குறிச்சொற்கள் மாத்ரி
குறிச்சொல்: மாத்ரி
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 69
பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 4
அவை நிறைவுற்று ஜராசந்தர் அரண்மனைக்குத் திரும்பியபின் நெருப்பு எரியும் உடலுடன் மகளிர் மாளிகையில் அரசியின் மஞ்சத்தறைக்குச் சென்று அங்கே அணி களைந்துகொண்டிருந்த மிலிந்தையிடம் பிருஹத்சேனர்...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 67
பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 2
திருஷ்டத்யும்னனை அரசவைக்கு அழைத்துச் செல்வதற்காக சாத்யகி தன் தேரில் அவன் மாளிகை முற்றத்துக்கு வந்திருந்தான். அவன் தேர் ஒலி கேட்டதும் திருஷ்டத்யும்னன் அணியாடையுடன் மாளிகை...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 90
பகுதி பதினெட்டு : மழைவேதம்
முதல்கதிர் எழுவதற்கு நெடுநேரம் முன்னரே மகாவைதிகரான காஸ்யபர் தன் ஏழு மாணவர்களுடன் சதசிருங்கத்துக்கு வந்துசேர்ந்தார். அவரது வருகையை முதலில் வழிகாட்டி வந்த சேவகன் சங்கு ஊதி அறிவித்ததுமே...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 89
பகுதி பதினெட்டு : மழைவேதம்
மாலை இருளத்தொடங்கியபின்னர்தான் குந்தி மைந்தர்கள் முற்றத்தில் தனித்து விளையாடிக் கொண்டிருப்பதை அகத்தில் வாங்கினாள். அனகையிடம் "அரசர் எங்கே?" என்றாள். "இதோ வந்துவிடுகிறோம் என்று சொல்லி சென்றார்கள்" என்றாள்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 88
பகுதி பதினேழு : புதியகாடு
இருக்குமிடத்தை முழுமையாக நிறைக்க குழந்தைகளால் மட்டும் எப்படி முடிகிறது என்று மாத்ரி வியப்புடன் எண்ணிக்கொண்டாள். ஐந்து மைந்தர்களும் இணைந்து சதசிருங்கத்தின் ஹம்ஸகூடத் தவச்சோலையை முற்றிலுமாக நிறைத்துவிட்டனர். அவர்களன்றி அங்கே...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 87
பகுதி பதினேழு : புதியகாடு
மீண்டும் சதசிருங்கத்திற்கு திரும்பும்போது மாத்ரி கருநிறைந்திருந்தாள். குந்தியின் கைககளைப்பிடித்தபடி பீமன் நடந்து வந்தான். மூன்று வயதே ஆகியிருந்தாலும் அவன் குந்தியின் இடையளவுக்கு வளர்ந்திருந்தான். ஏழுமாதத்திலேயே அவன் எழுந்து நடக்கவும்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 86
பகுதி பதினேழு : புதியகாடு
புஷ்பவதியின் சமவெளிக்கு பர்ஜன்யபதம் என்று பெயர் இருந்தது. பனிமலைகளில் இருந்து மழை இறங்கி கீழே செல்லும் வழி அது. ஃபால்குன மாதம் முதல்மழை தொடங்கும் காலம். ஐந்தே நாட்களில்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 85
பகுதி பதினேழு : புதியகாடு
சதசிருங்கம் நெருப்பில் மறைந்தபின்னர் அன்றிரவு முனிவர்கள் மலைச்சரிவில் கூடி அமர்ந்து எங்குசெல்வதென்று விவாதித்தனர். மலையிறங்கி கீழ்க்காடுகளுக்குச் செல்வதே சிறந்தது என்றுதான் பெரும்பாலானவர்கள் சொன்னார்கள். மூன்று கௌதமர்களும் கீழக்காட்டின் வெப்பம்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 84
பகுதி பதினேழு : புதிய காடு
குந்திதான் முதலில் பார்த்தாள். கீழே மலையடிவாரத்தில் சிறிய வெண்ணிறக் காளான் ஒன்று பூத்துநிற்பதுபோல புகை தெரிந்தது. "அது புகைதானே?" என்று அவள் மாத்ரியிடம் கேட்டாள். "புகைபோலத்தெரியவில்லை அக்கா....
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 83
பகுதி பதினேழு : புதிய காடு
சில நாட்கள் பாண்டு எங்கிருக்கிறோம் என்றறியாதவன் போலிருந்தான். தோளில் விழிமலர்ந்து அமர்ந்திருந்த தருமனுடன் காட்டுக்குள் அலைந்தான். காட்டுமரநிழலில் படுத்துக்கிடக்கும் மைந்தனையும் தந்தையையும் அனகையும் சேடிப்பெண்களும் மீண்டும் மீண்டும்...