Tag Archive: மாயை

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ -12

பகுதி 4 : தழல்நடனம் – 2 சிசிரன் வந்து வணங்கியதை ஆடியிலேயே நோக்கி அர்ஜுனன் தலையசைத்தான். ஆடியில் நோக்குகையில் உடலெங்கும் பரவும் சினத்தை உணர்ந்தான். ஏனென்றறியாத அந்தச் சினம் அவனிடம் இருந்துகொண்டே இருந்தது. இரவில் மஞ்சத்தில் புரண்டு புரண்டு படுத்து துயிலின்றி எழுந்தமர்ந்து விண்மீன்களை நோக்கி அமர்ந்திருந்து மீண்டும் படுத்து விடியற்காலையில்தான் கண்ணயர்ந்தான். துயில் வந்து மூடும் இறுதிக்கணம் எஞ்சிய சினம்பூசப்பட்ட எண்ணம் அப்படியே விழிப்பின் முதல்கணத்தில் வந்து ஒட்டிக்கொள்வதன் விந்தையை ஒவ்வொருமுறையும் எண்ணிக்கொண்டான். நாளெல்லாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70752

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 92

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை – 5 நள்ளிரவில் மூன்றாம் சாமத்தின் தொடக்கத்துக்காக பெருமுரசு ஒலித்தது. மிதுனராசிக்கு இடம்பெயர்ந்த வியாழன் ஊதப்பட்ட அனல்துண்டு போல சந்திரன் சூடிய மணிமுடியில் ஒட்டியிருந்து ஒளிவிட்டது. காலடியில் ரோகிணி ஊசி முனை போல சுடர்ந்து அமர்ந்திருந்தாள். சந்திர வட்டம் முகிலில் முழுமையாக மறைந்து பின்னர் மறுபக்கம் வெளிப்பட படபடத்தபடி காகம் ஒன்று மரத்தில் இருந்து எழுந்து வானில் சுழன்று பின் அமைந்தது. காம்பில்யத்தின் தெற்குக்கோட்டை வாயிலின் அருகே பெருவீதியின் மும்முனையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70068

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 80

பகுதி பதினைந்து : அன்னைவிழி – 9 மீண்டும் தேரில் ஏறிக்கொண்டபோது திரௌபதி முற்றிலுமாக சொல்லடங்கி அமர்ந்திருந்தாள். ஆனால் மாயை பேச விரும்பினாள். ஓர் எண்ணம் முடிவதற்குள்ளாகவே அடுத்தது எழுந்தது. ஒவ்வொன்றும் முழுமையான கூரிய சொற்றொடர்களாகவே உருவம் கொண்டு வந்தன. “நீங்கள் ஆண்களில் தேடுவதென்ன இளவரசி?” என்றாள். “நீங்கள் நீர் நிறைந்து கரைகளை முட்டும் ஒரு பெருநீர்த்தேக்கம். இன்னமும் நிகழாத ஆற்றல். எடையாக மட்டுமே இருந்துகொண்டிருக்கும் விசை. நீங்கள் தேடுவது வெளிப்படும் வழிகளை மட்டுமே. இந்த ஆண்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69317

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 79

பகுதி பதினைந்து : அன்னைவிழி – 8 மாயை சாளரத்திரையை விலக்கி நோக்கி முன்பக்கம் தேரோட்டும் திரௌபதியையும் அப்பால் நுகத்தைச் சுமந்த பீமனையும் நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் கால்கள் கட்டுமீறி நடுங்கிக்கொண்டிருந்தமையால் தூண்மேல் பின்வளைவை சாய்த்து கைகளால் பற்றி கன்னத்தை அழுத்திக்கொண்டாள். அவள் நெஞ்சுக்குள் மூச்சும் இதயத்துடிப்பும் ஒன்று கலந்தன. நுகத்தை இழுத்துச்சென்ற பீமனின் புயங்களின் பின்பக்கமும் பின் தோள்களிலும் தசைகள் காற்றுபட்ட பாய்மரம்போல புடைத்து இறுகின. ஆணின் தோளின் பின்பக்கத் தசைகளை அவள் அதுவரை அத்தனை கூர்மையாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69248

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 78

பகுதி பதினைந்து : அன்னைவிழி – 7 திரௌபதி சரஸ்வதி ஆலயத்தில் இருந்து வெளியே வந்து தேரில் ஏறிக்கொண்டதும் பின்னால் ஏறிய மாயை குனிந்து தேரோட்டியிடம் “சாவித்ரி தேவியின் ஆலயம்” என்றாள். தேர் கிளம்பியதும் திரௌபதியின் அருகே அமர்ந்து மேலாடையை சீரமைத்துக்கொண்டு வெளியே கேட்ட ஒலிகளை செவிகூர்ந்து “அவர்கள் மையத்தேர்ச்சாலையை அடைந்துவிட்டார்கள் இளவரசி” என்றாள். திரௌபதி எண்ணங்களால் எடைகொண்டவள் போல இருக்கையில் சாய்ந்து அகம் குவியா நேர்நோக்குடன் அமர்ந்திருந்தாள். பின்னர் கலைந்து திரும்பி நோக்கி “இவரைப்பற்றி என்ன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69234

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 77

பகுதி பதினைந்து : அன்னைவிழி – 6 சரஸ்வதி ஆலயத்தின் முகப்பில் ரதம் நின்றபோது திரௌபதி திடமான கால்களுடன் இறங்கி வாழ்த்துக்குரல்களும் முரசொலியும் சங்குமுழக்கமும் சூழ சற்று நின்றாள். அவள் ஆடையில் குழலில் எங்கும் சிறு குலைவும் இருக்கவில்லை. வரையாட்டின் அடிபிறழாத நேர்நடை என ரதத்திரைச்சீலை விலக்கி வலப் பாதத்தை படியில் எடுத்துவைத்து இறங்கிய மாயை எண்ணிக்கொண்டாள். அவள் தொடைகள் வலுவிழந்து நடுங்கிக்கொண்டிருந்தன. இறங்கியபின் ஒருகையால் ரதத்தூணைப்பற்றிக்கொண்டு சமநிலையை மீட்டு சேவகர் நீட்டிய தாலத்தை பெற்றுக்கொண்டு திரௌபதிக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69201

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 76

பகுதி பதினைந்து : அன்னைவிழி – 5 லட்சுமிதேவியின் ஆலயத்தின் படிகளில் ஏறி உள்ளே நுழைகையில் திரௌபதி மெல்ல ஒரே ஒரு அடி எடுத்துவைத்தாள். அவள் அணிகள் அசைந்த ஒலியில் உருவான மாறுதலை உணர்ந்த அணுக்கச்சேடியான மாயை மெல்ல தன் விரைவைக் குறைத்து அவள் குரல் கேட்கும் அண்மைக்கு வந்து செவியை மட்டும் அவளை நோக்கி திருப்பினாள். திரௌபதி மெல்லியகுரலில் “உள்ளே வருகிறாரா?” என்றாள். மாயை கூந்தலை சரிசெய்தபடி தலைதிருப்பி விழியோட்டித் திரும்பி இதழ்களை மட்டும் அசைத்து “இல்லை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69171

மாயை

அன்புள்ள ஜெமோ நீலம் வாசித்துமுடித்த மீட்டல் மனசுக்குள் இருந்துகொண்டே இருந்தது. ஏற்கனவே முதற்கனல், மழைப்பாடல் வண்ணக்கடல் எல்லாம் வாசித்தபோது எழுதவேண்டும் என்று நினைப்பதுண்டு. ஆனால் என்ன எழுதுவது என்று ஒரு தயக்கம். ஏனெறால் என்னால் அதிகமாக எழுதமுடியாது. நான் நினைப்பதை தப்பாகத்தான் சொல்லமுடியும். என் எழுத்தை வாசித்தால் அது அமெச்சூர்த்தனமாக இருக்கும் என்று நினைப்பேன். ஆங்கிலத்தில் ஒருமாதிரியான ஆபீஸ்நடை எழுதமுடியும். மற்றபடி எனக்கும் தமிழுக்கும் சம்பந்தமே இல்லை. நான் வளர்ந்தது பிலாயில். தமிழே படிக்கவில்லை. எழுத்துக்கூட்டி கல்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62838

கனவுபூமியும் கால்தளையும்

சம்சாரத்தைப்பற்றிய ஏராளமான இந்திய, ஜப்பானிய கதைகளில் ஒன்றில் நாரதர் மாயை என்றால் என்ன என்று பெருமாளிடம் கேட்கிறார். பெருமாள் ஒரு வீட்டைக்காட்டி அங்கே சென்று ஒரு செம்பு தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு வா என்கிறார். தண்ணீர் கொண்டுவருபவள் ஒரு பேரழகி. நாரதர் அவளிடம் காதல்வயப்பட்டு, அவள் குடும்பத்தினரிடம் போராடி திருமணம் செய்துகொண்டு, குழந்தைகள் பெற்றுக்கொண்டு, அவர்களை வளர்த்து ஆளாக்கி திருமணம்செய்து வைத்து, பேரன் பேத்திகள் எடுத்து வாழ்ந்துகொண்டிருக்கும்போது பெருமாள் திரும்பி வரும்படி அழைக்கிறார். ‘இதோ என் கொள்ளுப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21056

அருகர்களின் பாதை 29 – ஜாலார்பதான்

நேற்று மாலையில் நான்குமணிக்கெல்லாம் ஜாலார்பதான் நகரை வந்தடைந்துவிடலாமென்றுதான் திட்டமிட்டிருந்தோம். சவாய் மாதோப்பூரில் இருந்து ஜாலார்பதான் இருநூற்றைம்பது கிமீ தூரம். அதிகம்போனால் ஐந்து மணிநேரம். ஆனால் நாங்கள் ஏழுமணிநேரம் பயணம்செய்ய நேர்ந்தது. இருட்ட ஆரம்பித்தபின்னர்தான் ஜாலார்பதான் ஊருக்குள் நுழைந்தோம். வழியில் கோட்டா நகரைத் தாண்டினோம். ராஜஸ்தானின் இப்பகுதி வளமானது. சம்பல் ஆறு, இரு கரையும் நிரம்ப நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. பிரம்மாண்டமான இரு கால்வாய்கள் விளிம்பு தொட்டு நீலநீர் ஓட விரைந்து சுழித்துச் சென்றன. இறங்கிக் குளிக்க முத்துக்கிருஷ்ணன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/24947

» Newer posts