Tag Archive: முகங்களின் தேசம்

மோகினி

  அஸாமின் முக்கியமான சுற்றுலா மையங்களில் ஒன்று மாஜிலி என்னும் நதித்தீவு. பிரம்மபுத்திரா இரு பகுதிகளாகப்பிரிந்து மீண்டும் சென்று இணையும்போது நடுவே சிக்கிக்கொண்ட நிலம். உண்மையில் பிரம்மபுத்திராவின் வண்டலால் உருவான மேடு இது. அடிக்கடி பெருவெள்ளம் எழுந்து இந்தத்தீவை மூழ்கடிக்கிறது. வெள்ளத்தால் பயிர்களும் கால்நடைகளும் இறப்பது என்றும் உள்ள அபாயம். ஆனாலும் அங்குள்ள வளம் மிக்க மண் அங்கே மனிதர்கள் குடியேறுவதை ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கிறது. மிக மக்கள்ச்செறிவுள்ள பல கிராமங்கள் இங்குள்ளன. வீடுகள் பெரும்பாலும் உயரமான மூங்கில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92619

வழிப்போக்கர்கள்

  எண்பதுகளில் தர்மபுரியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது திருவண்ணாமலைக்கு அடிக்கடி சென்று கொண்டிருந்தேன். எவ்வகையிலோ அந்த ஊருடன் எனக்கொரு ஈர்ப்பும் ஒவ்வாமையும் உண்டு. நான் கல்லூரி இறுதியாண்டு படிப்பை முடிக்காமல் துறவியாகும் பொருட்டு வீட்டை விட்டுக் கிளம்பி அலைந்து திரிந்த நாட்களில் பழனியிலும் பின்பு திருவண்ணாமலையிலும் இருந்திருக்கிறேன். அந்த ஊரின் வெயிலும் வரண்டநிலமும் எனக்கு ஒவ்வாதாயின. அங்கு நான் இருந்த ஒரு சிறு காலகட்டத்தின் நினைவுகள் இனிதாயின.   திருவண்ணாமலைக்கு எண்பத்தொன்றில் என்னை மலையாளத்துச்சாமி என்று அழைத்த பாண்டிச்சாமி என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92612

தாயுமாதல்

  மத்தியப்பிரதேசத்திலுள்ள ஜான்சி ரயில் நிலையம் மிகப்பிரமாண்டமானது இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் ரயில் பாதைகள் அங்குதான் சந்தித்துக் கொள்கின்றன. அது ஒரு சிலுவையின் மையம் போல. அந்த ஊர் அந்த ரயில்வே நிலையத்து அளவுக்கு பெரியது அல்ல. அன்று அது பெரும்பாலும் தகரக் கூரையிட்ட சிறிய வீடுகளும், குப்பைக் கூளங்களும் இடிபாடுகளும், மிகப்பழமையான கட்டிடங்களும் கொண்ட புழுதிமூடிய ஊர். அவ்வூருக்கு சற்று அப்பால் பிரம்மாண்டமான ஜான்சி கோட்டை இருந்தது. ஜான்சி ஊரின் சிறப்பு அங்கு ஜான்சி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88911

முகங்களின் தேசம் கடிதங்கள்

  ஜெ, நலமா?..  இந்தியப் பயணம் மிக கம்பீரமாய் நெகிழ்வாய் தொடங்கியிருக்கிறது.வெகுஜன இதழில் மிக ஆழமான எழுத்தின் தேவை என்ன என்பதை அழுத்தமாய்  உணர்த்துகிறது. சாதவாகனர்களின் அரசு நானோகாட் கணவாய் என்று முதல் பகுதியே மிக அழகாக வந்திருக்கிறது.எப்பொழுதும் உங்கள் பயணக்கட்டுரைகளை மிகவும் ரசித்து வாசிப்பேன்.மிக இயல்பாகத் தொடங்கி நுட்பமாய் விவரங்களைச் சொல்லிச் செல்கிறீர்கள். அமுதசுரபி எனும் அறம் எளிய மனிதர்களிடமே  இருக்கிறது என்ற வரி என்னை நெருக்குகிறது எனலாம்.ஆம் அத்தகைய மனிதர்களை வாழ்வில் தரிசிப்பவர்களுக்கே அது புரியும்.இந்தியாவின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83311