Tag Archive: மாபெரும்பயணம்

மாபெரும் பயணம்

பொள்ளாச்சி தேசிய நெடும் பாதையருகே ஒரு பழைய லாட்ஜில் தங்கியிருந்தான். கீழே பலசரக்கு மணம் வீசிய கடைகள் மூடிவிட்டாலும் ஒரு லாரிப்பட்டறை தூங்காமல் விழித்து தட் தட் தடால் என்று ஓசையிட்டுக் கொண்டிருந்தது. கொசுக்கடியும் உண்டு .தூக்கம் வராமல் பிசுக்கு படிந்த மெத்தை மீது படுத்து என்னவோ யோசித்துக் கொண்டிருந்தான். தூக்கம் வராத ந்டு இரவுகளில் சிந்தனைகள் மிகவும் பயமுறுத்துகின்றன .வழக்கமாக நாம் தூங்கிய பிறகு உடலில் இருந்து கிளம்பி இரவில் உலாவும் நாமறியாத ஏதோ பேய் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22604

பலிகளின் பயணம் -கடிதம்

அன்புள்ள ஜெ, ‘மாபெரும்பயணம்’ மறுபடியும் படித்தேன். எருமைகள் பகல் சாயத்தான் சென்றுசேர முடியும். அவற்றின் காலம் மேலும் அகன்றது . உருளும் பாறைக்கூட்டங்கள் போல அவை பின்னால் ஓலமிடும் வண்டிகளுக்கு வழிவிடாது செல்லும் . பெரிய உருண்டவிழிகளை விழித்து பசுமையை பார்க்கும் . ஆள்கூட்டத்தில் எவருடைய சாயலையாவது கண்டடைந்து ம்றே ? என வினவும் .தண்ணீர்கண்டால் முட்டி மோதி சென்று படுத்துக் கொள்ளும்.அசைபோட்டுக் கொண்டு யோக மோனத்தில் ஆழ்ந்துவிடும். வாழ்க்கை பற்றி துயரத்துடன் ஆழ்ந்து சிந்தித்து பெருமூச்சுவிடும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22667