44. வில்லுறு விசை நகுஷேந்திரனின் ஆணைப்படி கந்தர்வனாகிய வஜ்ராக்ஷன் தன் துணைவர் எழுவருடன் சென்று இந்திராணி தவம் செய்துகொண்டிருந்த மகிழமரச் சோலையை அடைந்தான். தன் சொல்லால் அதற்கு அனல்வேலியிட்டிருந்தாள் இந்திராணி. அவர்களின் காலடியோசையிலேயே சாய்கதிர் பட்ட முகிலென சிவந்து எரியலாயிற்று அது. எல்லைக்கு வெளியே நின்று பெருங்குரலெடுத்து அவளை அழைத்தான். இந்திரனின் நலம்திகழும்பொருட்டு ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை பிரம்மனுக்கு பூசெய்கை ஆற்றிவந்த இந்திராணி சோலைக்குள் மலர் கொய்துகொண்டிருந்தாள். பலமுறை எழுந்த அக்குரலைக் கேட்டு அவள் அங்கிருந்து …
Tag Archive: மாருதர்
Permanent link to this article: https://www.jeyamohan.in/96382
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 43
பகுதி 10 : சொற்களம் – 1 கிருஷ்ணனின் திருமுகப்படைகள் துவாரகையிலிருந்து கடல்வழியாக தேவபாலபுரம் சென்று சிந்துவின் எதிர்ப்பெருக்கில் நுழைந்து மூலத்தானநகரி வந்து அங்கே ஒருநாள் ஓய்வெடுத்தபின் வண்டிச்சாலை வழியாக சப்தசிந்துவைக் கடந்து காம்பில்யத்தை பன்னிரண்டு நாட்களில் சென்றடைந்தன. தெற்கிலிருந்து மழைக்காற்று வடக்குநோக்கி வீசத்தொடங்கியகாலம் என்பதனால் பாய்களை விரித்ததுமே கலங்கள் சிந்துவின் எதிரொழுக்கின் அலைகள் மேல் தாவித்தாவி ஏறி முன்னால் சென்றன. கலங்களுக்குள் இருந்த அனைத்துப்பொருட்களையும் கட்டிவைக்கவேண்டியிருந்தது. “நூற்றுக்கணக்கான முறை நான் சிந்துவுடன் இணைந்து நடனமிட்டிருக்கிறேன்… அவள் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/72823
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 14
பகுதி மூன்று : இருகூர்வாள் – 4 நன்றாக விடிந்தபின்னர்தான் அர்ஜுனன் விழித்தான். அவன் விழிப்பதை எதிர்நோக்கி நீராட்டறைச்சேவகனும் அணுக்கச்சேவகனும் அவைச்சேவகனும் காத்திருந்தனர். அவன் புரண்டு கண்களை மூடியபடியே எழுந்து மஞ்சத்தறை மூலையில் செம்பட்டுப்பீடத்தில் வைக்கப்பட்டிருந்த துரோணரின் பாதுகைகளையும் தன் வில்லையும் தொட்டு வணங்கிவிட்டு கண்களைத் திறந்தபோது ஒலிகேட்டு அவர்கள் வந்து பணிந்து நின்றனர். “நேரமாகிவிட்டது அல்லவா?” என்றான். “ஆம்” என்றான் அணுக்கச்சேவகன். “நான்குமுறை மூத்தவர் செய்தி அனுப்பிவிட்டார்.” “அன்னையிடமிருந்து செய்தி ஏதும் வரவில்லையா?” என்றான் அர்ஜுனன். “இல்லை” என்றான் அணுக்கச்சேவகன் பத்ரன். …
Permanent link to this article: https://www.jeyamohan.in/64327