Tag Archive: மாலினி

’வெண்முரசு’ –நூல் பன்னிரண்டு –‘கிராதம்’– 59

[ 22 ] அர்ஜுனன் வெளியே சென்றதுமே மாதலியை பார்த்தான். அவன் நடை தயங்கியது. மாதலி இயல்பாக அவனருகே வந்து “வருக!” என்றான். அவனிடம் தன் அறைக்கு மீள விரும்புவதாகச் சொல்ல எண்ணினான் அர்ஜுனன். ஆனால் அதை அவன் எப்படி புரிந்துகொள்வான் என்று தயங்கினான். அவன் “நீ சொன்னவற்றை நான் புரிந்துகொள்கிறேன். நீ பிறிதொன்றை சொல்லமுடியாது” என்றான். அவனை நோக்கி சொல்கொள்வதற்குள் சிரித்தபடி “இந்திரகீலத்திற்கு ஏறி வரும் வழியில் நீ சந்தித்த யட்சியும் நானே” என்றான் மாதலி. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93390

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 20

[ 27 ] காலத்தின் இருள் தேங்கிய கரிய அரண்மனையின் அறைகளினூடாக விதிர்ப்புகொண்டு அசைந்த உயிர்த்தசைகளினாலான தரைமேல் கால்வைத்து உயிர்ப்புக் காற்றின் அலைகளால் குழலும் ஆடையும் அசைய அர்ஜுனன் நடந்தான். சித்ரபுத்திரர் அவனுக்கு வழிகாட்ட யமி துணைவர பின்னால் ஔதும்பரனும் சண்டாமிருகனும் சம்பரனும் சார்த்தூலனும் உடன்வர இருளில் புதைந்து புதைந்து அவ்வறைகளைக் கடந்து அரசமண்டபத்தின் முகப்புக்கு வந்து நின்றான். அங்கிருந்த காவலர் அவனை வணங்கி வாயில் திறந்து உள்ளே கொண்டு சென்றனர். பெருந்திரளென எழுந்து குவிந்து வளைந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92034

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 19

[ 25 ] “நான் உறுதியளிக்கிறேன். காலபுரி புகுந்து உம் மைந்தனை மீட்டுத் திரும்புவேன்” என்று அந்தணனின் கைதொட்டு ஆணையிட்டு அர்ஜுனன் கிளம்பினான். தெற்குநோக்கி நான்கு நாட்கள் நடந்துசென்ற அவன் எதிரே சடைமகுடத்தில் பன்றிப்பல் பிறைசூடி புலித்தோல் உடுத்து நீறாடி சிவப்புகை இழுத்து பித்துகொண்டு ஆடிவந்த இருளெதிர்வரை கண்டான். “நில்லும்!” என்று தன் காண்டீபத்தைக் காட்டி ஆணையிட்டான். “சொல்லும், நான் தென்றிசையாளும் தலைவனைச் சென்று காண விழைகிறேன். அவனை அடையும் வழி எது?” “நன்று நன்று” என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92019

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 37

பகுதி ஐந்து : தேரோட்டி – 2 மெல்லிய காலடி ஓசையை மாலினி கேட்டாள். மிகத் தொலைவில் என கேட்ட மறுகணமே அண்மையில் என ஆயிற்று அது. அது சுபகை என உடனே தெளிந்தாள். இருளுக்குள் மிதப்பவள்போல் வந்து சுபகை அவளை நோக்கி ஒரு கணம் நின்று பின்பு மெல்ல முழங்கால் மடக்கி அவள் அருகே அமர்ந்தாள். தடித்த உடல் கொண்டிருந்தபோதும் மெல்லிய ஓசையுடன் அவள் நடப்பதை மாலினி விந்தையுடன் எண்ணிக்கொண்டாள். சுபகையின் கையில் மூங்கில் குவளையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79707

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 36

பகுதி ஐந்து : தேரோட்டி – 1 மாலினி தன் படுக்கை அறையில் மான்தோல் மஞ்சத்தில் அமர்ந்திருக்க அவள் மடியில் தலைவைத்து படுத்திருந்த சுஜயன் எழுந்து அமர்ந்து “அதன் பின் அந்த ஐந்து தேவதைகளும் எங்கு போனார்கள்?” என்றான். “அவர்களுக்கு இங்கிருந்து விடுதலை கிடைத்தது. விண்ணில் ஏறி தேவர் உலகான அமராவதிக்குச் சென்றார்கள்” என்றாள் மாலினி. “அமராவதியிலிருந்து?” என்று சுஜயன் கேட்டான். “அமராவதிதானே அவர்கள் இடம்?” என்றாள் மாலினி. “அவர்கள் அமராவதியிலிருந்து எங்கு செல்வார்கள்?” என்று சுஜயன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79698

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 31

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் – 2 அர்ஜுனனும் சித்ராங்கதையும் கொண்ட மணநிகழ்வை ஒட்டி மணிபுரியில் பதினெட்டுநாள் விழவு கொண்டாடப்பட்டது. குலமூத்தாரும் குடிகளும் கூடிய பேரவையில் அனல் சான்றாக்கி அவள் கைபற்றி ஏழு அடிவைத்து எழுவிண்மீன் நோக்கி குடிமுறைப்படி அவளுக்கு கணவனானான். மூதன்னையர் நூற்றெண்மர் நிரைவகுத்து வந்து சித்ராங்கதையை மஞ்சளரிசியும் மலரும் நீரும் சொரிந்து வாழ்த்தி “மாமங்கலையாகுக!” என்று அருளினர். காட்டில் வளைத்து வளர்க்கப்பட்ட பொன்மூங்கில்களை வெட்டிவந்து புதியதோர் கொடித்தீவில் அவர்களுக்கு மாளிகை அமைத்தனர். அங்கே அவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79576

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 30

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் – 1 மாலினியின் மடியிலிருந்து பாய்ந்தெழுந்து இருகைகளையும் விரித்து “நாகர்கள்! ஏழு நாகர்கள்!” என்று சுஜயன் கூச்சலிட்டான். “நான் நாகர்களை ஒவ்வொருவராக கொன்று… நிறைய நாகர்களை கொன்று…” என்று சொன்னபடி கையிலிருந்த சிறிய மூங்கில் வில்லை எடுத்துக்கொண்டு குறுங்காட்டை நோக்கி ஓடினான். மரநிழல் ஒன்று அவனுக்குக் குறுக்கே விழுந்து நெளிய திகைத்து நின்று உடல் நடுங்கியபின் பறவை ஒலி போல் அலறி வில்லை கீழே போட்டுவிட்டு திரும்பி ஓடி வந்து மாலினியின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79568

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 18

பகுதி 3 : முதல்நடம் – 1 “கதைகளின் தெய்வமாகிய புராணிகை செவி மட்டுமே ஆனவள், மொழியற்றவள் என்று முதுசூதர் பிருஹத்வர் எழுதிய காவியமாகிய ப்ரஸ்ன சம்ப்ரதீகம் சொல்கிறது” என்றாள் மாலினி. “ஒலியற்றவள். கதைகளுக்கு முன்பும் பின்பும் மட்டுமே அவள் இருப்பை உணர முடியும்.” சுபகை முடிந்த கதையின் மீட்டலில் இருந்து மெல்லிய உடலசைவு வழியாக மீண்டாள். “முதற்சொல் எழுகையிலேயே அவள் கதைகளுக்குள் புகுந்து கொள்கிறாள். கதைகளின் ஒவ்வொரு வரிகளுக்கிடையிலும் ஒவ்வொரு சொல்லுக்கு இடையிலும் அவள் இருக்கிறாள். நீள்மூச்சுகளாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79173

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 13

பகுதி இரண்டு : அலையுலகு – 5 அணுகும்தோறும் விரிந்து வட்டச்சுழல் பாதையில் பெருவிசையுடன் சுழற்றி தன்னை உள்ளிழுத்த அக்கரிய பெருந்துளை ஒரு வாய் என அர்ஜுனன் எண்ணினான். அங்கு சென்றவை அனைத்தும் முடிவற்ற நீள் கோடென இழுபட்டன. அதன் நடுவே இறுகிச் செறிந்து ஒளியென்றே ஆன இருட்டு முனை கொண்டிருந்தது. மாமலைகளை அணுவென ஆக்கி தன்னுள் ஆழ்த்திக் கொண்டிருந்தது. ஒரு கணமோ நூறு கோடி யுகங்களோ என மயங்கும் காலம் அங்கே புல் நுனிப் பனித்துளி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78997

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 9

பகுதி இரண்டு : அலையுலகு – 1 கங்கைக்கரையில் நீர்வெளிநோக்கி சற்றே நீட்டி நின்றிருந்த பாறையின்மேல் காலையிளவெயிலில் சுஜயனை தன் மடிமேல் அமரச்செய்து அவன் மெல்லிய தோள்களை கைகளால் தடவியபடி மாலினி சொன்னாள் “அவ்வாறுதான் பார்த்தன் அறிவிழி கொண்டவனானான். மானுடவிழிகள் புற ஒளியால் மட்டுமே பார்ப்பவை. அவன் விழிகள் அகஒளியாலும் பார்க்கும் வல்லமை கொண்டவை.” சுஜயன் தலையை தூக்கி அவள் கன்னங்களை தன் கையால்பற்றி திருப்பி “நான்… நான்… எனக்கு?” என்றான். “உனக்கு என்னடா செல்லம்?” என்றாள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78920

Older posts «