Tag Archive: மார்க்ஸியம்

அசிங்கமான மார்க்ஸியம்

திருவாளர் ஜெ, எரிக் ஹாப்ஸ்பாம் பற்றிய உங்களுடைய கட்டுரையை வாசித்தேன். தெளிவான மொழியிலே உங்களால் எழுத முடிகிறதென்பதனை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் எதற்காக எழுதுகிறீர்கள்? இன்றைக்கு ஹாப்ஸ்பாமை முன் வைப்பதன் வழியாக நீங்கள் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள்? நீங்கள் மர்க்ஸிய சிந்தனைகளை கூர்ந்து வாசிக்கிறீர்கள் என்று இங்குள்ள மார்க்ஸியர்கள் நம்பவேண்டும் என்பது மட்டும்தானே உங்கள் நோக்கம் இல்லையா? மற்றபடி இதுவரை இங்குள்ள மார்க்ஸிய சிந்தனையாளர்களை நீங்கள் எந்த அளவுக்குப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்? அவர்களை எப்போதாவது பேசியிருக்கிறீர்களா? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22768

மார்க்ஸியம் கடிதம்

அன்புள்ள ஜெ, இடதுசாரிகள் மற்றும் மாரக்ஸியம் பற்றிய பொதுவான சமூகப்புரிதல்கள் இன்று தமிழகத்தில் மாறி அவையும் திராவிடக்கட்சிகளைப் போன்றவையே என்ற நிலையில் தான் இருக்கின்றன.இடதுசாரிகளின் இடங்களான கேரளத்திலும்,மேற்கு வங்கத்திலுமே இன்று இச்சிந்தனைகள் அழிந்து தேர்தல் அரசியல் ஒன்றை மட்டுமே இலட்சியமாகக் கொண்ட இந்திய அரசியல் கட்சிகளுடன் கம்யூனிஸ்ட்டுகளும் ஒன்றாகிவிட்டனர்.தொழிலாளர்கள் முன்னேற்றம்,போராட்டங்கள் எல்லாம் காலாவதியான சொற்களாகவே பார்க்கப்படுகின்றன. மார்க்சிய,லெனினிய சிந்தனைகள் உருவாக்கிய தலைவர்கள் அடுத்த கட்டமாக அச்சிந்தனைகளை வளர்க்கவில்லை.அடுத்த நிலையில் சிந்திக்கும் வாரிசுகளை உண்டாக்காமல் மாறாக இவர்களையே மையமாகக்கொண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74900

அழியும் பாரம்பரியம், மார்க்ஸியம்

நான் நம் பெரும்பான்மை மார்க்ஸியர்கள் மேல் சொல்வது இதே குற்றச் சாட்டைத்தான். அவர்கள் தங்கள் மூடத்தனத்தால் ஒரு பழம் பெரும் பாரம்பரியம் அன்னிய ஏகாதிபத்திய சக்திகளால் வேருடன் கெல்லி அழிக்கப்படும் கொடூரமான வரலாற்று அநீதிக்கு துணை நிற்கிறார்கள். அதன் கருவியாகச் செயல்படுகிறார்கள். ஒருநாள் இதற்காகவும் அவர்கள் வருந்துவார்கள். இது நீங்கள் எழுதிய வரி. இதை என்னால் சரியாகப்புரிந்துகொள்ள முடியவில்லை. மார்க்ஸியர்கள் பழபெரும்பாரம்பரியத்தை அழிக்கிறார்கள் என்றால் எந்தப்பாரம்பரியத்தை? அஸீஸ் அன்புள்ள அஸீஸ், இந்துமதம், இந்துசிந்தனை மரபுதான். இந்தச் சொல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74909

மார்க்ஸியம் இன்று தேவையா?

அன்புள்ள ஜெ.எம், மீண்டும் அன்பு. உங்கள் கடிதத்தை வாசித்து முடிக்கவே எனக்கு ஒருநாள் ஆகியது. அதற்குள் அந்த கடிதத்துக்கு மூன்று வடிவங்கள் வந்து சேர்ந்து விட்டன. அதில் பாதி எனக்கு இன்னும் புரியாததாகவே இருக்கிறது. நான் இன்னும் மார்க்ஸியத்தின் மீது ஒரு நம்பிக்கை கொண்டவனாகவே இருக்கிறேன். நீங்கள் மார்க்ஸியத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்து விட்டீர்கள். மார்க்ஸியத்துக்கு இன்று எந்த பயனுமே இல்லையா? அது வரலாற்றுக்குமேல் நிகழ்ந்த ஒரு வன்முறை மட்டும்தான் என்று நீங்கள் சொல்ல வருகிறீர்களா என்ன? கெ.அன்புராஜ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10813

எஞ்சிய சிரிப்பு

1998 இல் நான் பின் தொடரும் நிழலின் குரல் என்ற நாவலை எழுதினேன்.சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சியின் பின்னணியில் மார்க்ஸியக் கொள்கையில் உள்ள அறம் என்ன என்று ஆராயக்கூடிய நாவல்.அதற்கு ஆய்வுரைகளோ மதிப்புரைகளோ அதிகம் வரவில்லை, ஏராளமான வசையுரைகள் மட்டுமே வந்தன, வந்துகொண்டும் இருக்கின்றன. நான் பல கடிதங்களின் முதல் வரியை மட்டுமே வாசிப்பேன், என்ன சொல்லப் போகிறார் என்று தெரிந்துவிடும். நாவலை வாசித்துவிட்டு எழுதிய மறுப்புகள் அனேகமாக எவையுமில்லை. வாசித்தால் தங்கள் சொந்த நம்பிக்கை மாறிவிடுமோ என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31743

கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] – 3

கலங்கிய நதி நாவலில் அழகிய குறியீட்டுத்தன்மையுடன் ஒரு சித்தரிப்பு வருகிறது. கலங்கியநதி என்பது நேரடியாகப் பெருவெள்ளம் சுழித்தோடும் பிரம்மபுத்திராவைக் குறிக்கிறது. ‘அழகிய நதி, பார்த்தால் சலிக்காதது’ என்று சொல்லும் டெல்லி வருகையாளனுக்கு உள்ளூர்க்காரன் ‘அதன் கரையில் வெள்ளத்தை பயந்து வாழ்ந்தால் தெரியும்’ என பதில் அளிக்கிறான். அஸ்ஸாமின் பிரச்சினையை பிரம்மபுத்ரா நதியுடன் பலகோணங்களில் நாவல் ஒப்பிட்டுச் செல்கிறது. அதில் ஒன்று இந்த விவரிப்பு. வெளியே இந்தியாவின் மிகப்பெரிய நீர்ப்பெருக்குள்ள நதி கொப்பளித்து ஓடும்போது விடுதிக்குள் கொஞ்சம் பெரிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25641

மார்க்ஸிய நூல்பட்டியல்

தமிழில் மார்க்ஸியம் சார்ந்து இப்போது கிடைக்கும் ஏறத்தாழ எல்லா நூல்களையும் பதிப்பக வாரியாகப் பட்டியலிட்டிருக்கிறார்கள் வினவு தளத்தில். கவனமாகச்செய்யப்பட்ட முக்கியமான தொகுப்பு. இத்தனை நூல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் தமிழ்ச்சூழலில் நூல்களுக்கு உள்ளடக்கம் சார்ந்து உருவாக்கப்படும் பட்டியல்களுக்குப் பெரும் முக்கியத்துவம் உண்டு. மார்க்ஸியம் மீது ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரும் கவனிக்கவேண்டிய பதிவு. வினவுநூல் பட்டியல்

Permanent link to this article: https://www.jeyamohan.in/23900

அண்ணா ஹசாரே, மீண்டும் இரு உரையாடல்கள்.

சற்று முன் டெல்லியில் இருக்கும் கேரள இதழாளரிடம் பேசிக்கொண்டிருந்தேன். ‘அண்ணா ஹசாரேவுக்குக் கிடைத்த ஆதரவு இந்து மனநிலையில் உள்ள மூத்தார்வழிபாட்டின் நீட்சி. அவருக்கு 76 வயதாகவில்லை என்றால் அவரை எவரும் கண்டுகொள்ளமாட்டார்கள் ’ என்றார் நான் ‘ஆம்.  அதனாலென்ன? அதற்காக ஏன் வெட்கப்படவேண்டும்? அந்த அம்சம் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ இல்லை என்றால் அது அவர்களின் பண்பாடு. கீழைநாடுகளில் அது ஒரு பெரும் பண்பாட்டுக்கூறு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் மூத்தாரை வழிபட்டு வருகிறோம். அது நம் பண்பாடு. நாளையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20256

பின் தொடரும் நிழலின் குரல் பற்றி

இந்த நாவலை நீங்கள் படித்தால் என்னென்ன செய்யக்கூடும்? நான் என்னென்ன செய்தேன் என்று சொல்கிறேன். ரஷ்யா, புகாரின் (Bhukarin), அவர் மனைவி அன்னா (Anna), ட்ராட்ஸ்கி (Trotsky), ஸ்டாலின், லெனின் இவர்களைப் பற்றி இணையத்தில் நிறையத் தேடினேன். சில நேரங்களில் இரவு உறக்கம் கெட்டது. விழித்திருந்த வேளைகளில் அலுவலக நேரத்தில் கூட புகாரினும், அருணாசலமும் வேலையில் குறுக்கிட்டனர். இதைப் படித்ததன் காரணமாக ட்ராட்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு, மார்க்சியம் குறித்த சில புத்தகங்கள் வாங்கி இருக்கிறேன். ஜெமோவின் வேறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20302

மார்க்ஸ் கண்ட இந்தியா

அன்புள்ள ஜெமோ நீலகண்டன் அரவிந்தன் தமிழ்ப்பேப்பரில் எழுதிவரும் கட்டுரைத்தொடரை சுட்டிக்காட்டியிருந்தீர்கள் .இப்போதைக்கு தினமும் எழுதுபவர்கள் அவரும் நீங்களும்தான் போல் இருக்கிறது. அவரது பத்தியை இந்துத்துவா என்று சொல்லி இணையம் முழுக்க வசைபாடுகிறார்கள். ஆனால் அறிவியல் மற்றும் சமூக விஷயங்களை ஏராளமான ஆதாரங்களுடன் எழுதுகிறார் என்றே நினைக்கிறேன். அவரது எண்ணங்கள் நிறைய எனக்கு ஒத்துக்க கூடியவையாக இல்லை. ஆனால் மறுதரப்பாக யாராவது பொருட்படுத்தும்படி எழுதுகிறார்களா என்று தேடினால் வசைகள்தான் காணக்கிடைக்கின்றன. அதில் இந்தவரியை பார்த்தேன். [ http://www.tamilpaper.net/paper/?cat=11] ’இங்கிலாந்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8705