Tag Archive: மாயாபஜார்

மடிக்கணினி

சென்னைக்குச் செல்லும் ரயிலில் ஓர் இளம்பெண் சிறிய மடிக்கணினியைத் திறந்து வைத்துக்கொண்டு என் எதிரில் அமர்ந்திருந்தாள். நான் தூங்கும்வரை அடிக்கடி அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். வேறு உலக நினைப்பே இல்லை. மெல்லியகுரலில் பேசிக்கொண்டே இருந்தாள். காதலின் ஒரு கோடி முகபாவனைகள். நாணம், சிரிப்பு, செல்லக்கோபம், போலி அலட்சியம்…அவளுடன் அந்த மடிக்கணினிவழியாக எங்கிருந்தோ ஒரு காதலன் பேசிக்கொண்டிருந்தான். இரவு முழுக்க… தூங்கும்போது திடீரென்று அம்மாவுடன் சென்று பார்த்த படம் ஒன்று நினைவுக்கு வந்தது. அதிலுள்ள கண்டசாலாவின்பாட்டு எனக்குப் பிடித்தமானது. ‘நீதானே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23820/