள்ளவன் நான். தியானம் பயின்ற காலகட்டங்களில் தனியாக தியான அனுபவம் சார்ந்த பதிவுகளை எழுதியிருக்கிறேன். அவை இப்போது வாசிக்கையில் ஆர்வமூட்டும் விஷயங்களாக உள்ளன. ஏதோ ஒரு தருணத்தில், அவன் என்னிடமுள்ள தொடர்பை போதுமான அளவுக்கு இழந்து காம்பு கனிந்து உதிரும்போது, நூலாகலாம். இந்தக் குறிப்புகள் நானே வெவ்வேறு தருணங்களில் எழுதியவை. இதழ்களிலும் இணையத்திலும். தொடர்ச்சியாக எதிர்வினைகள் ஆற்றுபவன் நான். என்னுடைய கருத்துக்களை பதிவுசெய்ய எப்போதுமே தயங்கியவனல்ல. பலசமயம் எழுத்தாளர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5499

'நலம்' சிலவிவாதங்கள்

உடலை அவதானித்தல் பல வருடங்களுக்கு எம்.கோவிந்தன்,சுந்தர ராமசாமி வழியாக காந்திமீது ஈடுபாடு வந்த காலகட்டத்தில் ஒருநாள் இரவு காந்தியின் ஒருவரி என்னை அதிரச்செய்தது. நுண்ணுணர்வுள்ள ஒருவனுக்கு அவனுடைய சொந்த உடல் மிக மூக்கியமான தடையம் என்கிறார் காந்தி. அதன் வழியாக அவன் தன்னை ஆளும் பிரபஞ்ச விதிகளில் பலவற்றைப் புரிந்துகொள்ள முடியும். அந்த வரிக்குப்பின்னால் நான் வெகுதூரம் சென்றேன். நான் அந்த நாள் வரை உடலைக் கவனித்ததே இல்லை. என் உடல் என் மனத்தை நான் போட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5494

'சிலுவையின் பெயரால்' கிறித்தவம் குறித்து..

  கண்ணீரும் குருதியும் சொற்களும்.. கிறித்தவர்கள் சூழ்ந்த கிராமத்தில் பிறந்து வளார்ந்தவன் நான். மிகச்சிறு வயதிலேயே கிறித்தவ தேவாலயங்களுக்குச் செல்லவும் கிறித்தவ பிரார்த்தனைகளில் ஈடுபடவும் ஆரம்பித்துவிட்டேன். என் வாழ்க்கையின் மிக ஆதாரமான பாதிப்புகளில் ஒன்று பைபிள். நான் வாசிக்க ஆரம்பித்த ஆரம்பகால நூல்களில் அது ஒன்று. எங்கள் வீட்டில் இருந்த கரிய தோலட்டை போட்ட , பக்கவாட்டுத்தாள் மட்கிச்சுருண்ட பைபிளை இப்போதும் நினைவுகூர்கிறேன். அதில் ஓடிய பூச்சித்துளைகள் பழுப்புநிறக் கறைகள் என் அம்மா அடிக்கோடிட்ட வரிகள். என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5492

'புதியகாலம்' சில சமகால எழுத்தாளர்கள்

முன்னுரை புதிய எழுத்து தமிழில் சென்ற பத்தாண்டுகளில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க ஆக்கங்களைப்பற்றியும் ஆசிரியர்களைப்பற்றியும் இக்கட்டுரைகள் பேசுகின்றன. எழுத்தாளர்கள் சமகால எழுத்தாளர்களைப் பற்றி விமரிசனம்செய்வது சிக்கலானது. அதிலும் அவர்கள் நம்முடைய அதே வயதை ஒட்டியவர்கள் என்றால் இன்னும் சிக்கல்.ளவர்கள் ஏதோ ஒருவகையில் நம்முடன் தங்களை ஒப்பிட்டபடியே இருக்கிறார்கள். விரும்பியோ விரும்பாமலோ அந்த ஒப்பீட்டின் பகுதியாகவே இந்த விமரிசனங்கள் ஆகிவிடும். ஆனாலும் எழுதத்தூண்டிய காரணங்கள் சில உண்டு. சமகாலத்தில் வந்த பல முக்கியமான ஆக்கங்கள் எளிய மதிப்புரைகள் வழியாக தாண்டிச்செல்லப்பட்டன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5489

‘பண்படுதல்’ பண்பாட்டு விவாதங்கள்

  பண்படும் தருணங்கள்… கல்ச்சர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பண்பாடு என்ற சொல்லை உருவாக்கியவர் எவரெனத்தெரியவில்லை. ரசிகமணி டி.கெ.சிதம்பரநாத முதலியார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நவீன அர்த்தத்தில் அது பொருந்தாத ஒன்று. ஆகவேதான் ஆயுதப்பண்பாடு வன்முறைப்பண்பாடு என்றெல்லாம் பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. ஆனால் என் நோக்கில் அச்சொல்லாட்சியில் உள்ள நுட்பமான நம்பிக்கைநோக்கு மிகமிக உவப்பானதாக உள்ளது. மானுட இனம் மேலும் மேலும் பண்பட்டபடித்தான் வருகிறது என நான் நம்புகிறேன். கடந்த நூறாண்டுகளில் மனிதகுலத்தில் உருவாகிவந்த கருத்துக்களை வைத்தே இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5486

‘முன்சுவடுகள்’ சில வாழ்க்கைவரலாறுகள்

முன்னுரை முன்னால்சென்றவர்கள்…   உலகம் முழுக்க வாழ்க்கை வரலாறுகள் சமீபகாலமாக அதிகம் விற்கின்றன. காரணம் வாழ்க்கை புனைவின் சாத்தியங்களை எல்லாம் மீறியதென்பதே. இந்தியாவில் எழுதப்பட்ட எந்த ஒரு நாவலைவிடவும் காந்தியின் வாழ்க்கை உத்வேகமானது, தீராத மர்மங்கள் கொண்டது. கவித்துவமானது. மாபெரும் துயரக்காவியம் போன்றது.   ஒருகட்டத்தில் மனம் புனைவுகளை அவநம்பிக்கையுடன் பார்க்க ஆரம்பிக்கிறது. அந்த அவநம்பிக்கையை தன் புனைவுத்திறனால் வென்று உள்ளே வரக்கூடிய ஆக்கங்களை மட்டுமே நாம் ஏற்க முடிகிறது. அந்த அவநம்பிக்கையை உருவாக்காத, புனைவுக்கு நிகரான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5484

தன்னுரைத்தல்

  பொதுவாக மேடைகளில் உரையாற்ற நான் விரும்புவது இல்லை. ஏனென்றால் நான் மிகவும் மோசமான சொற்பொழிவாளன். என் குரல் சற்று கம்மியது. உரத்த குரலில் ஓங்கிய பாவனைகளுடன் உரையாடவும் எனக்குப் பழக்கம் இல்லை. அனைத்தையும் விட முக்கியமாக, என்னுடைய ஊடகம் எழுத்து. மேடை அல்ல.   எல்லா மேடைகளிலும் ஒரு சிறு மன்னிப்புக் குறிப்புடன்தான் நான் பேச ஆரம்பிப்பேன். சில சமயம் என்னுடைய பேச்சு நன்றாக இருந்தது என்று கூறுவார்கள். சில சமயம் சொதப்பிவிட்டது என்று எனக்கே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1161

நிகழ்தலின் துமி

                இருண்ட காட்டுக்குள் செல்லும்போது குளிர்ந்த கரிய பாறை ஒன்றைப் பார்த்தேன். அது அங்கே மௌனமாக நிகழ்ந்து கொண்டிருப்பதாகப் பட்டது. நம்மைச் சுற்றி இந்த அலகிலாப் பெரும் பிரவாகம், பிரபஞ்சப் பெருவெளி, நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதில் நாமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்தப் பாறை ஒரு ரிஷி போல. அத்வைதத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்த யோகி. அதன்மீது சருகுகள் பெய்கின்றன. மழையும் பனியும் வெயிலும் நிழல்களும் பொழிகின்றன. காற்று தழுவிச் செல்கிறது. காலம் அதன்மீது பெருகிச் செல்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1167

செவ்வியலின் வாசலில்

       சென்ற நான்கு வருடங்களில் நான் எழுதிய கதைகள் இந்தத் தொகுதியில் உள்ளன. நடுவே இரண்டரை ஆண்டுக்காலம் எதுவும் எழுதாமலிருந்தேன். இதில் உள்ள முக்கால்பகுதி ஆக்கங்கள் இந்த 2008இல் இரண்டு மாதங்களிலாக எழுதப்பட்டவை. அது என் இயல்பு. ஒரு தீவிர மனஎழுச்சிக்கு ஆட்பட்டு அது முடிவடையும் வரை எழுதிக்கொண்டே இருப்பேன்.     இத்தொகுதியில் உள்ள கதைகளில் இப்போது நான் காணும் பொது அம்சம் ‘கதை’தான். சோதனை முயற்சிகளில் முற்றாகவே ஆர்வம் இழந்துவிட்டேன். இலக்கியச் சிடுக்குகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1164

கதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ‘ பகடையாட்டம் ‘

இலக்கியப் படைப்புகளை அவற்றின் உருவாக்க முறையை ஒட்டி இருவகையாகப் பிரிக்கலாம். 1. வாழ்க்கையிலிருந்து அனுபவங்களை நேரடியாகப்பெற்று நேரடியாகவே பதிவுசெய்யும் ஆக்கங்கள். 2. கேட்டறிந்த அல்லது வாசித்த கதைகளில் இருந்து கற்பனையான வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டு அவற்றை பலவாறாக உருமாற்றியும் பின்னியும் மறுபுனைவு செய்யும் ஆக்கங்கள். பொதுவாக நாம் முதல்வகை ஆக்கங்களையே மேலானவை என்று நம்ப பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறோம். ‘வாழ்க்கையின் அப்பட்டமான பிரதிபலிப்பு ‘ ‘ வேர்மண் வாசனை கொண்ட படைப்பு ‘ ‘ ரத்தமும் சதையுமான வாழ்க்கை ‘ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56

Older posts «

» Newer posts