Tag Archive: முகுந்த் நாகராஜன்

இசையின் வரிகள்

ஒவ்வொரு காலகட்டத்திலும் கவிதைவாசகர் ஒரு பிரமிப்பை அடைவார். ‘இனிமேல் கவிதையில் என்ன எழுத இருக்கிறது?’ அந்தப்பிரமிப்பிலிருந்துதான் ‘கவிதை செத்துவிட்டது’ என்ற வழக்கமான பல்லவி எழுகிறது. எனக்கே அடிக்கடி அப்படித்தோன்றும். ஆனால் கவிதை என்ற வடிவத்தை உருவாக்கிய ஆதிகாரணம் மனித மனதுக்குள் வேர் போல இருந்துகொண்டேதான் இருக்கும் என்று நினைப்பேன். அதிலிருந்து கவிதை எப்போதும் புதியதாக முளைக்கும் என்றும். இந்தச்சலிப்புக்கு இரண்டுகாரணங்கள். ஒன்று மேலான கவிதை அடையும் உச்சத்தை நாம் அறிவது. இரண்டு அந்த உச்சம் ஒரு வடிவமாகச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41567

க்ருஷ்ணன் நிழல்:முகுந்த் நாகராஜன்

சிற்றிதழ்க் கவிதைகளை வாசிப்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அனுபவம் இருக்கும். கவிதைப்பக்கங்களில் கவிஞர்களின் பெயர்கள் பக்கவடிவமைப்பின் இயல்பால் உடனே கண்ணில் படாதபடி அச்சிடப்பட்டிருக்குமென்றால் எந்தக் கவிதை எவர் ஆக்கியது என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. பலசமயம் ஒருவர் கவிதையை இன்னொருவர் கவிதையாக எண்ணி விடுவோம். காரணம், எல்லா கவிதைகளும் மொழியிலும் அமைப்பிலும் கூறுமுறையிலும் ஒன்றே போலிருக்கின்றன. நவீனத்தமிழ்க்கவிதை நவீனத்துவக் கவிதையாகவே இருக்கிறது என்பது  என் எண்ணம். தனிமனித அவ மன ஓட்டங்களை  தத்துவார்த்தமான நிலையில் இறுக்கமான மொழியில் படிமங்களை பயன்படுத்திச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1975

கேள்வி பதில் – 72

கடந்த ஒரு வருடத்தில் வந்த கவிஞர்களை தயவுசெய்து பட்டியல் இடமுடியுமா? தாங்கள் கவிதைக்குக் கொடுத்திருக்கும் அர்த்தத்திற்கும் தினம் தினம் கவிஞர்கள் வருகையை ஆதரித்ததற்கும் உடன்பாடு இருப்பதாகத் தெரியவில்லையே! — கஜன். கடந்த ஒருவருடத்தில் வந்த கவிஞர்களைப் பட்டியலிடவேண்டுமென்றால் நான் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பட்டயச் சன்றிதழ் ஏதும் பெற்றிருக்கவேண்டும். வருடம் நூறு தொகுப்புகளுக்குக் குறையாமல் வெளிவருகின்றன. முக்கியமான கவிஞர்கள் என்றால் என் கணிப்பைச் சொல்லலாம். முதற்தொகுப்புகள் மூலம் சென்றவருடம் முக்கியமாக கவனத்துக்கு வந்தவர்கள் உமாமகேஸ்வரி ‘வெறும்பொழுது’ [தமிழினி பதிப்பகம்], …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126