Tag Archive: முகம் ஐந்துடையாள்

முகம் ஐந்துடையாள்

பிரயாகை என்ற இந்நாவல் வெண்முரசு நாவல்வரிசையில் முதற்கனல்,மழைப்பாடல்,வண்ணக்கடல்,நீலம் ஆகியவற்றுக்குப்பின் ஐந்தாவது. ஒரு தனிநாவலாக இது திரௌபதியின் பிறப்பின் பின்னணியையும் அவளுடைய ஆளுமையின் முழுமையையும் சொல்லி முடிகிறது. அதன் ஒழுக்கில் வாழ்க்கையை ஆட்டுவிக்கும் நுண்ணுணர்வுகளை வஞ்சங்களை விழைவுகளை விரித்துரைத்துச் செல்கிறது. மகாபாரதம் காட்டும் தரிசனங்களில் முக்கியமானது வாழ்க்கையின் நிகழ்ச்சிகள் ஒன்றுடன் ஒன்று தொட்டுத்தொட்டுச் சென்று ஒட்டுமொத்தமாக ஒரு முழுமையை உருவாக்கும் விந்தை. தனித்தனியாக நோக்கினால் அவையனைத்தும் தற்செயல்கள் எனத் தோன்றலாம். தொகுத்து நோக்குகையில் பெரும் கோலம் ஒன்று தெளிந்துவரும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72760