Tag Archive: மாவோயிச வன்முறை

மாவோயிசம் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் வணக்கம். கீழகண்ட பதிவு உங்களை குறித்த சரியான மதிப்பீடு என்று க‌ருதுகிறேன். எனவே தான் நானும் அதை மீள் பதிவு செய்துள்ளேன். இது குறித்த உங்கள் கருத்தை பொது வெளியில் வைப்பது தான் சரி அதற்கு உங்களுக்கு விருப்பம் இல்லையெனில் எனக்கு தனி மடலில் தெரிவிக்கவும். அன்புடன் சூப்பர்லிங்ஸ் அன்புள்ள சூப்பர்லிங்க்ஸ், நான் சிலசமயம் ஆச்சரியப்படுவதுண்டு, சோவியத் ருஷ்யாவிலும் சீனாவிலும் எழுத்தாளர்கள் ஏன் சைபீரியாவுக்குப்போய் செத்தாலும் பரவாயில்லை என்ற நினைப்பில் கமிசார்களை எதிர்த்தார்கள் என்று. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11521

மாவோயிசம் கடிதங்கள்

அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு! வணக்கம்! ஸ்டாலினிசத்தின் ஆதரவு தலைவர்களில் முக்கியமானவரான கிம் இல் சாங்(Kim ill sung) வட கொரியாவில் நடத்தி வரும் கொடுங்கோல் ஆட்சி முறை, அங்கு இருக்கும் வறுமை ஆகியவை கற்பனைக்கு அப்பாற்பட்டவை. இத்தனைக்குக் வட கொரியா இயற்கை வளங்கள், நீர் வளம் மற்றும் நில வளம் மிகுந்த நாடு. அதுவும் சீனாவின் கைப்பிள்ளையே. மாவோ சீனாவில் துரத்தி அடிக்கப் பட்டவர் இங்கு இருப்பவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. தர்மபுரி மாவட்டத்தில் கல்வி, நீர்ப்பாசன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10891

மாவோயிச வன்முறை 4

சில பொதுப்புத்திக் கேள்விகள் மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளை நியாயப்படுத்தும்பொருட்டு தினம் ஒரு காரணம் முன்வைக்கப்படுகிறது. அந்த மக்களின் பிற்பட்ட நிலை, அங்குள்ள பண்ணையார்களின் சுரண்டல், அந்த மக்களின் நிலங்களை வேதாந்தா போன்ற நிறுவனங்களால் கையகப்படுத்தப்படுவது. …இன்ன பிற காரணங்கள். அக்காரணங்கள் அனைத்துமே உண்மையானவை என்ற நிலையில் இருந்தே நான் பேச ஆரம்பிக்கிறேன். அக்காரணங்களுக்கு எதிராக அம்மக்கள் போராடுவதன் அவசியத்தை ஏற்கிறேன். ஆனால் இந்தக் காரணங்கள் எல்லாம் அந்த மக்கள் வன்முறை அரசியலுக்கு தள்ளப்படுவதை நியாயப்படுத்துகின்றனவா என்பதே என் வினா. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10782

மாவோயிச வன்முறை 3

மாவோயிசம் என்ற புதிய பூதம் ’ஐரோப்பாவை கம்யூனிசம் என்ற புதியபூதம் ஆட்டிப்படைக்கிறது’ என மார்க்ஸ் புளகாங்கிதம் கொண்டார். உலகை அது ஒரு நூற்றாண்டுக்காலம் ஆட்டிப்படைத்தது. கம்யூனிசத்தின் பாதிப்பு இரு வகையில் மனித சமூகத்தை அழித்தது. ஒன்று ஸ்டாலின், மாவோ, போல்பாட் போன்ற மாபெரும் மானுடஎதிரிகளை உருவாக்கி தேசங்களைச் சூறையாடியது , கோடிக்கணக்கான எளிய மக்களை கொன்றழித்தது. இன்றும் அந்த பேரழிவுகளின் விளைவுகள் தொடர்கின்றன. இரண்டு, மார்க்ஸியத்தின் அடிப்படையாக உள்ள ’சமூகத்தை முழுமையாக மாற்றிக்கட்டி எழுப்புவது’ என்ற கனவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10761