Tag Archive: முகம்

நான் தேர்ந்தெடுத்த முகம்

அசோகமித்திரன் ஒருமுறை எழுதினார், நம் புகைப்படங்கள் நமக்கு அழகாக தெரியவேண்டும் என்றால் நமக்கு அப்படத்தில் இருப்பதைவிட அதிக வயது ஆகவேண்டும் என்று. நாம் நம்மைப்பற்றிக் கொண்டிருப்பவற்றை நம் படங்கள் காட்டுவதில்லை. அதிலும் முகக்கண்ணாடியை கூர்ந்து பார்க்கும் வழக்கமில்லாத, நான்குநிமிடத்தில் கையால் தடவியே சவரம் செய்துகொண்டு விரையும் எனக்கு புகைப்படங்கள் விதவிதமான அதிர்ச்சிகளை அளிப்பவை. சென்றமாதம் வெண்முரசு எழுதத்தொடங்கி இருபதுநாள் வீட்டிலேயே இரவுபகலாக எழுதிக்கொண்டிருந்தேன். சவரம் செய்யவில்லை. நாளிதழ்கள் படிக்கவில்லை. மாலைகளில் அஜிதனுடன் ஒரு நீண்ட நடை தவிர …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/46362