Tag Archive: மித்திரவிந்தை

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 91

பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி – 4 இளைய யாதவரின் குரலை திருஷ்டத்யும்னன் விழிகளால் என கேட்டு அமர்ந்திருந்தான். அவரது குரல் அரசியரையும் சொல்லற மயக்கியது என்று தோன்றியது. உடலசைவுகள் எழவில்லை. திரைச்சீலைகளை அசைத்த கடற்காற்றில் எழுந்து பறந்த அக்குரல் அறையின் அனைத்து இடங்களிலிருந்தும் கேட்டுக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது. யமுனைக்கரையில் நிறுத்திச் சென்ற படகை அடைந்தோம். ஓசையின்றிப்பெருகிய யமுனையின் கரிய நீரில் தலைகீழாகத்தெரிந்த நிழல் மேல் ஏறிக் கொண்டோம். பல்லாயிரம் கோடி மீன்விழிகள் செறிந்த பரப்பில் உச்சிவெயிலில் மிதந்தோம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78227/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 90

பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி – 3 கடல்மாளிகையின் இடைநாழியின் மறுஎல்லையில் அகன்ற கற்படிகள் மேலேறிச்சென்றன. அவற்றின் வெண்பளிங்குக் கைப்பிடிகள் யவன நாட்டு நுண்ணிய சிற்பங்கள் செறிந்திருந்தன. சாத்யகி ஒவ்வொன்றையாக தொட்டுக்கொண்டு வந்தான். முப்பிரி வேலேந்திய கடல் தெய்வங்கள, மின்னலை ஏந்திய வானக தெய்வங்கள். ஒவ்வொரு சிற்பமும் பிறிதொன்றுடன் பின்னி ஒன்றாகி ஒற்றைப் பரப்பென மாறி நின்றது. “வானமென்பது இடைவெளியின்றி பின்னிப் பரவிய தெய்வங்களின் விழி என யவனர் எண்ணுகிறார்கள்” என்றான் சாத்யகி. “விண்மீன்களைப்போல எத்தனை விழிகூர்கிறோமோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78201/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 87

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 12 இன்றென் அருகில் இரு. இங்கு நீ மட்டுமென இரு. இனியேதுமில்லையென்றாகு. இவையனைத்தும் என மேவு. கடந்துறை. கரந்துள யாவையும் என நிறை. நீ இது. நீயே அது. நீயே இங்கு நின்று உன்னை நோக்கி விழிதிகைத்திருக்கிறாய். உன் சொற்கள் இறுதியொளியுடன் மறைந்த ஊமைத்தொடுவானில் செவ்வொளிக் கதிர்களுடன் தோன்றுகிறாய். நீலவட்டம் தகதகக்க ஏழ்புரவித்தேரில் எழுந்தருள்கிறாய். உன் கண்ணொளியால் புடவி சமைக்கிறாய். நீ நிறைத்த மதுக்கிண்ணத்தை எடுத்து நீயே அருந்துகிறாய். இங்குள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78078/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 86

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 11 மித்திரவிந்தை சிற்றெறும்புகளின் நீள்நிரையை நோக்கிக் கொண்டிருந்தாள். உருசிறுத்து அணுவென்றாகி அவற்றுடன் சென்றாள். ஓசையற்றவை என அவள் எண்ணியிருந்த அவை ஒரு கணமும் ஓயாது உரையாடுபவை என்றறிந்தாள். சென்றவை, வருபவை, ஊடே நின்றதிரும் நிகழ்பவை என அவற்றுக்கும் காலக்களியாட்டு என்பதுண்டு என்றறிந்தாள். மூன்று நிரைகளாக அவை சென்று இறங்கி மறைந்த புற்றின் சிறுவாயிலருகே தயங்கி நின்றாள். அவளை பின்நின்று அணுகிய எறும்புப் பெண்ணொருத்தி “இளவரசி உள்ளே வருக!” என்றாள். “மீள்வேனா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78060/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 85

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 10 எல்லைக் காவல்கோட்டத் தலைவன் ரிஷபன் தன் புரவிமேல் அமர்ந்து ‘விரைவு விரைவு’ என உளம் தவித்தான். சூழ்ந்து வட்டமிட்ட குறுங்காட்டின் மரக்கூட்டங்களுக்கு அப்பால் குளம்படியோசை சிதறிப் பெருகி மீண்டெழுந்து அவனை சூழ்ந்தது. ‘மேலும்! மேலும்!’ எனக் கூவியபடி குதிகால் முள்ளால் அதை துரத்தினான். காற்றில் எழுந்து சிற்றோடைகளை தாவினான். சிறு பாறைகள் மேல் துடியோசை எழுப்பிக் கடந்து சென்றான். மாகிஷ்மதியின் சிறிய கோட்டை வாயிலைக் கண்டதும் ஒருகணம் பெருமூச்சுடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77991/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 81

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 6 ஒரு சொல்லென எழுந்து அவளை சூழ்ந்துகொண்டான். நீலம் என்பது நிறமல்ல. பீலி என்பது நோக்கல்ல. ஆழி என்பது வடிவல்ல. சங்கமென்பது பொருளல்ல. குழலிழிந்து இப்புவிக்குவளை நிறைக்கும் இசை என அவள் அறிந்தாள். விழிப்பென்பதும் துயிலென்பதும் இருவகை இசையே என்று கண்டாள். இருப்பென்பதும் இன்மையென்பதும் அவ்விசையின் எழுச்சியும் வீழ்ச்சியுமே. ஆதலென்பதும் அழிதலென்பதும் அலைவளைவுகளே. அவளிருந்த இடமெங்கும் இசை நிறைந்திருந்தது என்று உணர்ந்தாள் செவிலி. அவள் கைபட்ட வெள்ளிக்கலங்கள் தங்களை மீட்டிக்கொண்டன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77851/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 80

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 5 மித்திரவிந்தை பிறந்த அவ்வருடம்தான் உஜ்ஜயினியை தனிநாடாக தங்களுக்கு பிரித்தளிக்க வேண்டுமென்று கோரி விந்தரும் அனுவிந்தரும் குலப்பெருமன்றை கூட்டினர். அவர்களின் அன்னையும் பட்டத்தரசியுமான மாளவஅரசி பார்கவியின் அணுக்கரான குலமூத்தார் சுருதகிருஷ்ணர் அவையில் எழுந்து ஜெயசேனர் யாதவ அரசியை மணந்ததனால் குலமிழந்து பெருமை குறைந்துவிட்டார் என்று அவரும் அவர் குலமும் எண்ணுவதாக அறிவித்தார். அவரை ஆதரித்து மூன்று குலத்தவர் கூச்சலிட்டனர். அதை எதிர்த்து பிறர் கூச்சலிட அரசி சினத்துடன் எழுந்து தன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77842/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 79

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 4 சிறகசைக்காமல் விண்ணுக்குச் சுழன்றேறும் இரு பருந்துகள் என நகர்மையத்தில் அமைந்த யாதவரின் அரண்மனை நோக்கி புரிசுழல் சாலையில் ஏறிச்சென்றபோது சாத்யகி மெல்ல மெல்ல ஒலி அவிந்து இன்மை என்றாகிவிட்டிருப்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். முன்னால் சென்றபோது தொடர்ந்து வரும் புரவியின் மேல் சாத்யகி இல்லையென்றே தோன்ற துணுக்குற்று இருமுறை திரும்பி நோக்கினான். ஒருமுறை சாத்யகியின் விழிகளை சந்தித்தபோது அவை தன்னை அறியவில்லை என்றுணர்ந்து திரும்பிக்கொண்டு அறியா அச்சம் ஒன்று தன்னுள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77833/