Tag Archive: மாலினி

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 6

பகுதி ஒன்று : கனவுத்திரை – 6 மாலினி சுபகையை நோக்கி புன்னகைத்து கைநீட்டி “அருகே வாடி” என்றாள். சுபகை கைகளை ஊன்றி உடலை அசைத்து சென்று அவளருகே அமர்ந்தாள். சுபகையின் தலையைத் தொட்டு வருடி “உன் உள்ளம் புரிகிறது.  நீ அதன்பிறகு இளைய பாண்டவனை பார்த்தாயா?” என்றாள். அவள் “இல்லை. அவர் என்னை அழைக்கவில்லை. சாளரங்களினூடாக நான் அவரை பார்ப்பதுடன் அமைகிறேன்” என்றாள். மாலினி “அவன் சென்று கொண்டிருக்கிறான். பாதைகள் பின்னிட்டபடியே உள்ளன. அவனிடம் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78793/

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 5

பகுதி ஒன்று : கனவுத்திரை – 5 முன்னால் சென்ற வீரன் தன் இடையிலிருந்த கொம்பை எடுத்து பிளிறலோசை எழுப்பினான். காட்டுக்கு அப்பால் இருந்து அதற்கு மாற்றொலி எழுந்தது. பசுந்தழைப்பைக் கடந்து வந்ததும் வானிலிருந்து பொழிந்த ஒளியால் விழிகள் குருடாயின. கண்ணீரை ஆடையால் துடைத்தபடி “பார்த்து கால் வையுங்கள். மரக்குற்றிகள் உள்ளன” என்றாள் சுபகை. “இப்பாதை எனக்கு நன்கு தெரிந்ததுதான் செவிலி அன்னையே” என்றான் காவலன். “யானை! விரைந்தோடு யானை!” என்றான் சுஜயன். கண் தெளிந்ததும் அவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78791/

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 4

பகுதி ஒன்று : கனவுத்திரை – 4 மண் சாலையின் பள்ளங்களிலும் உருளைக் கற்களிலும் சகடங்கள் ஏறி இறங்க அதிர்ந்து சென்ற தேரில் சுஜயன் துயில் விழிக்காமலேயே சென்றான். ஒவ்வொரு அசைவுக்கும் அவனுள் ஏதோ நிகழ்ந்து கொண்டிருந்தது. “பறவைகள்” என்றான். அவனுள் சூழ்ந்து பறக்கும் பெருங்கழுகுகளை சுபகை கற்பனையில் விரிப்பதற்குள்ளேயே “மலையில் யானைகள்” என்றான். அச்சொற்கள் அவளை எண்ணமாக வந்தடைவதற்குள்ளேயே “அருவி” என்றான். சுபகை முஷ்ணையை நோக்கி “உள்ளே பல இளவரசர்களாக பிரிந்து பல உலகங்களை சமைத்துக்கொள்கிறார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78563/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 41

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி – 7 கங்கையின் காற்றில் படகின் பாய்கள் கொடிமரத்தில் அறையும் ஒலி கேட்டது. அது அலையோசை என நெடுநேரம் திருஷ்டத்யும்னன் எண்ணிக்கொண்டிருந்தான். படகுகள் பொறுமையிழந்து நின்றிருப்பதுபோல தோன்றியது. பலராமர் “இளையோனே, நாம் போருக்கெழுகிறோம் என்றால் நல்ல உணவுக்குப்பின் செல்வதல்லவா நன்று?” என்றார். “இது போரே அல்ல. அரைநாழிகைகூட இந்த ஊர் நம் முன் நிற்க முடியாது” என்றான் திருஷ்டத்யும்னன். இளைய யாதவர் “அரைநாழிகை நேரம் போரிடுவதற்கும் மூத்தவருக்கு உணவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76774/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 32

பகுதி ஆறு : மணிமருள் மலர் – 5 திருஷ்டத்யும்னன் சொல்சூழ்ந்த சித்தத்துடன் சூதனின் கலைந்த குழலையும் அசையும் குரல்வளையையும் நோக்கி நின்றான். அவனில் குடியேறிய அந்த அறியாத தேவன் அச்சுறுத்தினான். அனைத்தையும் அருகிருந்து காண்பவன். மானுடர் சிந்தும் அனைத்து உணர்ச்சிகளையும் அந்தந்த கணங்களிலேயே அள்ளி வைத்துக்கொள்பவன். அந்த நேரத்தில் அவனைச்சூழ்ந்திருந்த அத்தனை பொருட்களிலும் மின்னும் விழிகள் அவர்களுடையவை. வாழும் அனைத்தும் மண்ணிலும் சூதர் சொல்லிலும் இறுதியில் சென்று படிகின்றன. மண்ணில் விழுபவை முளைக்கின்றன. உப்பாகி முளைப்பவற்றுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76410/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 27

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 8 புன்னகை மாறா விழியுடையோன் ஒருவனை பெண் விரும்புதல் இயல்பு. உடலே புன்னகை என்றானவனை என்ன செய்வது? அவனை தன் விழி இரண்டால் பார்த்து முடிக்கவில்லை பாமா. அவன் செம்மைசேர் சிறு பாதங்களை, வில் என இறுகிய கால்களை, ஒடுங்கிய இடையை, நீலக்கல்லில் நீரோட்டம் என விரிந்த மார்பில் பரவிய கௌஸ்துபத்தை, மீன்விழிச் சுடர்களை நக முனைகளெனக் கொண்ட கைவிரல்களை, மென்நரம்பு தெரியும் கழுத்தை, முலையுண்ட குழந்தை என குவிந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76251/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 26

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 7 அவன் விரல்கள் நீளமானவை என அவள் அறிந்திருந்தாள். வெம்மையானவை என உணர்ந்திருந்தாள். அவை முதல் முறையாக தன் விரல்களைத் தொடும்போது அறிந்தாள், ஒருபோதும் அவற்றை அவள் உணராமல் இருந்ததில்லை என்று. அவ்விரல்கள் தொட்டு வரைந்த சித்திரம் தன்னுடல் என்று. அவ்விரல்கள் வருடி குழைந்து வனைந்த கலம் தன் உடல் என்று. மன்று நின்ற அவன் இடப்பக்கம் அவனுக்கிணையான உயரத்துடன் அவனுடல் நிகர்த்த உடலுடன் தலை தூக்கி விழிநிலைத்து புன்னகைத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76245/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 24

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 5 ஏழாவது நாள். காளநீலத்தின் ஆழத்திலிருந்து வந்த முதல் தூதன் அவர்கள் எண்ணிய செய்தியை கொண்டுவந்தான். யமுனை வழியாக வந்து படித்துறையை அடைந்து மூச்சிரைக்க மேலேறி “நான் காளநீலத்தின் கருமையில் இருந்து வருகிறேன். ஆயர்பாடியின் அமைச்சரை பார்க்க வேண்டும்” என்று அவன் கூவினான். ஒற்றருக்கு இல்லாத ஓசை கொண்டிருந்தான். பித்து எழுந்த விழிகளுடன் கைவிரித்து அமைச்சரின் அலுவல் கூடம் நோக்கி ஓடினான். அவனை அறிந்து அவனுக்குப் பின்னால் ஆயர் இளைஞர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76237/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 23

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 4 ஹரிணபதத்தில் மாலை இளமழையுடன் சேர்ந்து மயங்கத் தொடங்கியது. அஸ்வபாதமலைச்சரிவின் ஆயர்பாடிகளில் சித்திரை வைகாசி மாதங்களைத் தவிர்த்த பிற நாட்களில் மதியம் கடந்ததும் காற்று அவிந்து இலைகள் அசைவிழக்கும். தோல்மேல் பசையென வியர்வை பரவி சிறு பூச்சிகள் கடிக்கும். மூச்சு ஊதிப் படிந்தது என இலைகளின் அடியில் நீராவிப்படலம் எழும். புதர்களின் சுருண்ட சிலந்தி வலைகளில் மெல்லிய நீர்த்துளிகள் திரண்டு அதிரும். பறவைகள் இலைப்புதர்களுக்குள் சென்றமர்ந்து சிறகு கோதி ஒடுங்கும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76213/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 22

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 3 மன்றுகூடியிருந்ததை பாமை அறியவில்லை. அவள் தன் இளங்கன்றுகளுடன் குறுங்காட்டில் இருந்தாள். பூத்த நீலக்கடம்பின் அடியில் அமர்ந்து பசுமைவழிந்து சரிந்துசென்று ஒளியென ஓடிய சிற்றோடையில் நாணல்களாக மாறி கரைசமைப்பதை, காற்றிலாடும் அவற்றின் வெண்ணுரைக்கொத்துப் பூக்களை, அவற்றிலிருந்து எழுந்து நீரில் பாய்ந்து சிறகு நனைத்து உதறிக்கொண்டு எழுந்து சுழன்று வந்தமரும் சாம்பல்நிறமான சிறுசிட்டுகளை நோக்கிக்கொண்டிருந்தாள். அருகே நின்ற அவளுடைய செல்லப்பசுவாகிய சியாமையின் கரிய தோல் நீர்ச்சறுக்கிப்பூச்சிகள் பரவிய சுனைநீர்ப்படலம் போல அசைந்துகொண்டிருந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76167/

Older posts «

» Newer posts