Tag Archive: முன்னுரை

சாக்கியார் முதல் சக்கரியா வரை

 [ 1 ] மலையாள இலக்கியம் பற்றித் தமிழில் நிறையவே சொல்லப்பட்டுள்ளது. புதுமைப்பித்தன் கதைகள் அல்லது மெளனி கதைகள்கூட இன்னும் மலையாளத்தில் மொழபெயர்க்கப்படவில்லை. நமக்கு பஷீரும், தகழியும், கேசவதேவும். பொற்றெகாட்டும் நன்கு அறிமுகமான படைப்பாளிகளாக இருக்கிறார்கள். எல்லைப்புற மாவட்டங்களான கோவை மற்றும் குமரியிலிருந்து வந்த எழுத்தாளர்கள் நிறைய மலையாள ஆக்கங்களை தமிழுக்குத் தந்திருக்கிறார்கள். சி.ஏ.பாலன், சிற்பி, சுகுமாரன், குறிஞ்சிவேலன், நீல.பத்மநாபன், ஆ. மாதவன், சுந்தர ராமசாமி, நிர்மால்யா, ஜெயஸ்ரீ, சுரா, சாலன் என மலையாளத்தில் இருந்து தமிழுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/462

காட்டிருளின் சொல்

இளவயதில் நான் மிக ரசித்த கதகளிகளில் ஒன்று கிராதம். காட்டுமிராண்டித்தனம் என தமிழ். காட்டுமிராண்டியோ தென்னாடுடைய சிவன். எங்கள் ஊர்மையத்திலமைந்த மகாதேவன். அர்ஜுனனுக்கும் சிவனுக்குமான அந்த போர்க்களியாடலை பலமணிநேரங்களுக்கு வளர்த்துக்கொண்டுசெல்வார்கள். அர்ஜுனன் ஏவிய பிரம்மாஸ்திரத்தைப் பிடித்து காதுகுடைந்து மயங்கும் காட்டாளனைப் பார்த்து சிரித்துத் துவண்டிருக்கிறேன் பின்னர் காட்டாளன் அர்ஜுனனுக்கு வழங்கிய பாசுபதம் என்பது ஒரு தத்துவம், ஒரு வழிபாட்டு முறை எனத் தெரிந்துகொண்டபோது அந்த கதகளி என்னுள் பலவாறாகத் திறந்துகொள்ளத் தொடங்கியது. நம் மரபின் அடித்தட்டில் இருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96609

குருகுலமும் கல்வியும்

ஒன்று உலகம் முழுக்க குருகுலக் கல்விமுறையே நெடுங்காலம் கல்விக்கான உகந்த வழிமுறையாக இருந்துவந்துள்ளது. கீழைநாடுகளில் குறிப்பாக கீழைஆன்மீக அமைப்புகளில் குருகுலக்கல்வி அதன் உச்சநிலைநோக்கி எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வகுக்கும் இந்தியமரபு தெய்வத்துக்கு அடுத்தபடியில் குருவையே வைக்கிறது. அதாவது மானுடரில் உயர்ந்தவர் குருவே. குருவே பிரம்மா, குருவே விஷ்ணு, குருவே மகாதேவன் என்ற பிரபலமான மந்திரம் குருவை ‘ஆக்கிக்காத்தழிக்கும்’ முத்தெய்வங்களும் ஒன்றானவன் என்கிறது. இதற்கு இணையான முக்கியத்துவம் ஜென் மரபிலும் குருவுக்கு இருப்பதைக் காணலாம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/204

சாகசம் எனும் தியானம்

      என்னிடம் வரும் புதியவாசகர்களில் கணிசமானவர்கள் அவர்கள் என் புனைவுலகுக்குள் நுழைந்தது ஊமைச்செந்நாய் என்னும் கதைவழியாக என்று சொல்வதுண்டு. இணையத்தில் அக்கதை வெளியானது. ஆகவே தொடுப்புக்கள் வழியாக அதை நண்பர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள முடிந்தது. இலக்கியமறியாத வாசகர்களையும் அது சென்றடைந்தது அத்துடன் அது ஒரு பொதுவாசகன் உத்வேகமிக்க கதையாக வாசிக்க உகந்த படைப்பு. இலக்கியவாசகன் அதன் நுண்பிரதிகளைத்தேடிக் கண்டடையமுடியும். பொதுவாசகன் தேடும் மாறுபட்ட கதைக்களம், மிகுபுனைவுத்தன்மை, சாகசம் ஆகியவையும் உச்சகட்டப்புள்ளியும் கொண்டது. சாகசம் என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85049

நீலமெனும் வெளி

நீலம் ஒரு கனவு போல என்னிடமிருந்து வெளிப்பட்ட நாவல். மகாபாரத நாவல்வரிசையில் அது மட்டும் ஓர் உச்சம். அதை பக்தி என்றோ பித்து என்றோ சொல்லவிரும்பவில்லை. அவை வெறும் சொற்கள். அத்தருணத்தில் அது என்னில் நிகழ்ந்தது. ஊமையன் பாடத்தொடங்கியது போல. இன்று அதை வாசிக்கையில் என்னிடமிருந்து மிக அப்பால் நின்றிருக்கிறது, எட்டமுடியாத உச்சியில் காலைப்பொன்னொளியில் நின்றிருக்கும் கயிலை முடி போல. நீலனை தன் பெரும்பிரேமையால் ராதை உருவாக்கி எடுப்பதன் கதை அது. பிரேமையே அருவாகிய அதற்கு அழகிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77808

அசடனும் ஞானியும்

ஓர் உரையாடலில் நித்யா சொன்னார், சராசரித்தனத்துடன் இடைவெளியில்லாத மோதலையே ஞானத்தின் பாதை என்கிறோம் என. நம் உடல், நம் மூளை ,நம் சூழல் ஆகிய அனைத்தும் நம்மைப் பிறரைப்போல் ஆக்குகின்றன. ஆகவே அனைவரும் வாழும் சராசரி வாழ்க்கை ஒன்றையே நாமும் வாழ்ந்தாகவேண்டும்.     ஆனால் முமுட்சு என்பவன்,சராசரியில் ஒருவனல்ல. சராசரி மனிதன் வாழ நினைக்கும்போது வாழ்வை அறிய நினைப்பவன் அவன். சராசரி மனிதன் இன்பத்தை நாடும்போது அறிதலின் பேரின்பத்துக்காக அனைத்து இன்பங்களையும் கைவிடத் துணிந்தவன் அவன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16880

இரவு, முன்னுரை

நடராஜகுருவின் சுயசரிதையில் ஓர் இடம் வருகிறது. அவர் ஐம்பதுகளில் லண்டன் செல்லும்போது சிலரை சந்திக்கிறார். அவர்கள் பகலில் முழுக்க தூங்கி இரவில் மட்டுமே விழித்திருப்பவர்கள். பகல் வெளிறியது, அழகற்றது என்று சொல்லும் அவர்கள் அழகுணர்வுள்ளவர்களுக்கு இரவே உகந்தது என்கிறார்கள். நமக்கு வேண்டியவற்றின் மீது மட்டும் வேண்டிய அளவுக்கு மட்டும் ஒளியை விழச்செய்யலாம் என்பதே அதன் அழகு என்கிறார்கள் . ஒருவகையில் அது நம் யோகமரபில் இருக்கிறது. இரவில் விழித்திருத்தல் என்பது யோகத்தின் வழிமுறை. ‘தனித்திரு விழித்திரு பசித்திரு’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10724

கடைத் தெருவின் கலைஞன், முன்னுரை

ஆ.மாதவன் நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். நம்முடைய இயல்புவாத எழுத்தின் சாதனைகளில் ஒன்று அவரது புனைவுலகம். கண்முன் நிகழும் அன்றாட யதார்த்தத்தை ‘அப்பட்டமாக’ சொல்லும் பாவனை கொண்ட இவ்வெழுத்து நம் சமூகப்பிரக்ஞைகளை ஓங்கி அறைந்து அதிரச்செய்திருக்கிறது. அடிப்படை வினாக்களை நோக்கி நம்மை செலுத்தியிருக்கிறது. ஆ.மாதவன் திருவனந்தபுரம் சாலைத்தெருவை களமாகக் கொண்டு எழுதியவர். சாலைத்தெரு அவரது எழுத்தில் காமகுரோதமோகங்களின் கொந்தளிப்பு நிகழும் வாழ்க்கைவெளியாகவே ஆகிவிட்டிருக்கிறது. ஆ.மாதவன் தமிழின் தேர்ந்த இலக்கியவாசகர் நடுவே எப்போதும் முக்கியமான படைப்பாளியாகவே கருதப்பட்டிருக்கிறார். ந.பிச்சமூர்த்தி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9395

அரசியலாதல்

யாராவது அரசியல் என்றாலே ஒருமாதிரி நமைச்சல் கொடுக்கிற இடத்துக்கு நம்மைக் கொண்டு வந்து சேர்த்து விட்டிருக்கிறார்கள். புரட்சிக்கும் கலகத்திற்கும் அடுத்தபடியாக சீரழிக்கப்பட்ட சொல் அது. அதைச் சொன்னாலே கட்சி கட்டி சண்டை போடுவது, எதையும் புரிந்து கொள்ள மறுத்து ஒரேப் பிடிவாதமாக நிற்பது, எதைப்பேசினாலும் ஒரே புள்ளியில் கொண்டுசென்று சேர்ப்பது என்றெல்லாம்தான் நம் அறிவுச்சூழலில் பொருள். அத்துடன் சிற்றிதழாளர்கள் எதற்கெடுத்தாலும் அந்தச் சொல்லை பயன்படுத்துவார்கள். ‘நீங்க சொல்றதுலே அரசியல் இருக்குங்க’, ‘இந்த கதையோட அரசியல் என்னன்னா..’ ‘அவனுக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5718

மேற்குச்சாளரம் -சில இலக்கியநூல்கள்

சாளரத்தருகே அமர்ந்திருப்பவன் இளமையில் ஒருமுறை நான் லிட்டன் பிரபு எழுதிய ‘பாம்பியின் கடைசிநாட்கள்’ என்ற நாவலை நானே திருப்பி எழுதினேன். கிட்டத்தட்ட எண்பது பக்கங்கள். அந்நாவலை வாசித்ததைவிட அபாரமான அனுபவமாக இருந்தது அது. அந்நாவலின் சுருக்கமான மறுவடிவம் ஒன்றை எனக்காக நான் உருவாக்கிக் கொண்டிருந்தேன் என உணர்ந்தபோது மனம் உற்சாகத்தில் மிதந்தது. இந்த நாவல் லிட்டன் பிரபுவுடையதல்ல, நானே உருவாக்கிக்கொண்ட என்னுடைய நாவல். அந்நாவலின் கதையை நான் கல்லூரியில் என்னருகே அமர்ந்திருந்த நண்பன் ஜெயக்குமாருக்குச் சொன்னேன். அவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5650

Older posts «