Tag Archive: முங்கி ரி ராம்

சூரியதிசைப் பயணம் – 9

18-ஆம்தேதி புதன்கிழமை. நாங்கள் கிளம்பி வந்து ஐந்துநாட்கள்தான் ஆகின்றன. ஆனால் ஒரு புதிய பண்பாட்டின் புதிய நிலத்தின் வாழ்க்கைக்குள் இருந்தமையால் காலம் பலமடங்கு விரிந்து நீண்டு விட்டிருந்தது. கௌஹாத்தியே கடந்தகாலத்தின் தொலைவில் எங்கோ தெரிந்தது. காலையில் எழுந்து அஸ்ஸாமிய கருப்பு டீ அருந்திவிட்டு குளிராடைகளை அணிந்துகொண்டு சிவன்கோயிலுக்கு சென்றோம். அதிகாலையிலேயே ஆலயவளாகம் உயிர்பெற்றிருந்தது. வணிகர்களும் பிச்சைக்காரர்களும் தொழிலை தொடங்கிவிட்டிருந்தனர். அனைவருமே பிகாரிகள். அஹோம் மக்களும் போடோ மக்களும் சிறுவணிகம் செய்வதையும் பிச்சை எடுப்பதையும் வெறுப்பவர்கள். அவர்கள் பொய் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71797