Tag Archive: முதற்கனல்

நீலமும் இந்திய மெய்யியலும்

அன்பு ஜெயமோகன், வெண்முரசின் எப்பகுதியையும் நான் படித்ததில்லை. மகாபாரதத்தின் கதைத்தொகுதியை உங்கள் எழுத்தின்வழி நீங்கள் அணுகும் முயற்சி மட்டுமே புரிந்திருந்தது. இயல்பான மகாபாரதக் கதைப்போக்கை அப்படியே கொண்டுவருவதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பதையும் நான் அறிந்திருந்தேன். மகாபாரதம் எனும் காப்பியம் ஆதியின் மனிதகுல வரலாற்றைப் புனைவு கலந்து சொன்ன வாய்மொழிக்கதைகளின் தொகுப்பு என்பதான என் புரிதல் அதையும் தாண்டிய தத்துவத்தளத்திற்கு விரியக் காரணமாக இருந்தவர்களில் நீங்களும் ஒருவர். அதற்காக இவ்விடத்தில் உங்களுக்கு நன்றி பகர்கிறேன். எனினும், வெண்முரசில் வெளிப்பட்டிருந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63435

முதற்கனல் – எண்ணங்கள்

மீண்டும் பாரதத்தை எழுதிப்பார்க்கையில் சொல்லாத இடங்களை கற்பனையாலும், பல்வேறு பிற நூல்களின் அறிவாலும் நிரப்பி கொள்ளலாம். அதே சமயம் பாரதம் உருவாக்கியுள்ள பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவை. அவற்றின் ஆளுமைகளைக் கொண்டு பல நூறு கதைகள் புனையலாம். இந்த இரண்டையும் சரியாக சேர்த்து செய்யப்பட்டதுதான் முதற்கனல். ரெங்கசுப்ரமணியின் பதிவு

Permanent link to this article: https://www.jeyamohan.in/57080

அழியா அழல்

  பொன்நிற தாழை மடல்களுக்குள் புகுந்துகொண்ட தன் சகோதரர்களை போல் அதுவும் அன்னை என்றெண்ணி காட்டு தீயில் புகுந்தழிகிறது. மறுபிறப்பில் சந்திர வம்சத்து அரசனாக பிறக்கும் வரம் பெற்ற உசகன் மண்ணில் சந்தனுவாக பிறக்கிறான். அவன் அன்னைக்காக அவளின் அரவணைப்பிற்காக ஏங்கிக்கொண்டே இருக்கிறான். அவன் கங்கா தேவியிடமும் சத்தியவதியிடமும் கூட முட்டி முட்டி அதைத்தான் தேடி திரிந்தானோ? அழியா அழல் – முதற்கனல் பற்றி சுனீல் கிருஷ்ணன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/55887

இதிகாசமா ? புனைவா ?

“நூல்கள் நெறிகளை சொல்கின்றன என்பது பெரும் மாயை. நெறிகளை வளைக்கும் முறைகளை மட்டுமே நூல்கள் கற்பிக்கின்றன.” ஒவ்வொரு மனிதனின் அகமும் ஏதோ ஒரு கோட்டில் இயங்கிக் கொண்டிருகின்றன. உற்று நோக்கினால் எதுவுமே புதியதில்லை. எல்லாமே புராணங்களிலும் காப்பியங்களிலும் சொல்லப்பட்டவையே. அதை அழகுற இந்நாவல் பேசுகிறது. இதிகாசமா ? புனைவா ?

Permanent link to this article: https://www.jeyamohan.in/54614

எரியிதழ் மலேசியாவில் ஒருநாடகம்

வணக்கம், ஐயா! பினாங்கு ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் நாங்கள் [ குறிஞ்சி குழு ] உங்கள் முன் நடித்த உங்கள் முதற்கனலில் இருந்து தேர்வு செய்து நடித்த எரியிதழ் நாடகம், வட மண்டல பிரிவில் அரை இறுதிச் சுற்றுக்கு நடுவர் தேர்வில் முதலாவது நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை தங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம். இந்த பெருமையெல்லாம் தங்கள் எழுத்துக்களின் பெருமையையே பிரதிபலிக்கும்.நன்றி. கோமதி காசிநாதன் more photos

Permanent link to this article: https://www.jeyamohan.in/48767

முதற்கனல் வெளியீடு

வெண்முரசு நாவல் வரிசையின் முதல்நாவலான முதற்கனல் அச்சாகிவிட்டது. அதன் சிறப்புப்பதிப்பு 600 பிரதிகளும் வரும் 11,12 தேதிகளில் நான் கையெழுத்திட்ட பின்னர் பணம்கட்டியவர்களுக்கு அனுப்பப்படும்.சிறப்புப்பிரதிகள் விற்பனைக்கு அல்ல. சிறப்புப்பதிப்பின் பாதி விலைக்கே [ ரூ 300 ] மலிவுப்பதிப்பு வெளியாகிறது. ஏப்ரல் 11க்குப்பின் அது கடைகளில் கிடைக்கும் ஜெ முதற்கனல் நற்றிணை

Permanent link to this article: https://www.jeyamohan.in/48579

அணிவாயில்

மகாபாரதத்தை நான் முதன்முதலாகக் கேட்டது என் தாயிடமிருந்து. பெரும்பாலான இந்தியக் குழந்தைகளின் அனுபவம் அதுவாகவே இருக்கும். ஆனால் எளிய குடும்பத்தலைவியாக இருந்தாலும் என் அன்னை ஒரு அறிஞர். தமிழ் மலையாளம் ஆங்கிலம் அறிந்தவர். மலையாளம் வழியாக சம்ஸ்கிருதத்தையும் குறிப்பிடும்படி அறிந்தவர். உலகஇலக்கியத்திலும் தமிழ்-மலையாள நவீன இலக்கியத்திலும் ஆழ்ந்த வாசிப்புள்ளவர். எழுத்தச்சனின் மகாபாரதத்தை அவர் மூன்றுமுறை முழுமையாகவே வீட்டில் முறைப்படி பாராயணம் செய்திருக்கிறார். அன்று அதைக்கேட்க ஒவ்வொருமுறையும் ஏழெட்டு பெண்கள் வந்து அமர்ந்திருப்பார்கள். அம்மா தன் இனிய மெல்லியகுரலில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47119

முதற்கனல் வடிவம்

அன்புள்ள ஜெமோ, முதற்கனல் புதினத்தை மிகுந்த ஆர்வத்துடன் வாசித்துவந்தேன். கடைசி இரு பகுதிகளிலும் கதை திடீரென்று திரும்பி உடனடியாக முடிந்துவிட்டது என்ற உணர்வை அடைந்தேன். அதன் அமைப்பினை புரிந்துகொள்ள முடியவில்லை. புதினம் நல்ல அருமையான தமிழில் எழுதப்பட்டிருந்தது. மொழிநடையை வாசித்துவாசித்து இன்புற்றேன். ஓசைநயமும் பொருள்நயமும் உள்ள தமிழுக்காகவே வாசிக்கவேண்டிய புதினம். நன்றி. கதிர் அருணாச்சலம் அன்புள்ள கதிர், நன்றி. மகாபாரதத்தை அப்படியே ஒரே தொடர்கதையாக எழுதப்போவதில்லை என முன்னரே சொல்லியிருந்தேன். தனித்தனி நாவல்களால் ஆன ஒரு நாவல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/46780

முதற்கனல் நிறைவு

வெண்முரசு மகாபாரத நாவல்தொடரின் முதல் நாவலான முதற்கனல் இங்கே முடிவுறுகிறது. மகாபாரதத்தின் கதைத் தொடர்ச்சியையும் கதைமாந்தரின் வளர்ச்சியையும் பேணினாலும் கூட ஒவ்வொரு நாவலையும் தன்னளவில் முழுமை கொண்டதாகவே எழுதவிருக்கிறேன். அவ்வகையில் முதல்நாவலான முதற்கனல் வடிவம் சார்ந்தும் தரிசனம் சார்ந்தும் நிறைவுற்றிருக்கிறது என்பதை வாசகர் காணலாம். இந்நாவல் உடனடியாக நற்றிணை வெளியீடாக வரவிருக்கிறது. இந்த மாபெரும் முயற்சியை என் குருவடிவமாக இன்றுள்ளவர்களில் முக்கியமானவரான இளையராஜா அவர்களை நேரில் சென்று பாதம் தொட்டு வணங்கி ஆசிபெற்று எழுதத் தொடங்கினேன். முதல்நாவலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45582

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 12

பகுதி மூன்று : எரியிதழ் [ 3 ] காசிநகரத்தின் சுயம்வரப்பந்தலுக்குள் நுழைந்த பீஷ்மர் அவைமுழுதும் திரும்பிப்பார்க்க தன் வில்லின் நாணை ஒருமுறை மீட்டிவிட்டு “ஃபால்குனா, நான் குருகுலத்து ஷத்ரியனான தேவவிரதன். எனக்குரிய ஆசனத்தைக்காட்டு” என்று தன் கனத்த குரலில் சொன்னார். மன்னனின் அருகே நின்றிருந்த அமைச்சர் திகைத்து மன்னனை ஒருகணம் பார்த்துவிட்டு இறங்கி ஓடிவந்து கைகூப்பி “குருகுலத்தின் அதிபரான பீஷ்மபிதாமகரை வணங்குகிறேன். தங்கள் வருகையால் காசிநகர் மேன்மைபெற்றது…தங்களை அமரச்செய்வதற்கான இருக்கையை இன்னும் சிலகணங்களில் போடுகிறேன்” என்றார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/44108