பயணம் கிளம்பும்போது எப்போதும் நெடுநாட்கள் பயணம் செய்யவிருக்கிறோம் என்ற எண்ணம் இருக்கும். பயணம் நீள நீள ஒவ்வொரு காட்சியும் பின்னகர்ந்துகொண்டே இருக்கும். நாலைந்து நாட்கள் கடந்தால் முதல்நாள் இறந்தகாலத்தில் எங்கோ ஒரு நினைவாக மாறிவிட்டிருக்கும் பயணங்களில் நாட்கள் நீளமானவை. ஏனென்றால் அனுபவங்கள் செறிவானவை. காலத்தை நாம் அனுபவங்களைக்கொண்டே அளக்கிறோம். ஒருநாளில் காலையில் நிகழ்ந்தவையே மாலையில் நெடுந்தொலைவுக்கு சென்றுவிட்டிருக்கும். அத்துடன் நிகழ்காலம் முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலில் இருப்பதனால் பழைய இடங்களை நினைத்தெடுப்பதும் கடினமானது எங்கள் பயணம் முடியப்போகிறது …
Tag Archive: மிசோரம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/72069
சூரியதிசைப் பயணம் – 11
ஷிவ்சாகரிலிருந்து காலையிலேயே கிளம்பிவிட்டோம். அருணாச்சலப்பிரதேசத்திற்கு ஒரு குறுகிய பயணம் போய் மீண்டோமென்றாலும் அதுதான் நாங்கள் அசாமிலிருந்து வடகிழக்கு பழங்குடி மாகாணங்களுக்குச் செல்லும் பயணம். மேகாலயா நாகாலாந்து மிசோரம் மணிப்பூர் திரிபுரா அருணாச்சலப்பிரதேஷ் சிக்கிம் ஆகிய ஏழு வடகிழக்கு மாகாணங்கள் ஏழுசகோதரிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த மாகாணங்கள் அனைத்திற்கும் உள்ள பொது அம்சம் என்பது இவை அனைத்துமே பழங்குடிகளுக்குரியவை என்பது. மகாபாரதகாலம் முதல் அறியப்பட்ட ஒரே பழங்குடிப்பகுதி மணிப்பூர்தான். பிற நிலப்பகுதிகள் அப்போது மக்கள் வாழாத அடர்காடுகளாக இருந்திருக்கவே …
Permanent link to this article: https://www.jeyamohan.in/71801